10 laws that the Empress does not need to follow
அரசகுடும்பம் என்றுவந்துவிட்டாலே அவர்கள் சட்ட ரீதியாக பலசலுகைகளைக்கொண்டிருப்பார்கள்.ஏதோ பண்டைய அரசகாலத்தில் மட்டும்தான் இப்படியான சலுகைகள் என்று நினைத்துவிடாதீர்கள் இப்போதும் இங்கிலாந்து நாட்டின் மகாராணியான எலிசபெத்திற்கும் இவ்வாறான சலுகைகள் உலகம் முழுவதிலுமே இருக்கின்றன.ஆச்சரியமான விடயம் என்னவென்றால் சாதாரணமக்களால் உலகம்முழுவதிலும் பின்பற்றப்படும் சட்டங்களில் பலதை எலிசபெத் மகாராணி பின்பற்றத்தேவையே இல்லை பின்பற்றுவதுமில்லை.அப்படி எலிசபெத் மகாராணியினால் பின்பற்றத்தேவையில்லாத சட்டங்களைத்தான் நாம் இப்போது பார்க்கப்போகின்றோம்.
10)அன்னத்தை உணவாக உண்ணமுடியும்(swan can be eaten as food)
இங்கிலாந்தில் அன்னம் ஒரு பாதுகாக்கப்பட்ட இனமாகும்.பொதுமக்களில் யாராவது அன்னப்பறவையைக்கொன்றால் அரசு அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும்.ஆனால் ராணி எலிசபெத் விரும்பினால் அன்னப்பறவையை எந்த தடையும் இல்லாமல் உண்ணமுடியும்.
09)சாரதி அனுமதிப்பத்திரம்(No driver's license required)
உலகின் எந்த நாடாக இருந்தாலும் வீதியில் வாகனத்தை செலுத்தவேண்டுமானால் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனத்தை செலுத்தமுடியாது ஆனால் எலிசபெத் மகாராணி இதற்கு விதிவிலக்கானவர்.எலிசபெத் மகாராணிக்கு ட்ரைவிங்க் லைசென்ஸ் தேவையே இல்லை அதோடு வாகனம் செலுத்தப்பழகுவதற்கா தனியாக எந்த வகுப்புக்கும் செல்லவும் தேவையில்லை.இங்கிலாந்தில் மக்கள் அனைவருக்கும் எலிசபெத் மகாராணியின் பெயரில்தான் அரசு வாகன உரிமம் வழங்கப்படுகிறது எனவே எலிசபெத் மகாராணிக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதென்பது அவரே அவருக்கு வழங்குவதுபோன்று இருக்கும் என்பதால்தான் மகாராணிக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதில்லை.2 ஆம் உலகப்போரில் ஆம்புலன்ஸ் வாகனத்தை செலுத்திய அனுபவம் எலிசபெத் மகாராணிக்கு உண்டு.1998இல் மகாராணி ஒருதடவை சவூதி நாட்டுக்கு சென்றிருந்தபோது அங்கே லாண்ட் ரோவர் வாகனம் ஒன்றை செலுத்தியிருக்கிறார் மகாராணியென்றபடியால்தான் பெண்ணாக இருந்தும் சவூதியில் வாகனத்தை செலுத்தமுடிந்தது ஏனென்றால் சவூதியில் வாகனம் செலுத்த பெண்களுக்கு உரிமையில்லை.
08)வேகத்தடை இல்லை(No speed limit)
சாதாரண குடிமகன் களான எங்களுக்குத்தான் வீதிப்போக்குவரத்துச்சட்டம் செயற்படும்.வாகனத்தை செலுத்தும்வேகத்தில் வீதிப்போக்குவரத்துச்சட்டத்திற்கு அமைவாக நடக்கவேண்டிய எந்தத்தேவையும் மகாராணிக்கு இல்லை அவர் விரும்பிய வேகத்தில் செல்லலாம்.
07)பாஸ்போர்ட் கடவுச்சீட்டு தேவையே இல்லை(No passport required)
சாரதி அனுமதிப்பத்திரத்தைப்போலவே பாஸ்போர்ட்டும் மகாராணிக்குத்தேவையே இல்லை.விரும்பிய நாடுகளுக்கு விரும்பிய நேரத்தில் எந்தத்தடையும் இல்லாமல் மகாராணியால் சென்றுவரமுடியும்.
அதோடு தான் விரும்பினால் கடவுச்சீட்டுப்பெறுவதற்கான எந்தத்தகுதியும் இல்லாத ஒருவருக்குகூட கடவுச்சீட்டைவழங்க மகாராணியினால் முடியும்
06)கருத்துச்சுதந்திரம்(Freedom of expression)
சாதாரணமாக ஊடகங்கள்,நிரூபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பது அரசியல் தலைவர்களின் கடமையாகவே பார்க்கப்படுகின்றது ஆனால் இங்கிலாந்தின் அரசவம்சம் மட்டும் இதற்கு விதிவிலக்கானது.அரசகுடும்பத்தினர் தாங்கள் விரும்பினால் மட்டுமே கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள்.
05)வரி செலுத்தவேண்டிய அவசியமில்லை(No need to pay taxes)
அனைவரும் அரசுக்கு வரிசெலுத்தவேண்டும் என்பது கட்டாய சட்டமாக இருந்தாலும் மகாராணி வரிசெலுத்தவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஆனால் 1992 இல் இருந்து தாமாகவே வரி செலுத்திவருகிறார் எலிசபெத்.
யுத்தத்தை ஆரம்பிக்கமுடியும்(Can start a war)
லண்டன் பாராளுமன்றத்தில் ஒரு நாட்டுடன் சமாதானம் என்று முடிவெடுக்கப்பட்டாலும் அந்த நாட்டின் மீது யுத்தத்தை அறிவுக்கும் அதிகாரம் எலிசபெத் மகாராணிக்கு உண்டு.
சட்டத்தை நிராகரிக்கமுடியும்(The law can be rejected)
பாராளுமன்றத்தில் ஏதாவது ஒரு சட்டம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை இறுதியில் நிறைவேற்றும் அதிகாரம் மகாராணியிடமே இருக்கின்றது.அவர் விரும்பினால் சட்டத்தை நிராகரிக்கவும் முடியும்.
குற்றம்சுமத்தமுடியாது(Not guilty)
மகாராணிமீது சட்ட ரீதியாக யாரும் குற்றம் சுமத்தமுடியாது என்பதுடன் அவர்மீது சட்டரீதியாக குற்றம்சுமத்தி நீதிமன்றத்தின்மூலம் பணம் பெறமுடியும் என்று கனவிலும் நினைத்துப்பார்க்காதீர்கள்.
சட்டத்தை பின்பற்றத்தேவையில்லை(No need to follow the law)
உலகின் எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டின் சாதாரண குடிமகன் பின்பற்றும் எந்த சட்டத்தையும் பின்பற்றவேண்டிய அவசியம் மகா ராணிக்கு இல்லை
0 கருத்துகள்