தண்ணீர்டாங்கியில் மிதந்த 21 வயது மாணவி -elisa lam case



 21 வயதான மாணவி ஒருவர் அமெரிக்காவில் மக்கள் தங்குவதற்கே பயப்படும் மிகப்பிரபலமான ஹோட்டலான செசில் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறார் இந்த ஹோட்டல் றேட் ஏனையவற்றைவிட குறைவு என்பதாலேயே இங்கு தங்க முடிவுசெய்கின்றார் அந்த மாணவி ஜப்பானில் இருந்து காலேஜில் இணைவதற்காக அமெரிக்கவந்த இந்த மாணவி தனது பிளாக்கரில் தொடர்ந்து போஸ்ட்களை எழுதிக்கொண்டிருப்பவர் அதோடு ஒவ்வொரு நாளும்  நாள் தவறாமல் தன் பெற்றோருடன் போனில் பேசுவது வழக்கம்.

Elisa Lam


2013 ஜனவரி 31 இற்குப்பின்னர் எலிசாவிடமிருந்து எந்த போன் காலுமே அவரது பெற்றோருக்கு செல்லவில்லை நாள் தவறாமல் கால்செய்பவர் என்பதால் அவரது பெற்றோர் மீண்டும் மீண்டும் முயற்சிசெய்தும் போனை அவர் எடுக்கவேயில்லை பெற்றோர் மிகவும் பயந்து ஹோட்டல் நிர்வாகத்துக்கு கால்செய்து சென்று பார்க்கும்படி கேட்டுக்கொள்ள அவரது ரூமுக்கு சென்ற ரூம்சேர்விஸ் கதவைத்தட்டுகிறார் கதவு தானாக திறந்துகொள்கின்றது மேடம் என கூப்பிட்டுக்கொண்டே உள்ளே சென்று பார்த்தால் அவரது உடைகள் போன் என அனைத்துமே உள்ளே அப்படியே இருக்கின்றது ஆனால் எலிசா லாம்ப் அங்கேயில்லை,அவருக்கு தெரிந்த நண்பர்கள் யாருமே ஹோட்டலில் இருப்பதாகவும் தெரியவில்லை விடயம் சற்று சந்தேகத்தை ஏற்படுத்தவே ஹோட்டல் நிர்வாகம் விடயத்தை பெற்றோருக்கு கூற அவர்கள் தாம் உடனே புறப்பட்டுவருவதாகவும் போலீஸாரிடம் காம்பிளேயிண்ட் செய்யுமாறும்கூறிவிட்டு உடனடியாக புறப்படுகின்றார்கள்.



தகவல் கிடைத்த போலீஸார் ரூபை நன்றாக சோதனை இடுகின்றார்கள்,அவர் ரூமில் இருந்து எதையுமே எடுத்துச்சென்றதாக தெரியவில்லை,விசாரனை தொடர்கின்றது 2 நாட்களாக அந்த மாடியில் இருந்தவர்கள் ஹோட்டலில் இருந்த காப்பிசாப் என அனைத்து இடங்களிலும் சல்லடைபோட்டு தேடியும் விசாரித்தும் பார்த்தாயிற்று யாருக்குமே அப்படி ஒருவர் இருந்ததே தெரியவில்லை சரி சி.சி.டிவியை செக் செய்துவிடுவோம் என்று பழைய பூட்டோஜ்களைப்பார்க்கும்போதுதான் ஒரு அதிர்ச்சிகரமானவிடயத்தை போலீஸார் கண்டுபிடிக்கின்றார்கள்.



அந்த பூட்டேஜ்ஜில் எலிசா லாம்ப் லிப்ட்டுக்குள் செல்லும் காட்சி லிப்டுக்குள் பூட்டப்பட்டிருந்த சிசிடிடிவியில் பதிவாகியிருந்தது.ஆனாலும் அதில் எலிசா லாம்பின் நடத்தை மிகமிகவினோதமாக இருந்தது,எலிசா லாம்ப் அவசர அவசரமாக வந்து லிப்டுக்குள் ஏறுகின்றார் உள்ளே ஏறியதும் பல பட்டின்களை மாறிமாறி அழுத்துகின்றார்,லிப்ட் உடனே மேலே அல்லது கீழே சென்றிருக்கவேண்டும் ஆனால் வினோதமாக லிப்ட் டார் குளோஸ் ஆகி மீண்டும் மீண்டும்  திறந்துகொள்கின்றது எலீஸா மீண்டும் வெளியே வந்து யாருடனோ பேசுகின்றார் மீண்டும் லிப்டுக்குள் செல்கின்றார்,இவளவு பதிவும்தான் போலீஸாருக்கு கிடைத்தது



இவரை பார்த்தால் உடனே போலீஸாருக்கு தகவல்தாருங்கள் என்று இந்த சிசிடிவி பூட்டேஜ்ஜையும் போலீஸார் வெளியிடுகின்றார்கள் ஆனால் வீடியோ யாரும் எதிர்பாராதவிதமாக வைரல் ஆகிறது காரணம் இந்த ஹோட்டல்தான்

செசில் ஹோட்டலில் தங்க பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை காரணம் பயன் ஏனென்றால் கடந்த 100 வருடத்தில் 16க்கு மேற்பட்ட கொலைகள் தற்கொலைகள் என அனைத்துமே இந்த ஹோட்டலில் அரங்கேறியிருக்கின்றது.இங்கே இப்படி கொலைகள் தற்கொலைகள் நடப்பதெல்லாம் சர்வசாதாரணம் எனவே தெரிந்தவர்கள் இந்த ஹோட்டலில் தங்க சென்றால்கூட மக்கள் எச்சரிக்க மற்ப்பதில்லை இதன் காரணத்தால் வாடிக்கையாளர்கள் குறைய ஆரம்பிக்க ஹோட்டல் நிர்வாகம் ரூம் ரெண்டைம்மிகமிக குறைவாக அறவிட  ஆரம்பித்தார்கள் ரூம் ரேட் குறைவு என்ற ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் இங்கே பலர் இப்போது தங்குகின்றார்கள்



இந்த ஹோட்டலில் மிகப்பிரபலமான சீரியல் கில்லர் ஒருவரும் தங்கியிருந்திருக்கிறார் 1884-85 களில் 16க்கு மேற்ப்ட்ட பெண்களை கற்பழித்து கொலைசெய்தவன்தான் இவன் இவன் இரவில் கொலைசெய்வதை வாடிக்கையாகக்கொண்டவன் ரிச்சார்ட் ரமிரேஸ் என்றை இந்தக்கொலைகாரன் இந்த


ஹோட்டலில்தான் தங்கியிருந்தான்,இவன் தங்கியிருந்த அதே மாடியில் இருந்தவர்கள் கொடுத்த  தகவல்களின் அடிப்படையில் போலீஸார் அவனை கைதுசெய்தார்கள் அவன் ரூமை பரிசோதனைசெய்த போலீஸார் ஆடிப்போய்விட்டார்கள் எலும்புக்கூடுகள் வினோதமான அடையாளங்கள் என அவன் ரூம் முழுவதுமே சாத்தானின் அடையாளங்கள் குவிக்கப்பட்டிருந்தன

என்னை காட்டிக்கொடுத்துவிட்டீர்கள் நான் சிலவாரங்களில் இறந்துவிடுவேன் ஆனால் ஆவியாக வந்து உங்களை பழிவாங்குவேன் என மிரட்டிவிட்டுத்தான் இவன் ஜெயிலுக்கு சென்றிருக்கின்றான் ஆனால் அவன் நீண்டகாலத்திற்கு பின்னர்தான் மரணமடைந்திருக்கின்றான்  ஆனாலும் அவனது ஆவியினாலேயே பல மரணங்கள் இந்த ஹோட்டலில்  நடைபெறுவ்தாக மக்கள் நம்புகின்றார்கள்


காணாமல்போன எலிசா லாம்பின் பெற்றோரும் ஹோட்டலுக்கு வந்துவிட்டார்கள் மேப்ப நாய் தடயவியல் பரிசோதகர்கள் என ஒரு பெரிய பட்டாளமே உள்ளே நுழைந்து சல்லடை போட்டார்கள் ஒரு துரும்புகூடக்கிடைக்கவில்லை ஒருவேளை இறந்திருந்தால் பாடியாவது கிடைத்திருக்கவேண்டும் அப்படியும் எதுவும் கிடைக்கவில்லை இப்படியான சந்தர்ப்பத்தில் ஹோட்டல் நிர்வாகத்துக்கு வரும் கம்பிளேன்கள் அதிர்கரிக்கின்றன பைப்பில் வரும் தண்ணீர் துர் நாற்றம் வீசுகின்றது ஏதோ கறுப்பாக வருகின்றது  வரும் தண்ணீரின் பிரசர் போதவில்லை இந்த கம்பிளேயின்கள அனைத்துமே  காம்பிசாப் ரிசப்சனிஸ்டின் ரூம் முதலாம் மாடியில் வசிப்பவர்களிடமிருந்துதான் வந்தது இவையனைத்துக்கும் ஒரு டாங்கில் இருந்துதான் தண்ணீர் சப்பிளே உடனே அதை சரிபார்க்குமாறு ஒரு வரை அனுப்ப ஊழியர் சென்று மொட்டைமாடியில் இருக்கும் மிகப்பெரிய 4 இரும்பு டாங்கியில் குறிப்பிட்ட அந்த டாங்கியின் மூடியைத்திறந்து பார்த்தவர் அலறிவிடுகின்றார் உள்ளே நிர்வாணமாக ஒரு பெண்ணின் உடல் வீங்கி பாதி அழுகிய நிலையில் மிதந்துகொண்டிருந்தது

உடனே விடயம் போலீஸாருக்கு  அறிவிக்கப்படுகின்றது அங்குவந்த போலீஸாரும் மீட்புக்குழுவினரும் பிணத்தை வெளியே எடுக்க முயற்சிக்கிறார்கள் ஆனால் முடியவில்லை காரணம் அந்த இரும்பு டாங்கியினுள் ஒரே ஒருவர் நுழையும் அளவில்தான் துளையிடப்பட்டிருந்தது அதோடு துளையின் மூடி 20 கிலோவிற்கும் அதிக எடையுடையது இறுதியில் வேறு வழியில்லாமல் அந்த டாங்கியை அடியோடு பெயர்த்து எடுத்து இரும்பு டாங்கியை இரண்டு துண்டாக வெட்டித்தான் பிணத்தை வெளியே எடுத்திருக்கின்றார்கள் இதற்குள் விடயம்  நெட்டில் வைரலாகிவிட்டது

போலீஸாருக்கு பல விடயங்கள் புரியாத புதிராகவே இருந்தது

1)காணாமல் போனார் என்றதும் மேப்ப நாய்களையும் போலீஸார் அழைத்துவந்தார்கள் மேப்ப நாய்கள் மொட்டைமாடிவரை வந்திருந்தன ஆனால் டாங்கியின் அருகில் செல்லவேயில்லை 

2)யாரோ ஒருவருக்குப்பயந்துதான் எலிசா லிப்டுக்குள் ஓடியிருக்கிறார்  அது யார் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை  அதே நேரத்தில் வேறு எந்த சிசிடிவியும் அங்கு வேலைசெய்யவில்லை

3)சுவிச்சை அழுத்தியும் லிப்ட் ஏன் இயங்க மறுத்தது என்பதற்கு சரியான விளக்கங்கள் இல்லை

4)மொட்டைமாடிக்கு செல்வதற்கு ஒரே ஒரு படிக்கட்டு மட்டுமே இருக்கின்றது அதுவும் தீ பரவும் நேரத்தில் ஆபத்தின் போது செல்வதற்கு மட்டுமே அதைப்பயன்படுத்தமுடியும் அதுவும் மொட்டை மாடிக்குச்செல்லும் கதவில் அலாரம் பொருத்தப்பட்டிருக்கின்றது யாராலும் கீ இல்லாமல் திறக்கமுடியாது அப்படி திறந்தால் அலாரம் அடிக்கும் அப்படியென்றால் இவர் எப்படி மொட்டைமாடிக்கு சென்றார்?

5)ஆடொப்ஸி ரிப்போர்ட்டில் எலிசா எந்த காயங்களுக்கும் உள்ளாகவில்லை வன் புணர்வுக்கும் உட்படுத்தப்படவில்லை என்ற ரிப்போர்ட் போலீஸாரின் குழப்பத்தை மேலும் அதிகரித்தது,இது கொலையாக இருந்தால் கொலைக்கான எந்த மோட்டிவேசனையும் கண்டுபிடிக்கமுடியவில்லை


போலீஸாருக்கு வேறுவழிதெரியவில்லை உள் நாட்டு கேஸ் என்றாலும் சமாளித்துவிடலாம் ஆனால் இறந்தவர் வேறு ஒரு நாட்டின் பிரஜை எனவே பொலீஸார் ஒரு தியரியை உருவாக்கினார்கள்

அந்த மொட்டைமாடிக்கு வருவதற்கு இரும்பு ஏணி ஒன்று வெளிப்புறமாக அமைக்கப்பட்டிருந்தது அந்த ஏணிவழியாக ஏறி எலிசா மொட்டை மாடிக்கு வந்திருக்கின்றார் அங்கிருந்து டாங்கிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த உயரமான அறையின் மேற்கூரைக்கு ஏறி டாங்கி மீது குதிக்கின்றார் அவர் குதிக்கும்போது டாங்கியின் மூடி மூடப்பட்டிருக்கவில்லை எனவே உள்ளே விழுந்துவிட்டார் அப்படியே இறந்துவிட்டார் அதோடு அவருக்கு பைபோலர் என்ற மன நிலை பாதிப்பும் இருந்தத்தை போலீஸார் கண்டுபிடிக்கின்றார்கள் இந்த நோயால்

இப்படியாக கேஸுக்கு ஒரு தியரியை உருவாக்கி கேஸ் மூடப்பட்டுவிட்டது

ஆனால் இந்த தியரியிலும் பல ஓட்டைகள் இருக்கத்தான் செய்கின்றன

எலிசா அந்த இரும்பு ஏணிமீது ஏறிவந்திருக்கின்றார் என்பதே நம்புவதற்கு கடினமானவிடயம்தான்.19 வது மாடியின் வெளிப்புறத்தில் தொங்கும் ஏணியில் இருந்து கீழே பார்த்தாலே பயத்தில் கைகால் நடுங்கி அவர் விழுந்திருப்பார்

தற்கொலைதான் செய்துகொள்ளவேண்டுமென்றால் கீழே குதித்தாலே போதுமானது மொட்டைமாடிக்கு ஏறி அங்கிருக்கும் இன்னொரு அறையின் உயரத்திற்கு ஏறி டாங்கிக்குள் குதிக்கவேண்டுமென்ற எந்த அவசியமும் இல்லை

மொட்டைமாடியில் இருக்கும் அறையின் மேற்கூரையில் இருந்து டாங்கிமீது பாயும்போதே அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கும் அவளவு சாதாரணமாக பாயமுடியாது

டாங்கின் மூடியை தனியாக எலிசாவால் திறக்கவே முடியாது அப்படியே திறந்தாலும் எலிசா மூடியிருக்கவாய்ப்பில்லை உள்ளே விழுந்ததும் டாங்கியின் அடிக்கு சென்றிருப்பார் எனவே மூடமுடியாது 

இப்படி பல கேள்விகளுக்கு இன்றுவரை விடையில்லை

கருத்துரையிடுக

0 கருத்துகள்