ஆரம்பகால ஒலிம்பிக் எப்படியிருந்தது?

 



2021 இற்கான ஒலிம்பிக் போட்டி டோக்யோவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது (எச்சரிக்கை பதிவின் நீளம் அதிகம்)ஆனால் ஒலிம்பிக் எப்பொழுது ஆரம்பித்தது?ஆரம்பத்தில் ஒலிம்பிக் இப்பொழுது இருந்ததைப்போலத்தான் இருந்ததா? வாருங்கள் பண்டையகால ஒலிம்பிக்கிற்கு செல்வோம்.ஒலிம்பிக்கின் பிறப்பிடம் கிரேக்கம்.பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்தமக்களின் கடவுளுக்கான திருவிழாவின் ஒரு பகுதிதான் ஒலிம்பிக். கிரேக்கக்கடவுள்களில் முக்கிமானவரான “Zeus” என்ற கடவுளுக்காக ஒலிம்பிக் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்பட்டது. “Zeus” கடவுளிற்காக பொன்னாலும் தந்தத்தாலும் ஆக்கப்பட்ட பிரமாண்டமான சிற்பமொன்றை பிடியாஸ் என்ற சிற்பி உருவாக்கியிருந்தார். அது அன்றைய காலத்தில் இருந்த 7 அதிசயங்களுள் ஒன்றாக இடம்பெற்றிருந்தது.

போட்டிகளில் கிரேக்கர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும்.அதுவும் பிறந்த மேனியுடன்தான் போட்டிகளில் பங்குபற்றமுடியும்.அத்துடன் ஆண்களுக்கு மட்டுமே போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.இதனால் சில பெண்கள் போட்டியிடும் ஆர்வத்தில் ஆண்வேடம் தரித்து போட்டிகளில் பங்குபற்றி மாட்டிக்கொண்ட சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன.பொதுவாக கிரேக்கர்கள் தமது அன்றாட விடயங்களை நிர்வாணமாகவே செய்யும் கலாச்சாரத்தைக்கொண்டிருந்தார்கள்.உடற்பயிற்சி செய்வதுகூட நிர்வாணமாகத்தான். இன்று “gymnasium” என்றழைக்கப்படுவது ஒரு கிரேக்க வார்த்தை இதன் கிரேக்க அர்த்தம் “நிர்வாணம்”.

இவர்கள் போட்டிகளை நிர்வாணமாக நடாத்துவதற்கு காரணம் இருக்கின்றது.போட்டியில் ஈடுபடும் ஆணின் கட்டுடலை பாராட்டிக்கொண்டாடுதல் மூலம் கிரேக்கர்கள் கடவுளுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.6 ஆம் நூற்றாண்டில் கிரேக்கர்கள் உலோகத்தாலான ஆடைகளை அணியமுற்பட்டார்கள் ஆனால் இது தம்மவர்களிடம் பிரபலமடையாது போகவே மீண்டும் பழையபடி பிறந்தமேனியாக மாறினார்கள்.பிறந்தமேனியாக போட்டிகளில் பங்குபற்றுவது தடகள வீர்ர்களின் அடையாளமானது.ஆனால் நாம் நினைப்பதைப்போல் கிரேக்கர்களின் திருவிழாக்களின் ஒரு பகுதி விளையாட்டுத்தான் ஒலிம்பிக்கல்ல.உண்மையில் ஒலிம்பிக் போன்று நான்கு விளையாட்டுக்களை பண்டையகாலக்கிரேக்கம் கொண்டிருந்தது.இந்நான்கு விளையாட்டுக்களையும் கிரேக்கர்கள் “Panhellenic” விளையாட்டுக்கள் என அழைத்தார்கள்.




ஒலிம்பிக் இன் நான்கு விளையாட்டுக்களிலும் முக்கியமானது இது ஷியஸ்ஸுக்காக கொண்டாடப்படுகின்றது.இது ஒவ்வொரு நான்குவருடங்களுக்கு ஒருமுறை  நடைபெறும்.


அடுத்த விளையாட்டின் பெயர் Pythian இவ்விளையாட்டு Delphi வருடத்தில் அப்பலோவிற்காக கொண்டாடப்படுகின்றது.நான்குவருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நான்குவருடங்களுக்கு ஒருமுறை  நடைபெறும்.கி.மு 590 இல் இருந்து இது ஆரம்பமாகியது.


Nemean இதுதான் 3 ஆவது விளையாட்டின் பெயர் .
சியஸ் கடவுளுக்காககொண்டாடப்படுகின்றது. Nemea,என்ற வருடத்தில் இது கொண்டாடப்படுகின்றது.இது 2 வருடங்களுக்கு ஒருமுறை போட்டிகள் நடாத்தப்படுகின்றன.இது கி.மு 573 இல் இருந்து ஆரம்பமாகியது.
Isthmian இது 4ஆவது விளையாட்டு.Corinth,வருடத்தில் கொண்டாடப்படுகின்றது.இது  Poseidon கடவுளுக்காக உருவாக்கப்பட்டது.இது 2 வருடங்களுக்கு ஒருமுறை போட்டிகள் நடாத்தப்படுகின்றன.இது கி.மு 582 இல் ஆரம்பமாகியது.


பெண்களுக்காகவும் ஒலிம்பிக் ஸ்ரேடியத்தில் போட்டிகள் நடைபெற்றன இது “Heraea” என அழைக்கப்பட்டது.பெண்களுக்கான போட்டிகள் பிலோப்பஸ்ஸின் மனைவியால் அறிமுகப்படுத்தப்பட்டன.இப்போட்டியில் திருமணமாகாத பெண்களே பங்குபற்ற முடியும்.இதில் பெண்கள் அவர்களின் வயதைக்கருத்தில் கொண்டு 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.பெண்களுக்கு அவர்களது தலைமுடியை கலைத்துவிடவும் தமது உடைகளை தமது முழங்கால் வரை உயர்த்தவுமே அனுமதியளிக்கப்பட்டிருந்தது.ஒலிம்பிக்கில் ஆண்கள் பிறந்தமேனியாக பங்குபற்றினாலும் பெண்கள் ஆடையுடனேயே பங்குபற்றினார்கள்.ஆனால் ஆண்வீர்ர்களுடைய அங்கிகளை அணிந்து போட்டிய்களில் ஈடுபட்டார்கள்.Hippodameia வால் கி.பி 175 இல் Sixteen Women என்ற பெயரையுடைய குழு அமைக்கப்பட்டது.இவர்களை Heraea வை நிர்வாகிப்பதற்கு நியமிக்கப்பட்டார்கள்  

சமயம் சார்ந்த சூழல்கள்,பின்னனிகளில் ஒலிம்பிக் இருந்தமையால் ஒலிம்பிக் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடையறுபடாது தொடர்ந்து நடைபெற்றுவந்தது. வேறொரு நாட்டுடன் யுத்தம் நடைபெற்றகாலத்தில் கூட யுத்தத்தை இடைநிறுத்திவிட்டு ஒலிம்பிக்கை தொடர்ந்தார்கள்.இவர்கள் இதை புனிதப்போர் இடைநிறுத்தமாக அறிவித்தார்கள்.இது “Spondorophoro”  என்று அழைக்கப்பட்டது.இதன் காரணமாக போட்டிகளில் பங்குபற்றும் வீரர்கள் உயிர்ஆபத்துக்கள் தடைகள் எதுவுமின்றி போட்டியில் பங்குபற்றமுடிந்தது.அத்துடன் இக்காலத்தல் உயிர்ப்பலிகள் எதுவும் இடம்பெறவில்லை.கி.மு 480 இல் பிரான்சிய யுத்தத்தின்போது கூட போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றன.அலெக்ஸ்ஸாண்டர்,மகடொன் ஆட்சிக்காலங்கள்,ரோமேனியர்கள் கிரேக்கத்தை ஆட்சிசெய்த போதும்கூட ஒலிம்பிகி தொடர்ந்து நடைபெற்றது.

பண்டைய கிரேக்கம் அளவில் சற்றுச்சிறியதாக இருந்தாலும் அரசியல் காரணிகளில் கிரேக்கம் பெரிய சாம்ராஜ்யமாக விளங்கியதால் ஒலிம்பிக் இலகுவாக பிரபலமடைந்தது.”Olympiad”என்றால் விளையாட்டுக்களின் தொகுப்பு என்று பொருள்.ஒலிம்பிக் கி.மு 776 இல் ஒலிம்பியா என்னுமிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.ஆனால் கி.மு 776 இல் தான் முதலாவது ஒலிம்பிக் நடைபெறவில்லை எனவும் அதற்குமுன்பதாகவே ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருவதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள் ஆனாலும் ஒழுங்காக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி கி.மு 776 இல் தான்  நடைபெற்றது.

ஒலிம்பிக் எப்பொழுது தொடங்கியது என சரியாக தெரியவில்லையாயினும் இதற்கான விடையை கிரேக்கர்கள் புராணக்கதைகளினூடாக கூறுகின்றார்கள்.pelops என்ற மன்னன்,oinomaos என்ற மன்னனின் மகளாகிய Hippodamia வை காதலித்தான் திருமணம் செய்ய எண்ணினான்.இதனால் oinomaos தன் மகளை காதலிப்பவர்களுக்கு சவால் விடுகின்றேன் எந்த இளைஞனாவது என்னை தேரோட்டத்தில் தோற்கடித்தால் தன் மகளை திருமணம் செய்து தருவேன்.ஆனால் மாறாக தோற்றால் அவனின் தலையை துண்டித்து என் மகளின் அறையை அலங்கரிப்பதற்கு பயன்படுத்துவேன் என அறிவித்தான். Pelops , oinomaos வை தோற்கடிப்பதற்காக oinomaos இன் தேருக்கு மெழுகாலான அச்சை இணைத்தான்.போட்டியில் தேர் வேகமாக செல்லும்போது மெழுகு உருகி தேர் இடற மன்னர் oinomaos  தூக்கி வீசப்பட்டு மரணமடைந்தார்.


Pelops , Hippodamia வை திருமணம் செய்தான் இந்த வெற்றியை கொண்டாடும் முகமாகவே ஒலிம்பிக் உருவாக்கப்பட்டது.ஒலிம்பிக் oinomaos இன் இறுதிச்சடங்கிற்காக உருவாக்கப்பட்டது எனவும் கருத்துக்கள் உள்ளன.
ஒலிம்பிக் அதனது ஆரம்பகாலங்களில் அதாவது ஒலிம்பிக் ஆரம்பித்து முதல் 13 ஒலிம்பிக் போட்டிகள் வரை ஓட்டப்பந்தயம் மட்டுமே ஒரேஒரு போட்டியாக இருந்தது.இது “stadion”என்று அழைக்கப்பட்டது.”covoebus elis” என்பவர்தான் “stadion” இல் வெற்றியடைந்த முதலாவது வீரர்.



பங்குபற்றியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்ல ஒலிம்பிக்கின் கௌரவமும் உயர்ந்து சென்றது.இதன் காரணமாக ஒலிம்பிக் அபிவிருத்தியடைந்தது.முதலாவது அரங்கம் கி.மு 560 இல் உருவாக்கப்பட்டுவந்தது.ஆனால் பிரஸ்யன்களின் போரால் கட்டிடப்பணிகள் அரைக்கட்டுமானத்தில்  இடைநிறுத்தப்பட்டன. பின்னர் கி.மு 500 இல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன.


பிரஸ்ஸியங்களுடனான போரில் ஏற்பட்ட வெற்றி கிரேக்கர்களுக்கு கௌரவத்தையும் மிகுந்த உற்சாகத்தையும் அளித்தது.இதனால் இலிம்பிக் கிரேக்க மக்களின் ஒற்றுமையின் அடையாளமாக மாறியது.இக்காலத்தில் கிரேக்கர்கள் ஒலிம்பிக்குடன் தொடர்புடைய கட்டுமான்ங்களை உருவாக்கினார்கள்.சியஸ்சின் மனைவியான hera விற்கு Heraion கோவில் கட்டப்பட்டது.சியஸ்ஸிற்காக உருவாக்கப்பட்ட பிரமாண்டமான தங்கசிலையும் இக்காலத்திலேயே உருவாக்கப்பட்டது.

இதன்போது போட்டியில் பங்குபற்றும் வீர்ர்களைப்பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. வீரர்களுக்கான குளியல் அறைகள்,தங்குமிடங்கள்,நீச்சல்தடாகங்கள் போன்றவை அமைக்கப்பட்டன.வருகைதரும் முக்கிய நபர்களுக்காக தங்குமிடங்களும் அமைக்கப்பட்டன.




3 வதும் இறுதியுமான ஸ்ரேடியம் கி.மு 350 இல் அமைக்கப்பட்டது.இதில் 45 000 நபர்கள் ஒரே  நேரத்தில் போட்டிகளை பார்வையிடமுடியும்.






பல ஆண்டுகளாக அதாவது முதல் 13 ஆடுகளாக ஒலிம்பிக் 1 நாள்  கொண்டாட்டமாகவே இருந்தது.காரணம் ஒரு விளையாட்டு மட்டுமே  அப்பொழுது இருந்தது.பின்பு ஒலிம்பிக்கின் வளர்ச்சியினூடகவெ நாட்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.5 ஆம் நூற்றண்டுகள்வரை 5 நாட்கள் இடம்பெற்ற ஒலிம்பிக்கில் என்னென்ன நிகழ்சிகள் இடம்பெற்றன?



1 ஆம் நாள்-இன்னாளில் போட்டிகள் எதுவும் இடம்பெறவில்லை.இன் நாளில் போட்டியாளர்கள்,நடுவர்களால் உறுதிமொழிகள் எடுக்கப்பட்டன.போட்டியாளர்கள் தம்மை பதிவு செய்துகொண்டார்கள்.


2 ஆவது நாள்-இது ஆண்களுக்கு முக்கியமான நாளாகும்.இன் நாளில் குத்துச்சண்டை,pakaration குத்துச்சண்டை இடம்பெற்றன.

3 ஆவது நாள்-Hecatombe என அழைக்கப்படும் விழா நடைபெறும்.ஸீயஸ்ஸை திருப்திப்படுத்துவதற்கு 100 எருதுகள் பலியிடப்பட்டன.இதற்கு அடுத்த போட்டியாக ரத ஓட்டம் இடம்பெற்றது. Pentathlon என்ற 5 விளையாடுக்களின் தொகுப்பு இடம்பெறும்.இது ஸ்பிரின்ட்,ஈட்டி எறிதல்,தட்டெறிதல்,நீளம் பாய்தல் என்பவற்றைக் கொண்டது.

4 ஆம் நாள்-ஓட்டப்பந்தயம் மாத்திரமேஇன்நாளில் இடம்பெற்றது.
stadion-200m
diaulos-400m
dolichos-2000m


5 ஆம் நாள்-இதை ஒலிம்பிக்கின்  நிறைவு நாள் கொண்டாட்டம் எனவும் கொள்ளலாம்.மற்றைய நாட்களை விட முடிவடைய நீண்ட நேரத்தை இது எடுத்துக்கொள்ளும்.வெற்றியடைந்த வீரர்கள் ஒலிவ் இலைகள் அணிவித்துக்கௌரவிக்கப்பட்டார்கள்.பரிசில்கள் வழங்கப்பட்டன.






கி.மு 480 இல் வழங்கப்பட்ட ஒலிம்பிக் மெடல்கள்
ஒலீவ் இலைகள்









ஆரம்பகால ஒலிம்பிக் போட்டிகளில் மரதன் ஓட்டம் இருக்கவில்லை இது 1896 இல் எதேன்ஸ்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது.ஸ்பார்ட்டியன்ஸ்களை பெர்ஸியங்கள் வென்றுவிட்டார்கள் என்றசெய்தியை 2 நாட்கள் நிற்காமல் 240 கி.மீ தூரம் யுத்தம் நடைபெற்ற மரதோன் என்ற இடத்தில் இருந்து ஓடிச்சென்று மன்னனிடம் தெரிவித்தான் ஒரு கிரேக்கவீரன் “pheidippldes”அவன் கூறிய இறுதிவார்த்தைகள் “joy to you we’ve won” இந்தவார்த்தைகளுடன் அவன் உயிர் பிரிந்தது.இதில் சிலர் மாற்றுக்கருத்துக்களையும் முன்வைக்கின்றார்கள் அதாவது pheidippldes 240 கி.மீ ஓடவில்லை அவன் 619 கி.மீ தூரத்தை 100 மணித்தியாலங்களில் கடந்திருக்கவேண்டும்
pheidippldes இன் சிலை இன்று


 இதற்கு அவர்கள் கூறும் காரணம் மரதன் ஓட்டப்போட்டியில் ஒரு சாதாரண வீரன் இறக்கும் நிகழ்தகவு 1/50 000.ஒலிம்பிக் கிரேக்கர்களின் நாட்காட்டிவரை செல்வாக்கு செல்வாக்கு செலுத்தியது.கிரேக்க நாட்காட்டி ஒலிம்பிக்கை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.நாட்காட்டி நான்கு வருடங்களைக்கொண்டது. Elis,Delphi,Nemea,Corinth இவைதான் அந்த நான்கு வருடங்களின் பெயர்கள்


ஒலிம்பிக்கில் விளையாட்டுக்கள் அறிமுகமான காலவரிசை



வருடம்



விளையாட்டுக்கள்

776 BC

1st ஒலிம்பிக்
Stadium race

724 BC

14th ஒலிம்பிக்
double-stadium race

720 BC

15th ஒலிம்பிக்
long-distance race

708 BC

18th ஒலிம்பிக்
Pentathlon

708 BC

18th ஒலிம்பிக்
Wrestling

688 BC

23rd ஒலிம்பிக்
Boxing

680 BC

25th ஒலிம்பிக்
4-horse chariot race

648 BC

33rd ஒலிம்பிக்
horse race

648 BC

33rd ஒலிம்பிக்
Pankration

520 BC

65th ஒலிம்பிக்
race in armor

408 BC

93rd ஒலிம்பிக்
2-horse chariot race

ஒலிம்பிக்கில் வெற்றியடைந்த வீரர்கள் ஒலிவ் இலையினால் ஆக்கப்பட்ட கிரீடம் அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார்கள். “Zeus”இன் ஆலயத்திற்கு பின்புறம் வளர்ந்திருந்த புனிதமான ஒலிவ் மரத்திலிருந்தே முடிசூட்டுவதற்கான இலைகள் பெறப்பட்டன.இவ் ஒலிவ்வை உருவாக்கியவர் ஒலிம்பிக்கை உருவாக்கிய “Hercules” என்று சமய ரீதியில் நம்பப்படுகின்றது.வெற்றியடைந்தவீர்ர்கள் மைதானத்தில் அணிவகுத்து அழைத்து செல்லப்பட்டார்கள் வெற்றிவீரர்களுக்காக இசை இசைக்கப்பட்டன,பாடல்கள் பாடப்பட்டன.அத்துடன் அதிக வெற்றிபெற்ற வீரரின் பெயரினால் அவ்வாண்டின் பெயர் அழைக்கப்பட்டது.


கி.மு 850 sulla என்ற பெயரை உடைய ரோமேனிய இராணுவ ஜெனரல் 175 ஆவது ஒலிம்பிக்கை கிரேக்கத்தில் இருந்து ரோமுக்கு மாற்றினார்.175 ஆவது ஒலிம்பிக் ரோமில் நடைபெற்றது.கிரேக்கத்தில் ரோமின் ஆட்சி நடைபெற்ற போது ரோமின் அரசியல்,கலாச்சாரம்,பொருளாதார நிலைமைகளால் ஒலிம்பிக்கில் சிறு மறுமலர்ச்சியே ஏற்பட்டது என கூறலாம்.ஒலிம்பிக் தனது பாரம்பரிய ஒலிம்பிக்கில் இருந்து அபிவிருத்தியடைந்தது.ஒலிம்பிக் விளையாட்டுகள் சாதாரணமக்கள் பயப்படும் விளையாட்டுக்களாக மாறின.வாட்போர் வீரர்கள்போட்டிகளில் பங்கு பற்றினார்கள்.குத்துச்சண்டை வீரர்கள் இரும்பாலான கையுறைகளை அணிந்து கொண்டார்கள்.விளையாட்டுக்களம் வன்முறைக்களமாக மாறியது.பார்வையாளர்கள் ஒலிம்பிக் வளாகத்தில் நடைபெறும் வன்முறைக்கும் ரத்தத்திற்கும் மிகுந்த தாகத்துடன் ஆர்ப்பரித்தார்கள்.
sulla 


அத்துடன் ஒலிம்பிக் சர்வதேசியமயமாக்கப்பட்டதும் இக்காலத்தில்தான்.சியஸ்ஸின் சிலை புதுப்பிக்கப்பட்டது வீரர்கள் நன்கு கவனிக்கப்பட்டார்கள்.ஒலிம்பிக் கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டன.கிரேக்கர்களுக்கு அனேகமான இடையூறுகளை தொடர்ந்து வழங்கிவந்தவர்கள் உரோமேனியர்கள் இவர்கள் சியஸ்ஸின் புனிதத்தன்மையை கெடுக்கும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.”rhea” என்ற கடவுளின் கோவில் agustus இன் கோவிலாக மாற்றமடைந்தது.ஒலிம்பிக்கிற்காக பணியாற்றிய அனைவரையும் ரோமேனிய ஜெனரல் சுல்லா பணிநீக்கம் செய்தான்.

ரோமேனிய அரசர் Claudius இவர்  சியஸ்கடவுளின் தங்கஉருவ சிலையை பெயர்த்து எடுத்துவந்தார்.சியஸ்ஸின் தலையை வெட்டி எறிந்துவிட்டு தனது உருவத்தின் தலையை நிர்மானிக்க திட்டமிட்டார் ஆனால் சிலை கப்பலில் கொண்டுவரப்படும் சமயம் மிக பலமான மின்னலால் கப்பல் தாக்கப்பட்டது.
Theodosius

ஒலிம்பிக் என்றபிரபலமான விளையாட்டு கி.மு 776 முதல் கி.பி 393 வரை 1170 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்றது.ஆனால் கி.பி 393 இல் கிறீஸ்தவ மதத்தை சேர்ந்த உரோமை சேர்ந்த மன்னன் “Theodosius” ஆடைகளை அவிழ்த்துவிட்டு விளையாடும் விளையாடு எல்லாம் ஒரு விளையாட்டா என்று சடார் என்று ஒலிம்பிக்கை நிறுத்திவிட்டார்.இதன் பின்னர் 1500 வருடங்களாக ஒலிம்பிக் தொடர்ந்து நடைபெறவே இல்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்