ECG என்றால் என்ன?எப்படி தொழிற்படுகின்றது?

 நெஞ்சுவலி அல்லது நெஞ்சு எரிவு என்றுவைத்தியசாலைக்கு சென்றால் பெரும்பாலும் ECG எடுப்பார்கள்.சில சாதனங்களை உடலில் பொருத்தி ஒரு மெசினில் இருந்து பிறின்ற் எடுப்பார்கள்.ஆமாம் என்ன இது? எப்படி இது வேலை செய்கின்றது? வாருங்கள் பார்க்கலாம்.




ECG இதன் full form "Electrocardiography"இதை இதய துடிப்பலைஅளவி அல்லது இதய துடிப்பலை வரைபு என்று கூறுவார்கள்.உடலின் அங்கங்களுக்கு தேவையான அளவு இரத்தத்தை வழங்குவதே இதயத்தின் முக்கிய தொழிலாகும்.இதற்காகத்தான் இதயம் நிமிடத்திற்கு 72 தடவைகள் துடிக்கின்றது.அதாவது 72 தடவைகள் இதய அறைகள் சுருங்கிவிரியும்.இப்படி இதய  அறைகளின் சுருக்கத்தின்போது ஏற்படும் அழுத்தத்தினாலேயே எமது உடலின் ஏனைய பகுதிகளுக்கு இரத்தம் செல்கின்றது.




இந்த அழுத்தத்தையே நாம் அளந்து இரத்த அழுத்தத்தை(பிளட் பிரஸர்) அளக்கின்றோம்.

ஆனால் இந்த இதயம் எப்படி சுருங்கிவிரிகின்றது?

இதற்காகவே இதயத்திற்குள் ஒரு மின்சாரவலை இருக்கின்றது அந்த மின்சாரவலையில் ஏற்படும் கணத்தாக்கங்கள்(electrical impulses)(சிறிய மின்சார தூண்டல்கள்) காரணமாகவே இதயத்தின் இதய சோணை அறைகள் சுருக்கமடைகின்றன.இதயத்தில் காணப்படும் இந்த மின்சாரதொகுதியை conducting system of the heart என்று அழைப்பார்கள் அதாவது இதய மின் கடத்தல் தொகுதி.




மேலே உள்ள படத்தைப்பாருங்கள் அந்தப்படத்தில் உள்ள  SA node,AV node,AV bundle,bundle branches என்ற இந்த நான்கு பகுதிகள்தான் இப்போதைக்கு எமக்கு தேவையானவை.இங்கே SA node,AV node என்பவை மின்சாரத்தை பிறப்பிக்கும் நரம்புக்கலங்களின் திரட்சியால் உருவானவை.இவற்றில் உருவாகும் மின்சாரம் படிப்படியாக இதயத்தின் பகுதிகளுக்கு பரவும்போதே இதயம் சுருங்கலடைகிறது.இதயத்தில் ஏற்படுத்தப்படும் இந்த் மின்சாரத்தை அளக்கும்போது ஒரு அலைவடிவம் பெறப்படும் இதைத்தான் ECG என்று அழைக்கின்றோம்.


இதயத்தில் உருவாகும் இந்த மின்சாரம் மிக மிக சொற்ப அளவிலேயே இருக்கும் இதனால்தான் இதை எம்மால் உணரமுடிவதில்லை எனவே இதை அளப்பதற்காக சில கருவிகளை நெஞ்சில் பொருத்துவார்கள் இக்கருவிகளை லீட்ஸ்(Leads) என்று அழைப்பார்கள்.இவற்றை நெஞ்சில் பொருத்தும்போது இதயத்திற்கு சமாந்தரமாகவே பொருத்தவேண்டும்.கீழே உள்ள படத்தில் வர்ண நிறங்களில் காணப்படுபவைதான் லீட்ஸ் ,6 லீட்ஸ்கள் நெஞ்சில் பொருத்தப்படும்(chest leads).

4 (limb leads)லீட்ஸ்கள் கால்,கைகளில் இவ்விரண்டாக பொருத்தப்படும்.


மொத்தம் 12 லீட்ஸ் நெஞ்சில் 6 லீட்ஸ்,கை கால்களில் 3 லீட்ஸ்(1 ஏர்த்),அதோடு வெக்டர் லீட்ஸ் 3 ஆக மொத்தம் 12 லீட்ஸ்.இந்த 12 லீட்ஸ்களாலும் உணரப்படும் மின்சார ஏற்ற இறக்கங்களின் தொகுப்பே ECGஆக வெளியே பிறின்ற் செய்யப்படுகின்றது.
ஒட்டுமொத்த லீட்ஸ்கள் இதயத்தை நோக்கி அமைந்திருக்கும் தளங்கள்


ECG யின் மூலம் ஹார்ட் அட்டாக் போன்றவற்றை கண்டறிவது எப்படி?இன் அடிப்படை அலை வடிவமும் விளக்கமும் அடுத்த பதிவில் 
தொடரும்....

கருத்துரையிடுக

0 கருத்துகள்