Nilavaraiwell jaffna/180 அடி ஆழமான கிணற்றில் மாட்டுவண்டில்?


Nilavarai well jaffna/கிணற்றின் அடியில் குகைகளா?180 அடியில் மாட்டுவண்டில்/ நிலாவரை

புத்தூர் என்ற கிராமத்தில் அமைன்திருக்கும் ஆழமே அறியப்படாத கிணறு என்று உலகப்புகழ்பெற்ற கிணறுதான் நிலாவரைக்கிணறு ஆனால் இந்தப்பெருமை 2016 ஏப்ரல்வரைமட்டுமே தொடர்ந்தது காரணம் அந்த நாளில்தான் இலங்கை நேவிப்படையினரின் சுழியோடிகள் ரோபோட்களின் உதவியுடன் இந்த ஆழமறியாக்கிணற்றின் ஆழத்தை அளந்தார்கள்.ஒரளவு தூரத்திற்கு அப்பால் இந்தக்கிணற்றின் ஆழத்துக்கு அவர்களால் செல்லமுடியவில்லை எனவே அந்தப்பணியை ரோபோ எடுத்துக்கொண்டது.

நிலாவரைக்கிணறு என்றதும் எமக்கு நினைவுக்கு வருவதெல்லாம் எலுமிச்சம்பழம்தான் நாம் சிறுவர்களாக இருக்கும்போது ஒரு கதைகேள்விப்பட்டிருப்போம் நிலாவரைக்கிணற்றில் எலுமிச்சம்பளம் ஒன்றைப்போட்டால் அது கீரிமலையில் மிதக்கும் என்பதுதான் அது ஆனால் இவையெல்லாம் உண்மையா என்றுகேட்டால் சாத்தியம் இருக்கின்றது என்பதுதான் பதில்.1987 இல் இந்தக்கிணறை ஆராய்ச்சிசெய்ய இங்கிலாந்தில் இருந்து வெள்ளையர்கள் வருகைதந்திருக்கின்றார்கள்.அவர்கள் இரும்புச்சங்கிலி மற்றும் தூக்குக்குண்டின் உதவியுடன் ஆழத்தை அளப்பதற்கு பெருமுயற்சி செய்தார்கள் ஆனாலும் ஆழத்தை அவர்களால் அறியமுடியவில்லை எனவே ஓரளவு ஆழத்திற்கு அப்பால் ஒரு இரும்பு வலை ஒன்றை அமைத்துவிட்டு இதற்கு மேல் செல்லவேண்டாம் சென்றால் ஆபத்து என்று கூறிவிட்டு சென்றார்களாம் இந்தக்கதையெல்லாம் அங்கிருக்கும் ஒரு தமிழர் கூறியவை.

இவ்வாறான பிரபலமான கதைகளால் பலர் இங்குவருவது வழக்கம் விரைவில் இந்தப்பிரதேசம் சுற்றுலாமையமாகவும் மாறிவிட்டது ஆனால் கவலைதரும் இன்னொருவிடயம் என்னவென்றால் இது ஒரு சூசைட் பொயிண்டாகவும் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.இதுவரை பலர் இதில் குதித்து தற்கொலையும்செய்திருக்கின்றார்கள்.


இலங்கை கடற்படையின் சுழியோடிகள், ரோபோக்களின் உதவியுடன் நிலாவரைக் கிணற்றின் ஆழத்தை அறிய நவீன பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றியவாறு கிணற்றுக்குள் இறங்கினார்கள்.   

கிணற்றுக்குள் 55.5 மீற்றர் (182 அடி)​ சென்றபோது, கீழ்மட்டம் தென்பட்டது. நன்றாக வளர்ந்த பனை அல்லது தென்னை மரம் சராசரியாக 90 அடி உயரம் வரை காணப்படும்.  சராசியாக இரண்டு பனை அல்லது தென்னை மரங்களின் உயரம் கொண்டதாக இந்தக் கிணற்றின் ஆழம் காணப்படுகின்றது.   

கிணற்றின் அடிப்பாகத்தில் மூன்று மாட்டு வண்டிகள் காணப்படுகின்றன என்பது சுழியோடிகள் கொண்டுசென்று ரோபோக்கள் எடுத்த படங்களின் மூலம் தெரியவந்தது. ஒரு வண்டில் முற்றாகச் சிதைவடைந்த நிலையிலும் மற்றையவை மாட்டு வண்டிகள் என உருவத்தை அடையாளம் காணக்கூடியவாறும்  காணப்படுகிறது. 





மாட்டுவண்டிகாள் எவ்வாறு கிணற்றின் அடியை அடைந்தது என்பதற்கு யாராலும் தெளிவான விளக்கத்தைக்முடியவில்லை ஆனால் அந்தப்பிரதேசத்தை சேர்ந்தவர்களிடம் கேட்டபோது மாடுவண்டில்சவாரியில் தோற்றவண்டிகளை மாடுகளுடன் உள்ளே இறக்கிவிடுவார்களாம் அவ்வாறு இறக்கப்பட்ட வண்டில்கள்தான் இவை எனக்கூறுகின்றார்கள் அவர்கள்.




இந்த நிலாவரைக்கிணறு உண்மையில் ஒரு தீர்த்தக்கிணறாகத்தான் பயன்படுத்தப்பட்டுவந்திருக்கின்றது.போத்துக்கேயர் ஆட்சியின்போது அவர்கள் இலங்கையின் புராதன சைவத்திருத்தலங்கள் பலவற்றை அழித்திருக்கின்றார்காள்.அவ்வாறு அழிக்கப்பட்ட சைவத்திருத்தலங்களில் ஒன்றுதான்  நவசைலேஷ்வரமாகும் இது ஒரு சிவன்கோவிலாக இருந்திருக்கின்றது.இன்று நிலாவரை கிணற்றிற்கு அருகாமையில் காணப்படும் சிவன் கோவில் இருந்த அதே இடத்தில்தான் ஆரம்பத்தில் நவசைலெஷ்வரம் இருந்ததாகவும் போத்துக்கேயரால் இடிக்கப்பட்டபின்னர் 1948இல்தான் இப்போது காணப்படும் ஆலயம் மீண்டும் கட்டப்படதாகவும் கூறப்படுகின்றது.இப்போது இந்த ஆலயத்தின் உள்ளே காணப்படும் கிணற்றினுள் கண்டெடுக்கப்பட சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்துதான் இப்போதுள்ள ஆலயம் மக்களால் வழிபடப்பட்டுவருகின்றது.



நிலாவரைக்கிணறு தொடர்பான கர்ணபரம்பரைக்கதை ஒன்றும் இருக்கின்றது.ராமாயணத்தின் கதா நாயகனான ராமன் தன் மனைவி சீதையை மீட்கும்பொருட்டு இலங்கைக்கு வருகின்றார்,மிகப்பெரும் வானரப்படையுடன் இலங்கையில் தரையிறங்கிய இராமர் தனது படைகளின் தண்ணீர் தேவையை நிறைவுசெய்வதற்காக தன் வில்லால் நிலத்தில் துளையிட்டபோதுதான் இந்த நிலாவரை கிணறு தோண்றியதாக மக்கள் நம்புகின்றார்கள்.




நிலாவரை மாத்திரமன்றி இன்னும் இதுபோன்ற வற்றாத கிணறுகள் பல குடாநாட்டில் காணப்படுகின்றன. குரும்பசிட்டி பேய்க் கிணறு, புன்னாலைக்கட்டுவன் குளக்கிணறு, அல்வாய் மாயக்கை குளம், கரவெட்டி குளக்கிணறு, ஊரணி வற்றாக்கிணறு, கீரிமலைக்கேணி, நல்லூர் யமுனா ஏரி, மானிப்பாய் இடிகுண்டு, ஊரெழுவில் பொக்கணை  என்பன அவற்றுள் குறிப்பிடத்தக்கவை


கிணறுகள் பற்றிப் புவியியலாளர்கள் சொல்லும் விளக்கம் இதுதான். யாழ்க் குடாநாடு மயோசீன் காலச் சுண்ணக் கற்களாலானது. நீரைக் கசியவிடும் தன்மை இக்கற்களுக்கு உண்டு. மழைநீர் உட்கசிந்து வன்மையான பாறைகளில் தரைக்கீழ் நீராக இருக்கின்றது. மழைநீர் வளியூடாகப் பெய்யும்போது வளியில் உள்ள காபனீரொட்சைட்டுடன் கலக்கின்றது. அதனால் அம்மழைநீர் காபோனிக்கமிலமாக மாறுகின்றது.


சுண்ணக் கற்களில் உள்ள கல்சியம் காபனேற்றும் காபோனிக்கமிலமும் சேர்ந்துகொள்வதால் கல் கரையும் வாய்ப்பைப் பெறுகின்றது. இதன் காரணமாகச் சுண்ணக் கற்பாறைகளைக் கரைத்து நீர் உட்செல்கின்றது. பாறைகள் கரையும் போது பெரிய பள்ளங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் பெருமளவு நீர் தேங்கி நிற்க அவையே வற்றாக் கிணறுகள் ஆகின்றன.

மயோசின் காலத்தில் இந்தப்பிரதேசம் மலைப்பிரதேசமாக இருந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றார்கள் இதற்கு ஆதாரமாக இந்தக்கிராமத்தை சுற்றியிருக்கும் ஊர்களின் பெயர்களையே குறிப்பிடலாம்

கீரிமலை,நவக்கிரி-நவ என்றால் ஒன்பது கிரி என்றால் மலை,அருகில் இருந்த ஆலயத்தின் பெயர் நவசைலேஷ்வரம்-சைலம் என்றால் மலை



லாவரை நன்னீர் வளத்தை குடாநாட்டின் குடிநீர்த் தேவைக்காகவும் விவசாயத் தேவைகளுக்காகவும் பயன்படுத்தும் முயற்சிகள் காலங்காலமாக முன்னெடுக்கப்பட்டன. கிணற்றின் தெற்குப் புறமாக உள்ள சிறுப்பிட்டி மற்றும் மேற்குப் புறமாக உள்ள அச்செழு, ஈவினைக் கிராம விவசாயிகள் இக்கிணற்றில் இருந்து நன்னீர் வளத்தைப் பெற்று விவசாய முயற்சியில் ஈடுபட்டனர்.



இப்பிரதேசங்களில் இந்நீரை ஆதாரமாகக் கொண்டு வாழை, நெற் பயிர்ச் செய்கைகள் சிறப்பாக இடம்பெற்றன. 1990 கள் வரை இவ்வாறான நீர்ப்பாசனங்கள் இடம்பெற்றுள்ளன. 1950 களின் பின் டீசல் இயந்திரங்கள் மூலமும் மின்சாரம் மூலமும் நீரை இறைத்தனர். இங்கு நீர் விநியோகம் இடம்பெற்றமைக்கான சுவடுகள் இன்றும் உள்ளன.



கருத்துரையிடுக

0 கருத்துகள்