ஒரு நகரத்தின் அனைத்து மக்களும் ஒரே பில்டிங்கிற்குள் இருந்தால் எப்படி இருக்கும்?

 


ஒரு நகரத்தின் அனைத்துமக்களும் ஒரே கட்டிடத்திற்குள் இருந்தால் எப்படி இருக்கும்?அந்தக்கட்டத்திற்குள் ரெஸ்ரோரன்ற்,ஜிம்,பார்க்,ஹாஸ்பிட்டல் என அனைத்துமே இருந்தால் எப்படி இருக்கும்? வேலைக்கு செல்லும்போது ட்ராபிக்கில் அகப்பட்டு நீண்ட நேரம் காத்திருக்கதேவையில்லை ,தியேட்டருக்கு போவது என்றாலும் உடனே சென்றுவிடலாம்,நினைக்கவே மலைப்பாக இருக்கின்றதல்லவா?இதெல்லாம் சாத்தியமா ஏதோ ஹாலிவூட் படமா என எண்ணத்தோன்றுகிறதா? ஆம் இதெல்லாம் பொய் அல்ல உண்மைதான் உலகின் ஒரே பில்டிங்கில் வசிக்கும்மக்களைப்பற்றித்தான் பார்க்கப்போகின்றோம்


இந்தவிடயமெல்லாம் வெளி உலகத்திற்கு நீண்ட நாட்களுக்குத்தெரியவே இல்லை ஆனால் அங்குவாழும் ஒரு பெண் தனது டிக்டாக் வீடியோவில் இந்தவிடயங்களைத்தெரியப்படுத்தியிருந்தார் அந்த வீடியோ வைரலாகியது இதன்பின்னர்தான் உலகிற்கு இப்படி ஒரு நகரம் இருப்பதே தெரியவந்துள்ளது


இந்த நகரத்தின் பெயர் விஸ்டர் இந்த நகரம் அலாஸ்காவில் அமைந்திருக்கின்றது அலாஸ்கா இரத்தம் உறையும் அளவிற்கு மிகவும் குளிரான பிரதேசம் இந்த நகரத்தில் ஒட்டுமொத்தமாகவே 220 சிட்டிசன்கள்தான் வசிக்கின்றார்கள் அவர்கள் சாப்பிங்க்,தியேட்டர்,ஸ்கூல் ஆபிஸ் என எங்குசெல்வது என்றாலும் லிப்டில் இருக்கும் நம்பர்களை அழுத்தினால்போதுமானது.14 மாடிகளைக்கொண்டிருக்கும் பெஜிச் டவர் என்றழைக்கப்படும் இந்த கட்டிடத்தினுள்தான்  நகரத்தில் வசிப்பருக்கு பெரும்பாலும் தேவையான அனைத்துமே உருவாக்கப்பட்டிருக்கின்றது.


ஒரு போலீஸ் ஸ்டேசன் 2 சூப்பர் மார்க்கெட்கள்,இண்டோர் பிளேகிரவுண்ட்,ஆபிஸ்,லவுண்ரி,போஸ்ட் ஆபிஸ் அதோடு கிளினிக்

இதைவிட பேஸ்மெண்டில் ஒரு சர்ச்சும் இருக்கின்றது.இதனால் இங்குவசிக்கும் சிட்டிசன்கள் மாதக்கணக்காக வெளியே செல்லாமல் இதனுள்ளேயே இருப்பார்கள்.அதிகமான குளிர்காரணமாக இவர்கள் வெளி உலகத்துடன் தொடர்புகொள்வதற்கு இருக்கும் ஒரே ஒரு வீதியும் பனியால் மூடப்பட்டுவிடும் எனவே இவர்கள் இந்தக்கட்டிடத்துக்குள்ளேயே தம் வாழ்க்கையை தொடருகின்றார்கள்.கோடைகாலங்களில் மீன் பிடித்தல்தான் இவர்களது தொழிலாக இருக்கின்றது அதிகமானவர்கள் கோடைகாலத்தில் மீன் பிடித்தலையே தொழிலாக செய்கின்றார்கள்.இந்த நகரத்திற்கு அரசு எந்த ஒரு பப்பிளிக் ட்ரான்ஸ்போற்ட்டையும் உருவாக்கவில்லை இதனால் காரிலோ அல்லது கப்பலிலோதான் இந்த நகரத்திற்கு பயணிக்கமுடியும் கோடைகாலத்திலும் மிக அதிக நேரம் மழைபெய்துகொண்டே இருக்கும்.



நவம்பரில் இருந்து பெப்ரவரி வரை தொடர்ச்சியாக 4 மாதங்கள் சூரியனையே இந்த நகரத்தில் இருப்பவர்கள் பார்க்கமுடியாது.இந்த நகரத்துக்கு நுழைவதற்கு பயன்படுத்தும் ஒரே ஒரு வீதியும் பல குகைவழிப்பாதைகளைக்கொண்டது இரவில் இந்த குகைவழிப்பாதைகள் மூடப்பட்டுவிடும் இதனால் குளிர்காலத்தில் இந்த நகரத்தில் குற்றங்கள் மிகமிகக்குறைவாகவே காணப்படும் காரணம் ஏதாவது தவறுசெய்துவிட்டு தப்பிச்செல்லவே முடியாது வெளியே சென்றால் குளிரிலேயே உறைந்து மரணிக்கவேண்டியதுதான்.



ஏதாவது இடத்திற்குசென்று நீங்கள் தொலைந்துவிடவேண்டும் என்று நினைத்தால்  நிச்சயம் நீங்கள் செல்லவேண்டிய இடம் இதுதான்.இங்கே வாழும் மக்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் மிக நட்பாகவே பழகுகின்றார்கள் மாணவர்கள் டவுட் என்றால் உடனே ஓடிச்சென்று ஆசிரியரின் கதவைத்தட்டுகின்றார்க்ள்.சில மாதங்களில் மட்டும் அனைத்து கடைகளும் இங்கே மூடப்பட்டிருக்கும் அவ்வாறான நேரங்களில் தனிமை அவர்களை வாட்டும் உடனே ஒவ்வொருவரும் வேறு வேறு தளத்துக்கு சென்று அங்கிருப்பவர்களுடன் தங்கள் நாளை மகிழ்ச்சியாக செலவிடுகின்றார்கள்.


மிகவும் குளிரான நாளில் பனிப்பொழிவு சுமார் 20 அடிகள்வரை உயரும் அதோடு 60 மைல் வேகத்தில் குளிர்காற்றும் இங்கே வீசிக்கொண்டிருக்கும் இதன் காரணமாக பனிக்கரடிகள்கூட வெளியே வருவதில்லை அதோடு பனிக்கரடிகள் இங்கே அதிகம் என்ற காரணத்தினாலும் பிளே கிரவுண் பில்டிங்கின் உள்ளேயே அமைக்கப்பட்டிருக்கின்றது



இங்கே விவசாயம் மற்றும் காய்கறிகள் உற்பத்திசெய்வதற்காக மிகப்பெரிய தனி அறை ஒன்றை உருவாக்கியிருக்கின்றார்கள்,கோடைகாலம் தொடங்கப்போகின்றது என்றவுடன் காய்கறிகளை நட ஆரம்பித்துவிடுவார்கள் சூரிய ஒளிக்காக ஸ்பெஸலாக உருவாக்கப்பட்ட மின் விளக்குகளைப்பயன்படுத்துகின்றார்கள் இவற்றின் மூலமே இங்கு விவசாய உற்பத்தி நடைபெறுகின்றது

வாழ்வதற்கு இவளவு கடினமான இடத்தில் எதற்காக மக்கள் வசிக்கின்றார்கள் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம் ஆனால் இவர்கள் தாமாக விரும்பி இங்கே குடியேறவில்லை.1943 இல்தான் இந்த நகரம் உருவாக்கப்பட்டது அமெரிக்க ராணுவத்தின் காம்ப் ஒன்றை நிறுவுவதற்காக தனிமைப்படுத்தப்பட்ட இடம் ஒன்று தேவைப்பட்டபோதுதான் இந்த இடம் அதற்காக தெரிவுசெய்யப்பட்டது.எதிரிகளின் கண்களில் அகப்படாத மலைகளால் சூழப்பட்ட பாதுகாப்பான பிரதேசம்தான் உண்மையில் தேவையாக இருந்தது ஆனால் இந்த இடம் இயற்கையாகவே அவர்கள் எதிர்பார்த்ததுபோல் அமைந்திருந்தது அதோடு மைனஸ் டிகிரி வெப்ப நிலையில் குளிர் இருக்கும்போது இங்கே இருக்கும் கடல் நீர் உறைவதில்லை எனவே இராணுவத்தளபாடங்களை கப்பல் மூலம் நகர்த்துவதற்கு இந்த இடம் மிகப்பொருத்தமாக இருந்தது.

அதோடு இந்த நகரத்துக்கான வீதி 3 கிலோமீட்டர் நீளத்திற்கு மலையைக்குடைந்து இராணுவத்தினரால் அமைக்கப்பட்டது.இராணுவ காம்பை அடுத்து ஒரே உருவில் கட்டப்பட்ட சிறிய சிறிய வீடுகள் அமைக்கப்பட்டன ,இப்போது அங்கு காணப்படும் பக்னர் பில்டிங்க் பொறியியலாளர்களுக்காக கட்டப்பட்டது.தற்போது மக்கள் வசித்துவரும் 14 மாடிகளைக்கொண்ட ஹோஜ் பில்டிங்தான் அப்போது இராணுவ வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டது பின்னர் இந்த பில்டிங்க் பெஜ்ஜி டவர் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.அமெரிக்க பாராளுமன்றத்தைச்சேர்ந்த ஒருவர் விமானவிபத்தில் இங்கே காணாமல்போனார் இதன்பின்னரே இந்தக்கட்டடத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.இந்தக்கட்டிடத்தை அண்டன் ஆண்டர்சன் என்ற பொறியியலாளர் வடிவமைத்திருக்கின்றார்.


1964 மார்ச் 27 இல் அலாஸ்காவில் 9.2 ரிக்டர் அளவில் பாரிய நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டது 1200 அணுகுண்டுகள் வெடித்தால் என்ன சக்தி வெளிப்படுமோ அந்த அளவுக்கு இந்த நில நடுக்கம் பாதிப்பை ஏற்படுத்தியது இந்த நில நடுக்கம் ஏற்படுத்திய சுனாமி அலையில் அந்த நகரமே துடைத்தெறியப்பட்டது தற்போது இருக்கும் 14 மாடிகளைக்கொண்ட கட்டிடம்கூட பாரிய சேதமடைந்தது.இதனால் இராணுவம் உடனடியாக அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டது ஆனால் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய மக்கள் அங்கேயே தங்கிவிட்டார்கள்.
















1969 இல் இது தனி நகரம் என்ற அங்கீகாரத்தைப்பெற்றுக்கொண்டது.இந்த சம்பவம் நடந்தபோது நகரத்தில் தங்கியிருந்த பொறியியலாளர்கள் மற்றும் வேலைசெய்தோரின் பிள்ளைகள்தான் இப்போது இந்த நகரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.பக்னர் பில்டிங்க் இப்போதும் உடைந்த நிலையில்தான் காணப்படுகின்றது.இதை மீண்டும் கட்டுவதற்கு இடிக்கவேண்டி ஏற்படும் இதனால் ஏற்படும் தூசுக்களால் அதிக பாதிப்புக்கள் ஏற்படும் அதோடு அதற்கான பொருட்களைக்கொண்டுவருவதும் மிகக்கடினமான வேலை எனவே அந்த பில்டிங்கை மக்கள் அப்படியே விட்டுவிட்டார்கள்.பாதிப்படைந்த பெஜ்ஜி டவர்ஸை மட்டும் மக்கள் சரிசெய்து இன்றுவரை பயன்படுத்திவருகின்றார்கள்.


இங்கே வசிக்கும் சிலர் வேலைசெய்வதற்காக இந்த   நகருக்கு 105 கிலோமீட்டர் தொலைவில்  இருக்கும் அஞ்சோரா எனப்படும் நகரிற்கு செல்கின்றார்கள் ஆனால் அந்த நகரத்திற்கு செல்வதற்கும் குகைவழிப்ப்பாதைக்கு வருடத்திற்கு 500 டாலர்கள் பணம் செலுத்தவேண்டும்.கோடைகாலத்தில் இந்த நகரம் சுற்றுலாப்பயணிகளால் நிரம்பிவழிகின்றது உலகின் பல்வேறுபாகங்களில் இருந்து இங்கே மக்கள் வந்துகொண்டிருக்கின்றார்கள்,கடல்,ஏரிகள்,காடுகள்,பனிக்கரடிகள்,கடல்சிங்கம் என சுற்றுலாப்பயணிகளைகவரும் பலவிடயங்கள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன அதோடு ஆழ்கடல் மீன்பிடியும் இங்கே மிகப்பிரபலம்

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இங்கே வசித்துவந்தமக்கள் வேறு நகரங்களுக்கு இடம்பெயர ஆரம்பித்துள்ளார்கள் இதனால் 200 அப்பார்ட்மெண்ட்கள் இப்போது காலியாக உள்ளன.அதோடு பலர் இந்த அப்பார்ட்மெண்ட்களை வாங்கிக்கொண்டுமிருக்கின்றார்கள்.



மிக பிஸியாக சுற்றிக்கொண்டும் இந்த உலகில் இருந்து கொஞ்சம் தனிமைவேண்டுமாக இருந்தால் நிச்சயம் இந்த இடம்தான் யாருக்கும் முதலாவது தெரிவாக இருக்கமுடியும்





கருத்துரையிடுக

0 கருத்துகள்