youtube vlogger ஆகணுமா இதை பாருங்க-start youtube channel

உங்களிடம் இருக்கும் எந்ததிறமையையும் வெளிக்காட்டுவதற்கு  youtube ஒரு மிகச்சிறந்த ஊடகம்.பொழுதுபோக்காக நீங்கள் செய்துகொண்டிருக்கும்விடயங்களை வைத்துக்கூட உங்களால் பணத்தைசம்பாதித்துக்கொள்ளமுடியும்.அதிலும் முக்கியமானவிடயம் youtube முற்றிலும் இலவசமாக இந்தசேவையை வழங்குகின்றது.செய்யவேண்டியது எல்லாம் ஒன்றுத்தான் உங்கள் திறமைகளை அல்லது உங்கள் பொழுதுபோக்கை வீடியோ எடுத்து எடிட்செய்து youtube இல் அப்லோட்செய்தால் போதுமானது ஆனால் உண்மை இதுவல்ல சும்மா தோமே என்று அப்லோட்செய்துவிட்டால்மட்டும்போதாது.

Title,Description,tags,hash tags,Thumb nail,No copyright contents,watching hours,copyright strike என்று ஏகப்பட்டவிடயங்கள் இருக்கின்றன,உண்மையில் இவற்றை முழுமையாகத்தெரிந்துகொள்வதற்கே சிலமாதங்கள்கூட ஆகலாம்,ஆனால் இவற்றை இலவசமாகக்கற்பிக்க youtube இல் பல channel கள் இருக்கின்றன.அவற்றை subscribe செய்து அவர்களது காணொளிகளை தொடர்ந்து பார்வையிட்டுக்கொண்டே  நாம் எமது youtube  பயணத்தைத்தொடரமுடியும்.



அடுத்தவிடயம் youtube  இல் மிகமுக்கியமாகதேவைப்படும் முதலாவது விடயம் பொறுமை, நாம் ஒரே நாளில் 100 வீடியோக்கள் போட்டாலும் subscribe இன் அளவோ அல்லது watching hours ஓ கூடப்போவதில்லை.youtube அதற்கே உரிய algorithm இல்தான் இயங்கும்.எப்போது உங்கள் வீடியோக்கள் trend ஆகும் என்று யாராலும்  நிச்சயமாக எதிர்வுகூறமுடியாது.சிலவேளைகளில் நீங்கள் அப்லோட் செய்யும் முதலாவது வீடியோகூட 1 மில்லியன் வியூவேர்ஸை தாண்டலாம் ஆகவே முக்கியமாக தேவைப்படும் விடயம் பொறுமை,முயற்சி.


youtube  channel களில் பல verity கள் இருக்கின்றன,cooking,exercise,gym,facts,news,movies review etc.இவற்றுள் ஒன்றுதான் vlog,இதைசெய்வதற்கு உங்களுக்கு அடிப்படையாகத்தேவையான ஒரு உபகரணம் camera ஆனால் உங்களுக்கு professional camera கூடத்தேவையில்லை உங்கள் கைகளில் இருக்கும் mobile phone camera கூட ஆரம்பத்தில் போதுமானதுதான்.செய்யவேண்டியதெல்லாம் உங்களிடம் இருக்கும் mobile போனில் நீங்கள் செல்லும் இடங்களை அல்லது நீங்கள் செய்யும் ஏதாவதுசெயலை வீடியோ எடுத்து எடிட்செய்து அப்லோட்செய்தால் போதுமானது.


உங்களிடம் ஓரளவுக்கு பணம் இருந்தால் அடுத்ததாக நீங்கள் ஒரு action cameraவை வாங்கிக்கொள்ளலாம்.நீங்கள் கடலில் போர்ட்டில் பயணம்செய்யும்போது,அல்லது மலையில் ஏறும்போது அல்லது நீச்சலடிக்கும்போது உங்கள் mobile phone ஐப்பயன்படுத்தமுடியாது அப்படி பயன்படுத்துவதாயின் flag ship போன்களையே பயன்படுத்தமுடியும் அதோடு அவை இப்படியானவற்றிற்காக உருவாக்கப்படவில்லை.ஆகவே இப்படியான சாகசவிளாய்யாட்டுக்களுக்காகவென்றே உருவாக்கப்பட்ட action camera களை நீங்கள் பயன்படுத்தினால் உங்களுக்கும் இலகுவாக இருக்கும் அதோடு கீழே விழுந்தால் அவளவு இலகுவில் உடைந்துவிடாதவகையிலும் கையிற்குமிகவும் அடக்கமாகவும் இவை உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இப்படியான action camera களை குறைந்த பட்ஜெட் விலையில் இருந்து நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகின்றேன்.

1) 4K action camera 

3500 ரூபாயில் இருந்து 15 000 ரூபா வரையில் இந்த action cameraவை இலங்கையில் நீங்கள் வாங்கிக்கொள்ளமுடியும்.ஆனால்  quality ஆன பொருட்களை வாங்குவதற்கு சரியான விற்பனையாளர்களை அணுகுவது அவசியம்.இலங்கையின் கமெராவிற்பனையில் மிகப்பிரபலமாக திகழும் வெப்சைட்களான camera.lk,camera pro.lk இற்கு சென்று விலைகளை நீங்கள் அவதானித்தால் உண்மையான விலையைத்தெரிந்துகொள்ளலாம் அதோடு இப்படியான கடைகளில் நீங்கள் வாங்குவதால் ஏதாவது பழுது இருப்பின் திருத்துவதற்கோ அல்லது replacement செய்வதற்கோ இவர்கள் உதவுவார்கள்.விரும்பினால் amazon இலும் நீங்கள் order செய்துகொள்ளலாம்

 


2) Xiaomi Mijia 4k

பட்ஜெட்டில் அடுத்த வரிசையில் இருப்பது இந்தக்கமெராதான்.4k quality யில் வீடியோ எடுக்கக்கூடிய இந்த கமெராவின் விலை இலங்கையில் 30 000 ரூபாய்கள்.இந்தக்கமெரா நீரினால் பாதிப்படையக்கூடியது இருந்தாலும் waterproof case ஐப்பயன்படுத்துவதன் மூலம் கடல் நீரில் கூட இதைப்பயன்படுத்தமுடியும்.



3) Go pro 

இந்த கமெராவைத்தான்  நானும் பயன்படுத்துகின்றேன்.Action cameraக்களின் உலகின் அரசன் இந்த பிராண்ட்தான்.இதில் 5,6,7,8,9 என வரிசையாக Go pro cameraக்கள் வெளிவந்துள்ளன.இறுதியாக Go pro 9 வெளிவந்திருக்கின்றது.ஏனைய கமெராக்களைவிட இது விலை அதிகம் என்றாலும் video quality,stabilization,battery capacity ,water resistant,durable போன்ற விடயங்கள் இந்தக்கமெராவில்தான்மிக உச்சத்தில் காணப்படுகின்றது.அதோடு கைபிடி அளவில்தான் கமெராவும் இருக்கும் பாரமும் மிகக்குறைவு.ஏனைய ஆக்ஸன் கமெராக்களைப்போலவே இதையும் பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

Go pro 7

இலங்கையில் இதன் விலை 55 000-65 000lkr உண்மையில் இந்த கமெராவே போதுமானது


 

Go pro 8

இலங்கையில் இதன் விலை 75 000-88 000lkr ,Go pro 7ஐ விட video quality,stabilization,battery capacity போன்றவற்றை மேம்படுத்தியிருக்கின்றார்கள்.அதோடு front side இல் சிறிய டிஸ்பிளேயும்இருக்கின்றது.

 


Go pro 9

இலங்கையில் இதன்விலை 98 000-112 000lkr , Go pro 8 ஐ விட video

quality,stabilization,battery capacity போன்றவற்றை மேம்படுத்தியிருக்கின்றார்கள்.அதோடு 5k வீடியோ குவாலிட்டி,front side camera வைக்கூட இதில் பொருத்தியிருக்கின்றார்கள்,battery capacity யும் Go pro 8 ஐவிட அதிகம்,இவற்றினால் இதன் அளவு Go pro 8 ஐவிட சிறுது அதிகம் நிறையும் சற்று அதிகம்.


சரி இதில் ஏதாவது ஒரு action cameraவை விலைகொடுத்து வாங்கினால் போதுமா?என்றால் நிச்சயமாக இல்லை அவற்றுடன் கூடவே சில பொருட்களைவாங்கவேண்டும் அவை என்னென்ன ?வேறு எவற்றை நாம் கவனிக்கவேண்டும்? அடுத்த பதிவில் காணலாம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்