இது தெரியாமல் வைத்தியசாலைக்கு சென்றுவிடாதீர்கள்-01

அண்மையில் இலங்கை மக்களை குறிப்பாக இலங்கையின் வடபகுதி மக்களை பீதியில் ஆழ்த்திய விடயம்தான் யாழ் போதனா வைத்தியசாலையில் தவறான மருந்து வழங்கப்பட்ட்தால் ஒரு சிறுமியின் கை அகற்றப்படடமை, உண்மையில் தவறான மருந்துதான் வழங்கப்பட்ட்தா? கனுலா எனப்படும் மருந்தை உடலுக்குள் செலுத்த பயன்படுத்தப்படும் ஊசியை பத்துவருடங்களுக்குமேல் அனுபவம் கொண்ட தாதி தவறாக ஏற்றினாரா? ஓரிரு நாட்களுக்குள் கை அழுகுமா? போதனா வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன் எத்தனை தனியார் வைத்தியசாலைகளுக்கு சிறுமி சென்றிருந்தார்? இப்படி பல கேள்விகள் இருக்கின்றன, ஆனால் இங்கே நான் இந்த சம்பவம் தொடர்பான தர்ம நியாயங்களை விவாவதிக்கப்போவதில்லை, மாறாக எதாவது ஒரு நோய்க்காக நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை விடயங்களைப்பற்றியே நான் இங்கே கூறப்போகின்றேன். வைத்தியசாலைக்கு முதல்தடவை அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு நபர் நிச்சயம் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவார் ஏனென்றால் அவரது அன்றாட கடமைகள் வேலைகள் அனைத்துமே தலைகீழாக்கப்பட்டிருக்கும் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள்? என்ன கூறுவார்கள் எங்கே அனுப்புவார்கள்? என்று அனுமதிக்கப்பட்டிருக்கும் நபருக்கு சில நிமிடங்களுக்கு முன்பே கூறப்படும். இதை நான் ஒரு தொடராக எழுதுவதற்கு முயற்சிக்கின்றேன் மருத்துவ உலகில் உங்களுக்கு தெரியவேண்டிய அத்தனை விடயங்களையும் சாமானியனுக்கு விளங்கும் வகையில் விளக்குவதற்கு முயற்சிசெய்க்கின்றேன்.

 

வாருங்கள் மருத்துவ உலகிற்குள் நுழைவோம்...........



கனுலா/வென்லோப்  cannula/ venflon நீங்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட்தும் உங்கள் உடலில் ஏற்றப்படும் ஊசி போன்ற ஒரு பொருள்தான் இது இதை உங்கள் உடலினுள்ளே மருந்துக்களையோ இரத்தத்தையோ ஏற்றுவதற்கு பயன்படுத்துவார்கள். இது பல்வேறு நிறங்களிலும் அளவுகளிலும் காணப்படுகின்றது. சாதாரணமக்களிடம் கேட்டால் "கனுலாவை நரம்பில் ஏற்றுவார்கள்" என்றுதான் கூறுவார்கள் அனால் நரம்பு என்பது மூளையில் இருந்து உடலுக்கும் உடலின் பகுதிகளில் இருந்து மூளைக்கும் செய்திகளை கடத்தும் தொழிலை செய்யும் எனவே அதில் கானுலாவை போடமுடியாது. மனித உடலில் நாடி நாளம் என இரு இரத்தக்குழாய்கள் இருக்கின்றன , இதில் நாடி இதயத்தில் இருந்து குருதியை உடலின் பகுதிகளுக்கு கடத்தும் இதில் விரலால் அழுத்தி இதயத்துடிப்பு எண்ணிக்கையை கணக்கிடமுடியும் அடுத்தது நாளம் இது உடலின் பிற பகுதிகளில் இருந்து இதயத்திற்கு குருதியைக்கடத்தும் இந்த நாளத்தில்தான் கனுலா ஏற்றப்படும்  உடலில் எங்கெங்கு இவற்றை ஏற்றமுடியும் பொதுவாக இதை கையில்தான் ஏற்றுவார்கள் ஆனாலும் சிலருக்கு சில நோய் நிலை காரணமாகவோ முதுமை காரணமாகவோ இலகுவில் கானுலாவை ஏற்றமுடியாது எனவே கால்களிலும் இல்லையெனில் கழுத்திலும் கனுலா போடப்படுகின்றது கீழே உள்ள படத்தில் கனுலா போடப்படும் பொதுவான பகுதிகள் காட்டப்பட்டிருக்கின்றது 

 

தாதி ஒருவரே பொதுவாக கானூலாவை போடுவார் முதலில் கனுலா போடவேண்டிய கையில் கயிறு போன்று ஒரு சேலைன் வயரை கட்டுவார்கள் ( tourniquet ) 



இப்படி கட்டும்போதுதான் நாளங்கள் புடைத்து தோலின் வெளியே தெரியும் இலகுவாக காணூலாவை போடமுடியும்அப்படியும் சிலரது தொழில் நாளத்தை பார்க்க முடியாது இப்படியான சந்தர்ப்பங்களில் விரலாலோ கையாலோ கனுலா போடவேண்டிய பகுதியின் மேல் தட்டுவார்கள் இப்படி தட்டும்போது நாளம் புடைத்து வெளியே தெரியும் 

 


ஒருவேளை என்ன செய்தும் உங்களுக்கு கானுலாவை போட முடியவில்லை என்று வைத்துக்கொள்வோம் உள்ளே இருக்கும் நாளத்தை கண்டுபிடிப்பதற்காக இன்பிரா லைட் ஸ்கானர் வைத்த்து கண்டுபிடிக்கமுடியும் அதுவும் இல்லையென்றால் Ultra சவுண்ட் ஸ்கானரை வைத்த்துத்தான் கண்டுபிடிப்பார்கள்.

கனுலாவை போடும்போது கானுலாவை தோலுடன் சேர்த்து ஓட்டும் பிளாஸ்டரில் ஒரு திகதியை எழுதிவிடுவார்கள். எந்த நாளில் கனுலா போடப்படடதோ அந்த திகதியை எழுதுவார்கள் அல்லது எந்த திகதியில் கானுலாவை கழற்ற வேண்டுமோ அந்த திகதியை எழுத்திவிடுவார்கள் இந்த முறை வைத்தியசாலைக்கு வைத்தியசாலை வேறுபடலாம் எப்படி இருந்தாலும் கனுலா போடப்பட்டு மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் கானுலாவை கழற்றி விடவேண்டும்.

 


கனுலாவின் பகுதிகள் கீழே உள்ள படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது

 


கனுலா போடப்படடால் நீங்கள் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது? 

கனுலா போடப்படட பகுதியை நனைக்கக்கூடாது அதோடு கானுலாவில் இருக்கும் மூடியை ( luer lock plug ) திறக்க முயறசிக்க கூடாது. புதிதாக போடப்படட கனுலாவின் மூடியை கழற்றினால் இரத்தம் அதிக அளவில் வெளியேறும். நித்திரையில் தவறுதலாக கழன்றால் கூட நோயாளிக்கு தெரியவராது நோயாளி இரத்தப்போக்கால் இறந்துவிடுவார்.

பொதுவாக பயன்பாட்டில் உள்ள கானுலாவின் நிறங்களும் அவற்றின் அளவுகளும் 



பெரியவர்களுக்கு பொதுவாக பச்சை நிற கனுலாவே போடப்படும் , சிறுவர்களுக்கு நீலம் அல்லது பிங்க் நிறத்தையும் குழந்தைகளுக்கு மஞ்சள் அல்லது நீல நிறம் பயன்படுத்தப்படும்.

கனுலா சரியாக போடப்பட்டிருக்கின்றது என்பதை எப்படி அறிந்துகொள்வது?

  •  கனுலாவின் ஊசி தொழில் ஏறும்போது ஏற்படும் வலியைத்தவிர வேறு எந்த வலியையும் நீங்கள் உணரமாட்ட்ர்கள்.
  •  கனுலாவினுள் மருந்து செலுத்தும்போது எந்த வலியும் இருக்காது.
  •  மருந்து ஏற்றும் தாதி, சிரின்சின் மூலம் மருந்த்தேற்றும் பொது மிக இலகுவாக செல்லும், வலிந்து செலுத்த தேவையில்லை.
  • கனுலா போடப்பட்டதும் வெள்ளை மூடியின் அருகில் இரத்தத்தை பார்க்கமுடியும் 

கனுலா நாளத்தின் உள்ளே செல்லவில்லை என்பதை எப்படி அறிந்துகொள்வது?
( கனுலா நாளத்தின் உள்ளே செல்லவில்லை என்பதை கனுலா அவுட்டக்கிவிட்ட்து ( cannula out of vein ) என்று கூறுவார்கள் )
  • கனுலா போடப்படட இடம் வீங்கியிருக்கும்.
  •  கனுலாவில் இருந்து இரத்தம் வராது மருந்தோ சேலைனா எதுவும் உள்ளே செல்லாது.
  •  சிரிஞ்சின் மூலம் மருந்து ஏற்றும்போது மிகுந்த வலியை ஏற்படுத்தும்.
  •  ஏற்றப்படட இடம் மருந்து தோலின் கீழ் சென்று தேங்குவதால் வீங்கும்.





கனுலா சரியாக நாளத்தினுள் செல்லவில்லையாயின் கனுலாவினூடு செலுத்தப்படும் மருந்தோ அல்லது இரத்தமோ சுற்றி இருக்கும் திசுக்களுக்கும் மற்றும் தோலிற்கு கீழாக தேங்கும் இதை Extravasation என்று அழைப்பார்கள்.

அதோடு நாளத்தினுள்ளே இரத்தம் கட்டியாகி நோய்த்தொற்றும் ஏற்படலாம் இதை அதோடு நாளத்தினுள்ளே இரத்தம் கட்டியாகி நோய்த்தொற்றும் ஏற்படலாம் இதை Thrombophlebitis என்று அழைப்பார்கள் என்று அழைப்பார்கள்.  





இது ஏற்பட்டால்  தோலினுள்ளே, இழையங்களினுள்ளே கிருமித்தொற்று ஏற்பட்டு ( cellulitis ) இழைய இறப்பு ஏற்படும், இதனால் பாதிக்கப்படட பகுதியை வெட்டி அகற்றவேண்டியேற்படும் (amputation) இல்லையெனில் அதீத கிருமித்தொற்று (sepsis) காரணமாக இறப்பு ஏற்படலாம்.


நாளத்தினுள்ளே இரத்தம் கட்டியாகி ஏற்படும் நோய்த்தொற்றை அளப்பதற்கு கீழே காட்டப்பட்டிருக்கும் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுகிறது 



பாதிப்புக்கள் .....




வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட்தும் கனுலாவை கழற்றிவிட்டுத்தான் வீடுசெல்லவேண்டும், வார்டு இருக்கும் வேலை நெரிசலில் தாதியர்கள் கழற்றமறந்தாலும் நீங்களாகவே கேட்டு கழற்றிவிடுங்கள். கனுலாவை கழற்றும்ப்போது பஞ்சு ஒன்று தருவார்கள் அதை கனுலா போடப்பட்ட இடத்தில் நன்றாக அழுத்தி குறைந்தது 05 நிமிடங்களாவது வைத்திருக்கவேண்டும் அப்படி செய்தால்தான் இரத்தம் வெளிவருவதை நிறுத்தமுடியும்.

நீங்கள் ஆஸ்பிரின் போன்ற குருதியுறையா மருந்துகள் பாவிப்பவராக இருந்தால் 10 நிமிடங்களுக்குமேல் நன்றாக அழுத்தி வைத்திருக்கவேண்டும்.



தொடரும் ......







கருத்துரையிடுக

0 கருத்துகள்