அழிந்துபோகப்போகும் அரச உத்தியோகத்தர்கள் இனமும் புதிய வரிக்கட்டுப்பாடுகளும் - TIN

அரசாங்க உத்தியோகம்-ஓசியில் இருப்பதற்கு அவங்களுக்கு சம்பளம், இது காணாதெண்டு சம்பளம் கூட்டோனும் எண்டு போராட்டம் வேற..அந்த ரெயில்வே டிபார்ட்மெண்ட்ல வேலைசெய்யிறவங்கட சம்பளம் பாத்தனியே 2 லச்சம் தம்பி.....


வைத்தியசாலையில் ஒரு நாள்  நிறைகுடிவெறியில் ஒரு குடிமகன் வந்திருந்தார் வாயில் தூசண வார்த்தைகளைக்கொட்டிக்கொண்டுவந்தவர் தனது கோபத்தை அங்கே பணிபுரிந்துகொண்டிருக்கும் வைத்தியர்கள் மீதும் தாதிகள் மீதும் காட்டினார். டேய்  நாங்கள் குடுக்கிற டக்ஸ் காசிலதானே சம்பளம் வாங்கிறியள் இப்ப இந்த காயம் மாறோனும் இல்லையெண்டால் டீம் இறங்கும்......

சரி விடயத்திற்கு வருவோம்



இலங்கையில் வரியை 15% இல் இருந்து 18% இற்கு அடுத்தவருடத்தில் இருந்து அதிகரிக்கப்போகின்றார்கள் அதாவது இன்னும் 1 மாதம்தான் இருக்கின்றது. இதனால் பெற்றோல் விலையுடன் அனைத்துப்பொருட்களின் விலையும் ஒரு சுற்று அதிகரிக்கப்போகின்றது. மிடில் கிளாஸில் இருந்து ஒரு படி கீழே இறங்கிய அனைவரும் மீண்டும் ஒரு படி கீழே இறங்கப்போகின்றோம். சாதாரணமாக SL grade இல் இருப்பவர்களைத்தவிர அவளவு இலகுவாக சம்பளம் யாருக்கும் 1 இலட்சங்களை தாண்டுவது அரிது, வேண்டுமானால் பிரைவேட்டாக உழைக்கவேண்டியிருக்கும். 95% ஆன அரச உத்தியோகத்தர்களுக்கு நிச்சயம் லோன் இருக்கும் வீட்டுக்காகவோ அல்லது வாகனத்துக்கோ ஏதாவது ஒரு தேவைக்காக லோன் எடுத்திருப்பார்கள், எனவே அது போக மிகுதிதான் சம்பளம் அதுவும் இப்போது வரியையும் கழித்தால் இன்னும் குறையத்தான் போகின்றது ஆனால் ஒட்டுமொத்த சம்பளம் அதிகரிக்கப்போவதில்லை.



வைத்தியசாலையில் குடிபோதையில் கூறிவரின் கருத்து ஒருவகையில் சரிதான் அவர் சாராயம் வாங்க கொடுத்த பணத்தில் இருக்கும் டக்ஸில் இருக்கும் ஒரு பகுதியில் இருந்தும் கூட அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது, ஆனால் இலங்கையில் எந்த ஒரு அரச உத்தியோகத்தருக்கும் சாராயம்வாங்கும்போது, அரிசி, பருப்பு, சீனி என்ற எந்த பொருட்களுக்கும் வரிச்சலுகை வழங்கப்படுவதில்லை, அதாவது சாதாரணமக்கள் கொடுக்கும் அதே வரிப்பணத்தை அரச உத்தியோகத்தர்கள் கட்டுகிறார்கள் அதோடு அதைவிட கூடுதலாக சம்பளத்திலும் வரி அறவிடப்படுகின்றது.


சுருக்கமாக விரும்பியோ விரும்பாமலோ வரிகட்டவேண்டிய கட்டாயத்திற்குள் இருப்பவர்கள் அரச ஊழியர்கள்தான். நாட்டில் ஏற்படும் திடீர் பொருளாதாரச்சிக்கல்களுக்காக மாதாந்த வேதனத்தை 2 மாதங்கள் தள்ளிப்போடவும் அரசாங்கத்தால் முடியும் ஆனால் இப்படி எதுவும் தனியார் துறைக்கு நடக்கப்போவதில்லை. இப்படி வேறு எந்த நாட்டிலும் நடக்காதுதான் ஆனாலும் இப்படியான சூழ் நிலைக்கு நமது நாடு என்றோ தள்ளப்பட்டுவிட்டது.

இதுதொடர்ந்தால் அரசவேலையைவிட்டுவிட்டு வேறுதொழிலுக்கு செல்வதைதவிர பலருக்குவேறுதெரிவு இருக்கப்போவதில்லை.

ஒரு லட்சம் என்பது இப்போது ஒன்றும் அவளவு பெரிய சம்பளமேயல்ல  என்பதால் அரசு 120000க்கு மேல் சம்பளம் எடுக்கும் அனைவருக்கும் வரியை அமல்படுத்தியிருக்கின்றது.

ஒரு முடிவெட்டும் நபரை எடுத்துக்கொள்வோம்

முடிவெட்டுவதற்கு ஒருவருக்கு 500 ரூபாய், ஒரு நாளில் குறைந்தது 10 பேர் வெட்டுகிறார்கள் என வைத்துக்கொண்டாலும் மாதத்திற்கு 150 000 ரூபாய்களை அவர் உழைக்கத்தான் போகின்றார் ஆனால் அவர் இதற்கு எந்த வரியையும் கட்டப்போவதில்லை ஆனால் சமுர்த்திப்பதிவும் அதற்கான கொடுப்பனவையும் அவரால் பெறமுடியும்.

வீதியோரத்தில் பகோடா, மிக்ஸர் விற்கும் தள்ளிவண்டிவைத்திருப்பவராலும் அண்ணளவாக இதே சம்பளத்தைப்பெறமுடியும் (  தெரிந்தவர்கள் இருவர் இருக்கின்றார்கள் )



ஓரு ஆட்டோ ஒட்டுனராலும் அவரது ஓட்டத்தைப்பொறுத்து இவை சாத்தியம்தான். இப்போதாவது Pick Me யாழ் வந்ததால் தப்பித்தோம் 2018 இல் யாழ்ப்பாணம் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டரில் இருக்கும் என் ஊருக்கு வருவதற்கு 2000 ரூபாய் கொடுத்தேன் அதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு பஸ் ரிக்கட் 1300 ரூபாய் ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து என் ஊருக்கு 2000 ரூபா

இவர்களையெல்லாம் விடுங்கள் மன்னிப்போம் கஸ்ரப்பட்டால்தான் பணம்கிடைக்கும், 2019 இல் இறந்த என் தந்தையின் கிரியைகளைசெய்வதற்காக கீரிமலை சென்றிருந்தேன் அங்கே கொடுக்கவேண்டிய பணம் 10 000 ரூபாய், அரை மணித்தியாலத்திற்கு ஒருவர் என்றவாறு கிரியைகள் நடக்கும் எப்படியும் குறைந்தது 20 நபர்களை போட்டுக்கொள்வோம் ( உண்மையில் மிக அதிகம்) ஒரு நாளில் 2 லட்சம் கிடைக்கும் மாதத்திற்கு 60 லட்சம் ஆனாலும் அங்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் என்று சமுர்த்திப்பதிவு இருப்பதாக கேள்வி... இங்கும் வரி கட்டப்படுவதில்லை. இதேபோன்று 3 மாடி வீடுகளை கட்டிவாழும் கோயில் பூசாரிகள், சர்ச் பாதிரிகள் என்று ஒரு பெரிய கூட்டத்திற்கே படியளப்பதற்கும் அரச ஊழியர்களே பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களை வென்றவர்கள் நமது அரசியல்வாதி சகாக்காள்....


அபிவிருத்தியடைந்த நாடுகளில் வரி உண்மையில் எமது நாட்டைவிட மிக அதிகம்தான்

income tax


ஆனால் அதிகமான வரி மக்களை அவளவாகப்பாதிக்காது காரணம் அங்கே எந்தத்தொழிலாக இருந்தாலும் மணித்தியாலத்திற்கு 20 அல்லது 22 டாலர்கள் வழங்கவேண்டும் போன்ற சட்டங்கள் இருக்கின்றன. இதனால் எந்த ஒரு மனிதனதும் அடிப்படைத்தேவைகளை நிறைவுசெய்வதற்கான பணத்தை அனைவராலும் உழைத்துக்கொள்ளலாம், அதோடு வயோதிபத்தில் பண உதவி போன்று பல திட்டங்கள் இருக்கின்றன இவற்றினால் கட்டப்பட்ட வரி மீண்டும் ஏதாவது ஒருவிதத்தில் கிடைக்கும் துரதிஸ்டவசமாக இலங்கை நிலை நான் சொல்லித்தெரியவெண்டியதில்லை.


அனைவரது பணப்பரிவர்த்தனையையும் கவனிபதற்காக இலங்கை அரசு TIN -tax identification no என்ற சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றது, இதை அரசு முன்பே அறிமுகப்படுத்தியிருந்தாலும் உலக வங்கியின் நிபந்தனைகளின்பேரில் இப்போது இது கடுமையாக்கப்பட இருக்கின்றது.



வங்கியில் வைப்பிலிடப்படும் பணம்கூட கண்காணிக்கப்படும். அந்தப்பணம் எங்கிருந்துவந்தது என்பதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்படவேண்டும் அதற்கான வரிப்பணமும் அறவிடப்படும். காணி,வீடு, கார் என எது வாங்கினாலும் எந்த source இல் இருந்து பணம் கிடைத்தது என்பதில் கேள்விகள் ஆரம்பிக்கப்பட்டு டக்ஸில் சகலதும் முடிவடையும். இதை இன்னும் திறம்பட செய்யவேண்டுமானால் இந்தியாவில்  Gpay பயன்படுத்துவதைப்போல் இங்கேயும் பயன்படுத்தினால் சலூன் முதற்கொண்டு சைக்கிள்கடை வரை அனைத்துமே இலகுவில் கண்காணிக்கப்படும்.


எதிர்காலத்தில் இந்த TIN இலக்கம் இல்லாமல் ஒரு வங்கிக்கணக்குக்கூட திறக்கமுடியாமல்போகலாம். இந்தியாவில் இருக்கும் ஆதார் காட் போல் இங்கேயும் அனைத்தும்வரலாம்.

TIN இலக்கத்தை ஒன்லைனிலும் பெற்ருக்கொள்ளமுடியும். இங்கே கிளிக் செய்து படிவத்தை பூர்த்திசெய்துகொள்ளுங்கள்.

இந்தக்கட்டுரை தொடர்பான மாற்றுக்கருத்துக்கள் நிச்சயம் இருக்கும் கொமண்டுங்கள் பார்ப்போம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்