மைக் டைசன் பாக்ஸிங்க் உலகின் தவிர்க்கமுடியாத நபர் பாக்ஸிங்கைப்பற்றி எவர் பேசினாலும் மைக் டைசனைப்பற்றி பேசாமல் இருக்கவேமுடியாது பாக்ஸிங்கில் உச்சியைத்தொட்டாலும் இவரது சொந்தவாழ்க்கையில் நடைபெற்ற கசப்பான அனுபவங்களாலும் சர்ச்சைகளாலும் இவர் மேலும் பிரபலமாகியிருந்தார் மீடியாக்களின் பேட்டிகளில் மிக உணர்ச்சிவசப்பட்டு இவர் பேசும் பேச்சுக்கள் உடனேயே ஹெட்லைன்ஸாகிவிடும் ஒருதடவை தன்னோடுபோட்டியிடவேண்டிய பாக்ஸிங்க் வீரரான லினஸ் லூயிஸின் இதயத்தைவெளியே பிய்த்து எடுத்துவிடுவேன் உன் குழந்தைகளை தின்றுவிடுவேன் என பேட்டியளித்து ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கினார் வேறு ஒருதடவை தன்னோடு பாக்ஸிங்க் ரிங்கில் மோதிக்கொண்டிருந்த வீரரான ஹொலி பீல்டின் காதைக்கடித்து துப்பிவிட்டார் இதுவும் போதாதென்று கற்பழிப்பு வழக்கில் சிக்கி 3 ஆண்டுகள் ஜெயில்வாழ்க்கையையும் அனுபவித்தார் இத்தனை நடந்தும் சிறியவயது டைசனைப்பார்த்து அன்றைய பாக்ஸிங்க் உலக ஜாம்பவான்களே பயந்து நடுங்கிக்கொண்டிருந்தார்கள் மற்ற பாக்ஸிங்க் வீரர்களைப்போல் மணித்தியாலக்கணக்காக பைட் செய்துகொண்டிருக்கமாட்டார் டைசன் ,ரிங்கிற்குள் இறங்கி சில செக்கண்ட்களிலேயே எதிராளிமீது சரமாரியாக குத்துக்கள் மழையாக பொழிய அவர் மயங்கிவீழ்ந்துவிடுவார் பாக்ஸிங்க் வீரர்கள் பலர் மைக்டைசனுடன் மோதும்வரை யாராலும் தோற்கடிக்கப்படமுடியாதவர்களாகவே இருந்தார்கள் இப்படியான ஒரு மிகப்பெரும் பாக்ஸிங்க் கடவுளின் குழந்தைப்பருவம் மிக மோசமானதாகவே இருந்தது
டைசன் 1966 ஜூன் 30 இல் நியூயார்க்கின் புரூக்லின் என்ற நகரத்தில் பிறந்தார்
குடும்பத்தில் 3 வது மகன்தான் இவர் தாயின் பெயர் லோர்னா சிமித் தந்தையின் பெயர் ஜிம்மி கிக்பிரிக்
இவர் பிறந்து சில மாதங்களிலேயே இவரது தந்தை குடும்பத்தை அனாதரவாக விட்டுவிட்டு வேறு நாட்டுக்கு சென்றுவிட்டார் இதனால் இவரது தாயார்தான் 3 பிள்ளைகளையும் தனி ஆளாகவளர்க்கவேண்டிய நிலை ஏற்பட்டது
வறுமையில் அவரது குடும்பம் மிகவும் துன்பப்பட்டது அதோடு இவர் வாழ்ந்த புரூக்லின் நகரம் குற்றச்செயல்களுக்கு மிகவும் பெயர்போன நகரம் இதனால் சிறியவயதாக இருக்கும்போதோ தெருச்சண்டை வழிப்பறி என பலதை நேரில் பார்க்கவேண்டிய நிலை டைசனுக்கு ஏற்பட்டது வயது ஆக ஆக அவற்றில் இவர் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டார் ஒரு நாள் முழுவதும் கூலிவேலைசெய்து உழைத்த காசை வீடுகொண்டுவருவதற்கு தெருச்சண்டையிட்டுவென்றால்தான் முடியும் என்ற நிலை இதனால் பல தடவைகள் இவரை விட வயது கூடியவர்களுடன் மோதி கேவலமாக தோற்று அழுத டைசன் நாளாக நாளாக யாரும் நெருங்கமுடியாத சண்டியராக மாறிக்கொண்டிருந்தார் 8 வயதிருக்கும்போது வீடுகளில் திருடவும் பிக்பாக்கெட்டிற்கும் ஒரு காங்கை உருவாக்கி அதற்கு இவரே தலைவராகவும் இருந்தார் இதனால் பலருடன் தெருச்சண்டைகளில் ஈடுபடவேண்டியேற்பட்டது
இது வளர்ந்துகொண்டே சென்றபோது போதைப்பொருளுக்கும் அடிமையானார் 11 வயதாக இருக்கும்போது கொக்கேயின் போதைப்பொருளை வைத்திருந்தமைக்காம டைசன் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார் 11 வயதிற்குள் சுமார் 38 தடவைகள் டைசன் கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்
கைதுசெய்யப்பட்டு ரைரோன் ஸ்கூல் என்ற சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டார் டைசன்
அங்கு சிறுவர்களுக்கான பாக்ஸிங்கில் டைசனின் திறமையைப்பார்த்து வியந்த ஸ்கூல் கவுன்சிலர் பொபி ஸ்டூவெற்ட் டைசனை பாக்ஸிங்கின் மிகப்பிரபல் கோச்சாக இருந்த டி அமட்டோவிடம் அழைத்துச்சென்றார் அங்குதான் டைசனின் வரலாறு வேறுவிதமாக மாற ஆரம்பித்தது
தறிகெட்டுப்போயிருந்த டைசனிற்கு ஒரு வளர்ப்புத்தந்தையாகவே மாறியிருந்தார் அமட்டோ யாருக்கும் அடங்காத டைசன் அமட்டோவிடம் பெட்டிப்பாம்பாக அடங்கினார் டைசனின் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டிருந்த அதே நேரத்தில் டைசனின் உள்ளே ஒளிந்துகொண்டிருந்த பாக்ஸிங்க் திறமையைவெளியே கொண்டுவந்தார் அமட்டோ டைசனின் பாக்ஸிங்க் திறமை கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூவமெடுத்துக்கொண்டிருந்தது
அமட்டோவின் வழிகாட்டலில் 1981,82களில் ஜூனியர் பாக்ஸிங்க் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 2 தடவைகள் தங்கப்பதக்கத்தை வென்றார் டைசன்
இவ்வாறு சென்றுகொண்டிருந்த டைசனின் வாழ்க்கையில் 1984 அன்று பெரும்தாக்குதல் ஒன்று நடைபெற்றுமுடிந்தது தனது திறமையை வெளிக்கொண்டுவந்த பயிற்சியாளராகவும் தன் தந்தையாராகவும் இருந்த அமட்டோ அந்தவருடம் எதிர்பாராதவிதமாக மரணமடைந்துவிட்டார்
ஆரம்பத்தில் டைசன் இதனால் எனக்கு அவளவுபெரிய கவலை ஏதுமில்லை என்று கூறினார் பின்னர் மிகவும் வருந்தி என் தந்தையை இழந்துவிட்டேன் என கூறிகவலைப்பட்டுக்கொண்டார்



0 கருத்துகள்