மகளுக்காக தாதா என்ன செய்தார் தெரியுமா?/pablo escobar-உலகின் மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் மன்னன்

ஒரு நாட்டின் கடனை நானே தன் சொந்தப்பணத்தைப்போட்டு அடைத்துவிடுகிறேன் என்று ஒருவர் கூறுகிறார், தன்னை சிறைவைக்கவேண்டுமானால் அந்த சிறையையும் நானேதான் கட்டுவேன் அதற்கு நீங்கள் சம்மதித்தால்தான் சிறைசெல்வேன் என்றுகூட கூறுகிறார். அந்தநாடு வேறு வழியில்லாமல் சம்மதிக்கின்றது,இத்தனைக்கும் அந்த நாட்டுக்கு அமெரிக்க அரசின் பின்புலம்வேறு இருக்கின்றது. தனக்காக கட்டப்பட்ட அந்தச்சிறையை ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் இருக்கும் அத்தனைவசதிகளையும்கொண்டிருக்கிறமாறு அவர் அமைத்துக்கொள்கின்றார். அதோடு ஹெலிஹாப்டர்கள் வந்திறங்குவதற்கான ஹெலிப்பாட்டுகள் 20 ,30 விலை கூடிய கார்கள்,மிகப்பெரிய நீச்சல்தடாகம்,பப்,பார் என்று அத்தனையுமே அந்த சிறையில் இருக்கின்றன.இதற்கும் அந்த நாட்டின் அரசு வேறு வழியின்றிசம்மதிக்கின்றது




சரி உள்ளுக்குள்ளேயே இருக்கட்டும் சரியான நேரம்பார்த்து சுற்றிவளைத்து தீர்த்துக்கட்டிவிடுவோம் என்றுவிட்டு எதிர்பார்க்காத நேரத்தில் போலீஸார் அதிரடியாக அந்த சிறையை சுற்றிவளைத்து உள்ளே சென்று பார்த்தால் அங்கு யாருமே இருக்கவில்லை,இப்படி நடக்கும் என்று முன்பேதெரிந்து பல கிலோமீட்டருக்கு சுரங்கப்பாதையையும் கட்டியிருந்தார் அவர்
இதைக்கேட்கும்போது ஏதோ ஹாலிவூட் சினிமாகதை போன்று உங்களுக்குத்தோன்றலாம், ஆனால் உண்மையிலேயே ஒரு தாதா இப்படிவாழ்ந்திருக்கின்றார்.அவர் வாழ்ந்துசென்றுவிட்ட அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் அவரது ஸ்டைல்களையும் வைத்துத்தான் கஞ்சா போதைப்பொருட்கள் கடத்தல்கள் கடத்தும் யுக்திகள் என அனைத்தும் திரைப்படங்களில் வெளிவந்தன ஆம் அவரது பெயர் பாப்லோ எஸ்கோபர் அவர் பேரம்பேசிய அந்த நாடு கொலம்பியா

 

பாப்லோ எஸ்கோபர் 1949 டிசம்பர் 1ல் கொலம்பியாவைச்சேர்ந்த ஒரு கிராமத்தில் ஒரு சாதாரணகுடும்பத்தில்தான் பிறக்கிறார் சிறியவயதுமுதல் வறுமையான சூழலிலேயே வளர்ந்துகொண்டிருந்த எஸ்கோபர் எப்படியாவது இந்த நாட்டின் ஜனாதிபதியாகிவிடவேண்டும் ஜனாதிபதியாகி அனைத்தையும் மாற்றிவிடவேண்டும் என்ற கனவுடனேயே படித்துக்கொண்டிருக்கின்றார்.பெரிய புகழ்பெற்றபல்கலைக்கழகங்களில் சீட் கிடைக்காமல்போனாலும் ஓட்டோமா என்ற பல்கலைக்கழகத்தில் இவருக்கு சீட் கிடைக்கின்றது ஆனாலும் இவரால் எக்ஸாம் பீஸை சரியான நேரத்திற்குள் கட்டமுடியவில்லை அது மிகச்சிறியதொகையாக இருந்தாலும் அவரது பெற்றோருக்கு அது பெரும் தொகையாகத்தான் இருந்தது.பல்கலைக்கழக நிர்வாகத்திடம் எவளவு கெஞ்சியும் எந்தப்பயனுமே கிடைக்கவில்லை என்ன செய்வது என்று சிந்திக்கும் எஸ்கோபரின் மனது கொஞ்சம் கொஞ்சமாக கிரிமினல்தனமாக யோசிக்க ஆரம்பித்தது.


ஆரம்பத்தில் பேக்கான லாட்டரி ரிக்கட்டுகளை விற்றார் பின்னர் மோட்டார் வாகனங்களை திருடிவிற்க ஆரம்பித்தார் பின்னர் கல்லறைகளில் இருக்கும் கிரானைட் கல்களைத்தோண்டியெடுத்து பாலிஸ் செய்து நல்ல விலைக்கு விற்று சம்பாதிக்க ஆரம்பித்தார் கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் பணம் குவிய ஆரம்பிக்க பல்கலைக்கழகத்தைபாதியிலேயே தூக்கிப்போட்டுவிட்டார்.

பணம் அவரிடம் சேரச்சேர நண்பர்களும் அதிகரிக்க ஆரம்பித்தார்கள் பிரச்சனைகள் அடிதடிகள் கட்டப்பஞ்சாயத்து என வளர்ந்துகொண்டேயிருந்த பாப்லோ எஸ்கோபர் முதன் முதலில் கைதுசெய்யப்பட்டது 1974இல்தான்.இதன் பின்னர் இவரது நண்பர்கள் வட்டம் விரிய ஆரம்பிக்க இவருக்கு அறிமுகமான பொருள்தான் கொக்கேயின்.உண்மையில் எஸ்கோபரிற்கு முன்பே கொக்கேயின் என்னும்போதைப்பொருளுக்கு கொலம்பியாவின் இளைஞர்கள் அடிமையாகிஇருந்தார்கள்,அதோடு கொலம்பியாவில் இருந்து மிக இலகுவாக அமெரிக்காவிற்கும் இது பரவ ஆரம்பித்திருந்தது இது அப்போதைய அமெரிக்க ஜனாபதிபதியான நிக்ஸனுக்கு பெரும் தலையிடியாக இருந்தது ஆனால் அவருக்கு அப்போது நடக்க இருப்பது தெரிந்திருக்கவில்லை

கொக்கேயின் கடத்தலை பலமாக கைப்பற்றிக்கொண்ட எஸ்கோபர் கொஞ்சம் கொஞ்சமாக கடத்தலை ஆரம்பித்தார் இதில் ஆச்சரியம் என்ன்வென்றால் அப்போதைய அதிகாரிகள் எவராலும் இவர் எப்படி கொக்கேயினை கடத்துகிறார் என்று கண்டே பிடிக்கமுடியவில்லை.பெரும்பாலும் எஸ்கோபர் இதற்கு பயன்படுத்துவது கர்ப்பிணிப்பெண்களைத்தான் ஏனென்றால் எயார்போட்டிலும் அவர்களுக்குத்தான் முன்னுரிமைகொடுப்பார்கள் பெரிதாக தொல்லைகொடுக்கமாட்டார்கள்.சின்ன சின்ன பொட்டலங்களாக ஹொக்கேயினை பொதிசெய்து அவற்றை அவர்களுக்கு விழுங்கக்கொடுத்து ஹொக்கேயினை கடத்தினார் எஸ்கோபர் இதே சீனை நீங்கள் பல ஹாலிவூட் படங்களிலும் பார்த்திருப்பீர்கள் சூரியாவின் அயன் படத்திலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அதோடு கடல் மார்க்கமாக ஹொக்கேயினைக்கடத்தும்போது டயர் டியூப்களில் ஹொக்கேயின்களை மூட்டை மூட்டையாகக் கட்டி உப்புமூட்டைகளுடன் சேர்த்து கடலில் போட்டுவிடுவார்கள் இந்த சீனை நீங்கள் நாயகனில் பார்த்திருப்பீர்கள் இவையெல்லாவற்றையும் எஸ்கோபர்தான் உலகிற்கு கற்றுக்கொடுத்தார்.

 

இதன் மூலம் கோடிகோடியாக பணம் புரள எஸ்கோபர் என்ன செய்தார் தெரியுமா தனக்கானமாட மாளிகையை மட்டும் கட்டிக்கொண்டிருக்கவில்லை தான் வசித்த கூவம்போன்ற  கிராமத்தில் உள்ள வறியவர்களுக்கு உதவிசெய்யஆரம்பித்தார் கல்விக்குப்பணம் கொடுத்தார் பாடசாலைகள் ஆர்பனேஜ் அனாதையில்லாம் சர்ச்சுகள் என பொது நலத்திற்கு அள்ளி அள்ளி இறைத்தார் இதனால் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு பலமடங்கு உயர்ந்துகொண்டிருந்தது அவருக்கு அரசியலிலும் ஆர்வம் இருந்தது தனி ஆளாக ஒரு அரசாங்கத்தையே நடத்திக்கொண்டிருந்தார் எஸ்கோபர். 

 

எஸ்கோபரிடம் ஒரு சட்டம் இருந்தது பிளாட்டா ஓர் பிளாமோ இதன் அர்த்தம் சில்வர் ஓர் லீட் என்ன அர்த்தம் என்றால் இவரோடு முரண்டுபிடிப்பவர்கள் இவர்கொடுக்கும் பணத்தைப்பெற்றுக்கொண்டு ஒதுங்கிவிடவேண்டும் இல்லையென்றால் கொல்லப்படுவார்கள் அவளவுதான், அதுசரி எஸ்கோபர் தன் கையால் எத்தனைபேரைக்கொன்றிருக்கின்றார் தெரியுமா தோராயமாக 4000 என்கின்றார்கள் ஆனால் 10 000இற்கு மேற்பட்டவரை இவர் கொன்றிருக்கலாம்  என்கின்றார்கள் கூட இருந்தவர்கள்.இவர்கொல்வதிலும் பல ஸ்டைல்களைப்பின்பற்றுவார் தல அஜித் நடித்த பில்லா 1 திரைப்படத்தில் தன் கூட்டத்தில் இருந்து விலகிச்சென்ற ஒருவரை கார் பாமின் மூலம் அஜித்  கொல்வதை நாம் பார்த்திருப்போம், இது பாப்லோவின் ஸ்டைல்தான்.இதைவிடவும் ஒரு சம்பவம் இருக்கின்றது தன்னைப்பற்றிய ஆதாரங்களைக்கொண்டு விமானத்தில் ஒருவர் சென்றுகொண்டிருக்கிறார் என்றதும் விமானத்திற்குள்ளேயே பாமைவைத்தவர் பாப்லோ எடுக்கவேண்டிய ஒரு உயிருக்காக விமானத்தில் பயணம்செய்த 100 பேரும் பலியாகினார்கள்

ஒரு புறம் பிரமாண்டமாக வளர்ந்துகொண்டிருந்தார் எஸ்கோபர் மறுபுறம் அமெரிக்க அரசு திணறிக்கொண்டிருந்தது, எப்படி இத்தனை இளைஞர்கள் கொக்கேயினுக்கு அடிமையானார்கள்? என ஆராய்ச்சி செய்ய அப்போதைய ஜனாபதி நிக்ஸன் ஒரு தனிப்படையையே களத்தில் இறக்கயிருந்தார். 


அவர்கள் திரட்டிய அத்தனை தகவல்களும் ஒருவரை நோக்கித்தான் கையைக்காட்டின அவர் இந்த நாட்டில் இல்லை கொலம்பியாவில் இருக்கிறார் யார் அவர் என்று தேடினால் வேறு யார் பாப்லோ எஸ்கோபர்தான் என்ன ஒரு தனிமனிதனா இவளவையும் செய்கிறார் கேவலம் இராணுவத்தைக்கொண்ட ஒரு நாட்டால் ஒரு தனிமனிதரைக்கட்டுப்படுத்தக்கூடமுடியவில்லையா என கடுப்படைந்த அமெரிக்கா நீங்கள் செய்கிறீர்களா? அல்லது நாங்கள் இறங்கவேண்டுமா ? எனக்கேட்க ரோஸம் வந்த கொலம்பியா சற்றுப்பொறுங்கள் நாங்களே இறங்குகின்றோம் என்றுவிட்டு சடுதியாக எஸ்கோபர் தங்கியிருந்த நகர்ப்புறப்பிரதேசத்தை  சுற்றிவளைக்கின்றார்கள்.

 


சுற்றிவளைத்த போலீஸாருக்கு அதிர்ச்சிக்குமேல்  அதிர்ச்சி, மக்கள் நிறைந்துவழிந்துகொண்டிருந்த அந்தப்பகுதியில் 10 வயது சிறுவன் கையில்கூட துப்பாக்கியிருக்கின்றது, பெண்கள் கூட துப்பாக்கிவைத்திருக்கின்றார்கள்.தாம் வருவதற்கு முன்பே அவர்கள் தயார் நிலையில் இருந்திருக்கின்றார்கள் தம்முள்ளேயும் பலர் ஏற்கனவே எஸ்கோபருக்கு விசுவாசியாக மாறியிருந்திருக்கிறார்கள்,உள்ளே சென்று தாக்க ஆரம்பித்தால் யாரைத்தாக்குவது என்பதில் சிக்கல் இரண்டுபக்கங்களிலும் மரணம் நிச்சயம் போலீஸ் திக்குமுக்காடிப்போய்விட்டது.தாம் கவனிக்காமல் விட்ட சிலவருடங்களில் பாப்லோ தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கிவிட்டிருந்தார் நிலமை கைமீறிப்போயிருந்தது.பாப்லோவைக்காட்டிக்கொடுக்க யாருமே இருக்கவில்லை முதலாவது அவர் மீதிருந்த பயம் இரண்டாவது அவர் மீதிருந்த விசுவாசம் நகரில் இருந்த அனைவருக்கும் அவர்மூலம் ஏதாவது ஒரு பண உதவி கிடைத்துக்கொண்டே இருந்தது சுருக்கமாக கூறினால் அந்த நகரத்தின் வேலு நாயக்கர் பாப்லோதான்.

அமெரிக்காவில் வெளியாகும் பாக்ஸ் சஞ்சிகை உலகின் டாப் பணக்காரர்களை வருடாவருடம் வரிசைப்படுத்தி வெளியிடும் அதில் பாப்லோ எஸ்கோபருக்கு 7 ஆம் இடம் கிடைத்தது இதைப்பார்த்துவிட்டு பாக்ஸ் மகசீனுக்கு கால் செய்த அவரது மகன் சிரித்துக்கொண்டே என் தந்தையிடம் இருக்கும் பணத்தை அந்த லிஸ்டில் இருக்கும் யாரும் கிட்டவே நெருங்கவில்லையென கூறிவிட்டு சிரித்துக்கொண்டே  ரிசீவரை வைத்துவிட்டார்

அவர்களுக்கு தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது உண்மைதான் பாப்லோ எஸ்கோபரிடம் தேவைக்கு மிக மிக அதிகமாகவே பணம் குவிந்திருந்தது.அவரிடம் சேரும் பணங்களை நாட்டின் வேறு வேறு பகுதிகளில் புதைத்துவிட்டு அவற்றை ஒரு மாப்பில் குறித்துவைத்திருந்தார் பாப்லோ அப்படி புதைக்கப்படும் பணங்களில் வருடத்திற்கு எலிகளால் கடித்துக்குதறி நாசமாகும் பணத்தின் அளவு எவளவு தெரியுமா?2.1 பில்லியன் டாலர்கள்.மாதாமாதம் அவரிடம் சேரும் பணத்தை ஒன்றாக கட்டுவதற்கு அவர் வாங்கும் றபர்பாண்டின் விலை எவளவுதெரியுமா 2500 டாலர்கள்.இதைவிட கேட்டாலே தலைசுற்றும் சம்பவம் ஒன்றிருக்கின்றது போலீஸ் ரைட்களில் இருந்து தப்பிக்க பாப்லோ நகருக்கு நகரம் மாறிக்கொண்டே இருப்பார் நாடுமுழுவதிலுமே அவருக்கு 800க்கும்மேல் வீடுகள் இருக்கின்றன இப்படி ஒரு தடவை தப்பி ஓடிய சந்தர்ப்பத்தில் இவரது மகள்

குளிரால் நடுங்கிக்கொண்டிருந்தார் அப்போது அட பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு என்றுவிட்டு கைச்செலவுக்காக கொண்டுவந்த பாக்கெட்மணி 2 மில்லியன் டாலர்களை எரித்து மகளின் குளிரைப்போக்கினார் எஸ்கோபர்,இந்த சீனை இன்ஸ்பயராக வைத்துத்தான் டார்க் நைட்டில் ஜோக்கர் மில்லியன் டாலர்கள் பணத்தை எரிக்கும் சீனை கிரிஸ்ரோபர் நோலன் வடிமைத்தாரோ என்னவோ யாருக்குத்தெரியும்?அவரிடம் எவளவு பணம் இருந்தபோதும் அவர் தனது மனைவியையும் குடும்பத்தையும் மிகவும் நேசித்தார்,வேலையில் பல டென்ஸன்னானவிடயங்கள் நடந்தாலும் மனைவியிடம் அவர் அதைக் காட்டியதில்லை கோபமாகக்கூட மனைவியிடம் பேசமாட்டார்.வெளியே ஒருவனை சுட்டுக்கொன்றுவிட்டு உள்ளே மனைவிகொடுக்கும் டீயைக்குடித்துக்கொண்டே குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருக்க அவரால் முடிந்தது

 

பாப்லோவுக்கு சொந்தமாக விமானம் கூட இருந்தது கொலம்பியாவில் இருந்து வேறு வேறு நாடுகளுக்கு தன் பிரைவேட் விமானங்களில்கூட கொக்கேயினைக்கடத்த ஆரம்பித்தார் பாப்லோ இடையில் எரிபொருள் நிரப்புவதற்காக ஒரு தீவையே பணம்கொடுத்து சொந்தமாக வாங்கியிருந்தார் பாப்லோ ஒரு கடத்தல் மன்னனிடம் சொந்தமாக ஒரு தீவே இருந்திருக்கிறது அதோடு விமானமும் கேட்பதற்கே மலைப்பாக இருக்கின்றதல்லவா? அதோடு இவருக்கு 7000 ஏக்கரில் ஒரு சொகுசு பங்களாவும் இருந்தது அந்த பங்களாவில் இவருக்கென்ற தனியாக ஒரு மிருகக்காட்சிசாலையையே உருவாக்கிவைத்திருந்தார் பாப்லோ அதில் ஆபிரிக்காவில் இருந்துகொண்டுவரப்பட்ட சிங்கங்கள்,புலிகள்,யானைகள் என பல விலங்குகள் இருந்தன,தன் வீட்டிற்கு அருகில் ஒரு மரத்தில் அரிய பறவை இனங்களை பாப்லோ வளர்த்துவந்தார் இவர் கைதட்டினால் அவை அனைத்தும் பறந்துசென்று மரத்தில் அமரும் இதை பறவைகளுக்கு பழக்குவதற்காக அவர் செலவழித்த பணம் 1 மில்லியன் டாலர்கள்

 

பாப்லோவின் வாழ்க்கை இப்படி மகிழ்ச்சிகரமாக சென்றுகொண்டிருந்தது கொலம்பியா போலீஸாரால் எதுவும் செய்யமுடியவில்லை பொறுமையிழந்த அமெரிக்கா  ஒரு கட்டத்தில்   களத்தில் நேரடியாக இறங்கியது,ஆனால் கத்தி பாலோவின் கழுத்தை நெருங்கிக்கொண்டிருப்பதை பாப்லோ உணர்ந்துகொண்டார்.யாரை நம்புவது யாரைப்பகைத்துக்கொள்வது என்று பாப்லோவுக்குத்தெரியவில்லை,பல நண்பர்கள் அரசுக்கு தகவல் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள் தனி ஆளாக இரு நாடுகளை அவரால் சமாளிக்கவே முடியவில்லை இதனால் நகரத்து நகரம் குடும்பத்துடன் மாறிக்கொண்டேயிருந்தார் அவர்,ஒரு கட்டத்தில் தனியாக தலைமறைவாகிவிட்டார் அவரைப்பற்றி யாருக்குமே எந்தத்தகவல்களுமே தெரியவில்லை தாடிவளர்த்து மாறுவேடத்தில் வீதிகளில் திரிந்தார் பாப்லோ தன் குடும்பத்தை சந்திப்பதையும் தவிர்த்துக்கொண்டார் ஏனென்றால் அவர்களையும் போலீஸார் பின் தொடர்ந்துகொண்டிருப்பார்கள் என்று அவருக்குத்தெரியும்.

 

இறுதியில் பாப்லோ போய் தஞ்சம்புகுந்த இடம் தன் தாய்வீடுதான் ஒரு கிராமப்புறத்தின் ஓரத்தில்தான் அவரது பெற்றோரின் வீடு இருந்தது அங்குசென்று தன் பெற்றோருடன் வாழத்தொடங்கினார் அவர்,காட்டுக்குசென்று விறகுவெட்டுவது சமைப்பது விவசாயம்செய்வது என அவரது வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது கோடிகளில் புரண்டாலும் இறுதியில் இப்படியான எளிமையான வாழ்க்கையே பாப்லோவுக்கு நிம்மதியைகொடுத்திருந்தது ஒன்றரை வருடங்கள் இப்படியாக வாழ்ந்தபின்னர் தன் மகளைப்பார்ப்பதற்காக நகரத்துக்கு திரும்பியிருந்தார் பாப்லோ, விடயம் வேகமாக போலீஸாரின் காதுகளுக்கு எட்டியது.போலீஸில் என்ன நடக்கின்றது எனக்கூறுவதர்கு பாப்லோவுக்கு அப்போது எந்த நண்பர்களுமே இருக்கவில்லை.

 

தனது 44 வது பிறந்த நாளை தன் குடும்பத்துடன் கொண்டாடவேண்டுமென்று ஆசைப்பட்டார் பாப்லோ எஸ்கோபர் அந்த பிறந்ததினம்தான் தன் இறுதி நாள் என்று அப்போது அவருக்குத்தெரிந்திருக்கவில்லை.தன் குடும்பத்தினருடனும் எஞ்சியிருந்த 1,2 நண்பர்களுடன் பிறந்த நாளைக்கொண்டாடிக்கொண்டிருந்தபோது அவர் பிறந்த நாளைக்கொண்டாடிக்கொண்டிருக்கிறார் என்ற தகவல் போலீஸாருக்கு எட்டியிருந்தது.அதிரடியாக போலீஸார் உள்ளே நுழைந்து துப்பாக்கியால் சுடத்தொடங்க்கினார்கள் தப்பி ஓட ஆரம்பித்த எஸ்கோபர் மாடியில் இருந்து வெளியே இருக்கும் கூரை ஒன்றின் மீது ஏறினார் அங்கிருந்து கீழே பாயும் முன்பாக போலீஸ் அவரை சுட்டுக்கொன்றுவிட்டது,


அந்த கூரையிலேயே அவரது உயிரும்பிரிந்துவிட்டது.அமெரிக்கா எஸ்கோபரைக்கைதுசெய்து தன் நாட்டுக்கு கொண்டுசென்று சிறையில் அடைக்கவேண்டுமென்று துடியாய் துடித்தது அதற்கான முழு முயற்சிகளிலும் அது ஈடுபட்டிருந்தது ஆனாலும் இறுவரை அமெரிக்காவின் கனவும் கனவாகவே போய்விட்டிருந்தது

தனி ஒரு மனிதனாக இவளவுபெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி சொந்தமாக பிளைட்,தானே தனக்கு கட்டிய சொகுசு சிறை மாளிகை,2 பெரிய நாடுகளின் பகை என இத்தனையையும் தன் உள்ளங்கையிலே தாங்கிவைத்திருந்த உலகின் முதலும் கடைசியுமான ஒரு ட்ரக் லோர்ட்  பாப்லோ எஸ்கோபர்தான்.என்னதான் மலைபோல பணம்குவிந்துபோயிருந்தாலும் எளிமைதான் அவருக்கும் இறுதியில் மன நிம்மதைக்கொடுத்திருந்தது

 

 


கருத்துரையிடுக

0 கருத்துகள்