இந்த நாடுகள்ள விபச்சாரம் லீகலா நடக்கும் prostitution legal countries

 


உலகின் மிக பழமையான தொழில்களில்விபச்சாரமும் ஒன்று விபச்சாரத்திற்கான காரணங்களாக வறுமை குடும்ப சூழ் நிலை என்பவை கூறப்படுகின்றன.பல நாடுகளில் விபச்சாரம் தடைசெய்யப்பட்டிருந்தாலும் சில நாடுகள் விபச்சாரத்தை அனுமதித்திருக்கின்றன.அதோடு விபச்சாரத்திற்காக தனித்துவமான சட்டங்களையும் இயற்றி அதன்படி விபச்சாரத்தை நடாத்துவதாற்கு அனுமதியளித்திருக்கின்றன சில நாடுகள்.உலகம் முழுவதும் விபச்சாரத்தை சட்டபூர்வமாக அனுமதித்த நாடுகள் பற்றித்தான் நாம் இப்போதுபார்க்கப்போகின்றோம்.


நியூசிலாந்து

2003இல் இருந்து நியூஸிலாந்தில் விபச்சாரமான சட்டடீதியாக அங்கீகரிக்கப்பட்ட தொழிலாகமாற்றப்பட்டுள்ளது.இன்நாட்டில் விபச்சாரமானது சுகாதார அமைச்சின் கட்டுப்பாடுகளின் கீழேயே இயங்குகின்றது.


அவுஸ்ரேலியா

மானிலத்திற்கு மானிலம் விபச்சாரம் தொடர்பான சட்டங்கள் வேறுபடுகின்றன.சில மானிலங்களில் விபச்சாரம் அனுமதிக்கப்பட்டாலும் சில மானிலங்களில் சட்டவிரோதமாகும்.


ஒஸ்ரியா

அரசின் முழு அனுமதியுடன் இங்கே விபச்சாரத்தை மேற்கொள்ளமுடியும் ஆனால் சுகாதர அமைச்சிடம் உடல்பரிசோதனை ரிப்போட்களை சமர்ப்பிப்பதோடு மிகக்குறைந்தவயதெல்லை 19 ஆக இருக்கவேண்டும்.


பங்களாதேஸ்

இன் நாட்டில் ஆண்கள் விபச்சாரம் செய்வது சட்டவிரோதமானது ஆனால் பெண்கள் விபச்சாரம் செய்வதை அரசு அனுமதிக்கின்றது.


பெல்ஜியம்

இங்கே மற்றைய நாடுகளைவிட விபச்சாரம் சற்று  நவீனமயப்படுத்தப்பட்டிருக்கின்றது.நீங்கள் கிரிடிட் காட்களை இங்கே பயன்படுத்தமுடியும்.விபச்சாரத்தொழில்செய்பவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்காக கைரேகை பதிவுசெய்யும் கருவிகள் கூட இங்கே பயன்படுத்தப்படுகின்றன.


பிரேசில்

இன் நாட்டில் விபச்சாரம் சட்டவிரோதமான தொழிலல்ல ஆனால் வீதியில் நின்றுகொண்டு வாடிக்கையாளர்களை தேடுவது சட்டவிரோதம்.ஒரு வயது வந்த நபரினால் விபச்சாரத்தில் ஈடுபடமுடியும் ஆனால் யாராலும் தமக்கு கீழ் பாலியல்தொழிலாளிகளைக்கொண்டு விபச்சாரத்தை மேற்கொள்ளமுடியாது இது சட்டவிரோதமானது.



கனடா

இங்கே விபச்சாரத்திற்காக விளம்பரம் செய்வதும் மக்கள்கூடும் பொது இடங்களில் விபச்சாரம் செய்வதும் சட்டவிரோதமானது ஆனால் விபச்சாரத்தை அரசு ஆதரிக்கின்றது


கொலம்பியா

இன் நாடு விபச்சாரத்தை ஆதரித்தாலும் பாலியல் தொழிலாளிகளை வாங்குதல் விற்றல் தடைசெய்யப்பட்டுள்ளது.அதோடு பாலியல்தொழிலாளிகளை கூட்டமாக சேர்த்து விபச்சாரத்தில் ஈடுபடுதல் சட்டவிரோதமானது.




டென்மார்க்

1999இல் இருந்து இன் நாட்டில் விபச்சாரம் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட தொழிலாகும் இருந்தாலும் விபச்சாரத்தை வயதுவந்த தனி ஒருவரால் மேற்கொள்ளமுடியும்.விபச்சாரத்திற்காக பாலியல் தொழிலாளர்களை கூட்டமாக வைத்து தொழில்செய்வது சட்டவிரோதமானது.


எக்குவடோர்

தென்னமெரிக்க நாடான எக்குவடோரில் விபச்சரத்திற்கு அரசு பூரண அனுமதியளித்துள்ளது.ஆனால் ஒருவரை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தமுடியாது.


பிரான்ஸ்

1949 ஆம் ஆண்டில் இருந்து பிரான்ஸில் விபச்சாரம் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட தொழிலாகும் ஆனாலும் பாலியல்தொழிலாளிகளைக்கொண்டு நிறுவனம் அமைத்து விபச்சாரத்தை செய்ய அனுமதியில்லை

ஜெர்மன்

1927 இல் இருந்து விபச்சாரம் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட சட்டரீதியான அரச தொழிலாகும்.இன் நாட்டில் விபச்சாரம் செய்பவர்களுக்கு இன்சூரன்ஸ்,மெடிக்கல் செக்கப்களுடன் ஓய்வூதியமும் வழங்கப்படுகின்றது.விபச்சாரம் செய்பவர்கள் குறித்த ஒரு தொகையை அரசுக்கு வரியாக செலுத்தவேண்டும்

கிரீஸ்


ஜேர்மன் நாட்டைப்போலவே கிரீஸ் நாட்டிலும் விபச்சாரம் சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட தொழிலாகும்.

இந்தோனேசியா

சட்டரீதியாக விபச்சாரத்தை அனுமதித்து எந்த அறிவுறுத்தல்களையும் அரசுவிடுக்காத நிலையிலும் விபச்சாரம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.ஆனால் 18 வயதுக்கு குறைந்தவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுதல் சட்டவிரோதமானது.



 நெதர்லாந்த்





விபச்சாரம் மிக அதிக அளவில் இடம்பெறுகின்றது அதோடு முறையற்ற பல பாலியல்தொழிலாளர்கள் இந்த நாட்டில் விபச்சாரத்தை மேற்கொள்கின்றார்கள்.










கருத்துரையிடுக

0 கருத்துகள்