தோள் மூட்டு இறுக்கம்- Frozen Shoulder என்றால் என்ன?

நீங்கள் நீண்ட காலமாக தோள் மூட்டு வலியால் அவதியுகின்றீர்களா? தோள் மூட்டை அசைக்க முடியாமல் அல்லல் படுகின்றீர்களா? மாத்திரைகளையும் மருந்துகளையும் பாவித்து கூட எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லையா?

தோள் மூட்டு இறுக்கம் இன்று அனேகமானவர்களை பாதிக்கின்ற தோள் மூட்டில் ஏற்படுத்தப்படும் கடுமையான வலியுடன் கூடிய ஒரு அசாதாரண நிலைமையாகும்.இது தோள் மூட்டில் ஏற்படும் அசாதாரணமான மாற்றங்களால் தோள்மூட்டு சூழவுள்ள மென்சவ்வு சிதைவடைந்து அதிக வலியை உண்டாக்கி அதன் காரணமாக முழுமையான இயக்கம் நாளுக்குநாள் குறைவடைந்து நாளடைவில் புயத்தினை நிரந்தரமாக அசைக்கமுடியாத அசாதாரண நிலை தோன்றல் தோள்மூட்டுஇறுக்கம் எனப்படும்.

 தோள் மூட்டு வலியும் மூட்டு உறைவடைதலும் பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களையே அதிகம் பாதிக்கின்றது என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. பின்வரும் பல்வேறுபட்ட காரணங்களும் தோள் மூட்டு வலிக்கு பிரதான பங்களிப்பை செய்கின்றன.

  • அதிக அளவிலான தோள்மூட்டு பயன்பாடு (Repetitive overuse of shoulder)
  • தோள்மூட்டு மீது அடிவிழுதல்(Direct Trauma )
  •  வாகன விபத்துக்கள்
  • வயதாதல்
  • மந்தமான ஊட்டச்சத்து (Poor Nutrition )
  • ஒழுங்கான உடற்பயிற்சியின்மையும் நவீன வாழ்க்கை முறையும் (Sedentary life style)
  • தோள்மூட்டு தசைகள் பாதிப்படைதல்(Weakness of the muscle around Shoulder joint )
  • நீரழிவு நோய் (Diabetes )
  • Osteoarthritis 
  • புகைப்பிடித்தல் 

மேற்குறிப்பிட்ட காரணிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தோள்மூட்டு வலிக்கும் தோள்மூட்டு இறுக்கத்துக்கும் காரணமாக அமைகின்றன. பல்வேறு துறைகளில் கூலியாட்களாக வேலை செய்பவர்களுக்கும்,தொழிற்சாலைகளில் பாரிய இயந்திரங்களை இயக்கும் தொழிலாளர்களுக்கும்,அதிகளவு கரும்பலகையில் எழுதி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும்,வீடுகளில் அதிக உடைகளை கைகளால் கசக்கி கழுவும் பெண்களுக்கும் தோள்மூட்டு இறுக்கம் அதிக அளவில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

 தோள் மூட்டுகளில் அடிபடும் போது அல்லது வாகன விபத்தின் போது தோள் மூட்டில் ஏற்படும் சேதங்கள் தோள் மூட்டின் இயக்கத்தை அதிகளவு பாதிக்கின்றது. தோள்மூட்டில் ஏற்படும் கடும் வலியின் காரணமாக பலர் தோள்மூட்டை அசைக்காது வைத்திருப்பதன் மூலம் நாளடைவில் இந்த அசையாதநிலையே தோள்மூட்டு உறைவடைதலுக்கு முக்கிய பங்களிப்புச்செய்கின்றது.

வயதாகும்போது தோள்மூட்டை சூழ உள்ள தசை நார்களின் உறுதி குறைவடைவதால் சிறிய அளவிலான செயற்பாடுகளும்கூட தோள்மூட்டில் வலியை ஏற்படுத்தி தோள்மூட்டு உறைவடைவதில் முக்கிய பங்களிப்பு செய்கின்றது. அதோடு வயதாகும்போது தோள் மூட்டின் இரு என்புகளுக்கு இடையே காணப்படும் உராய்வுநீக்கி பாய்பொருளின் அளவு குறைவடையும் போது தோள்மூட்டுக்கள் ஒன்றோடொன்று உராய்வடையும். இதன்போது வலி ஏற்படுத்தப்பட்டு மூட்டுக்களின் சீரான இயக்கம் பாதிக்கப்பட்டு காலப்போக்கில் அசையும் ஆற்றல்குறைந்த மூட்டாக மாறும்


பெரும்பாலும் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தினசரி வேலைகளில் ஈடுபடும்போது தோள்மூட்டானது அதிகளவு இயக்கத்திற்கு உட்படுவதனால் தோல்மூட்டை சூழவுள்ள தசைகளிலும் தசை என்புடன் இணையும் பகுதியில் வெடிப்புக்கள் தோன்றி வலியை ஏற்படுத்தும். இதன்காரணமாக பெண்கள் பாதிக்கப்பட்ட தோள்மூட்டுப்பகுதியை அசையாமல் வைத்திருப்பதன் காரணமகாக தோள்மூட்டின் சீர்த்தன்மை படிப்படியா குறைவடையும்.இதனால் அன்றாடம் தலைவார்ப்பதிலும் (தலைக்குளியல்),கையை உயர்த்துவதிலும்,ஆடைகள் அணிவதிலும் பல சிரியமங்கள் ஏற்படும்.


உங்கள் வீட்டிலும் இதுபோன்ற நிலைமையை யாராவது எப்போதாவது கண்டிப்பாக உணர்ந்திருப்பீர்கள்.தோள்மூட்டு உறைதலை ஆரம்பத்திலேயே இனங்கண்டு அதற்குரிய இயன் மருத்துவ சிகிச்சை உரியவேளையிலே பெற்றுக் கொண்டால் இந்த நோயின் தாக்கத்தை பெருமளவு   குறைத்து ஒரு சிறந்த ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம் 

இயன்மருத்துவத்தின் பல்வேறுசிகிச்சை முறைகள் இன் நோய் நிலமையின் தாக்கத்தைக்கட்டுப்படுத்துவதிலும் குணப்படுத்தலிலும் உதவுகின்றன.

அவற்றுள் சில சிகிச்சை முறைகள் 

மின்னியல் சிகிச்சை முறை (Electrotherapy)

கடும் வேதனையை உருவாக்கும் வலி நிவாரணியாக இம்முறை பயன்படுத்தப்படுகின்றது.

செங்கீழ் கதிர்ப்பு சிகிச்சை முறை (Infrared Therapy)

பாதிக்கப்பட்ட இடத்திற்கான ரத்த ஓட்டத்தை சீர் செய்து அவ்விடத்திற்கு போசாக்கு விநியோகத்தைஅதிகரிப்பு சேதமடைந்த இழையங்களை திருத்தி அமைக்கின்றது. அத்துடன் அவ்விடத்தில் தேங்கி உள்ள கழிவுப்பதார்ந்தங்களை அகற்றுவதன் மூலம் வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.

 உடற்பயிற்சி (Mobility Exercise and Strengthening Exercises ) 

Shoulder mobility உடற்பயிற்சிகள் தோள்மூட்டின் அசையும் ஆற்றலை அதிகரிக்க உதவுகின்றது.Strengthening exercises  தோள் மூட்டை சூழவுள்ள வன்கூட்டுத்தசைகளைப் பலப்படுத்தி தோள்மூட்டானது சேதமடைவதில் இருந்து பாதுகாப்பளிக்கிறது.

Ultra sound therapy

பாதிக்கப்பட்ட இடத்திற்கான ரத்த ஓட்டத்தை சீர் செய்து அவ்விடத்திற்கான போசாக்கு மூலங்கங்களின் விநியோகத்தை அதிகரித்து சேதமடைந்த இழையங்களை திருத்தி அமைகின்றது.(Improve the healing process of the damage tissue).

Hot packs

பாதிக்கப்பட்ட இடத்திற்கான ரத்த ஓட்டத்தை சீர் செய்து அவ்விடத்திற்கான போசாக்கு மூலங்கங்களின் விநியோகத்தை அதிகரித்து சேதமடைந்த இழையங்களை திருத்தி அமைகின்றது கஅத்துடன் அவ்விடத்தில் தேங்கி உள்ள கழிவுப்பதார்ந்தங்களை அகற்றுவதன் மூலம் வலியிலிருந்து நிவாரணம் பெறவும் இம்முறை உதவுகிறது.

முறையான உடற்பயிற்சியும் ஒழுங்கான ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களும் தோள் மூட்டுவலி ஏற்படாமல் தடுக்க கூடிய எளிய வழி முறைகளாகும். நீண்டகால தோள் மூட்டு வலியால் அவதியுறுபவர்கள் ஒரு சிறந்த திறமையான இயன் மருத்துவரை அணுகி முறையான உடற்யிற்சி சம்பந்தமான ஆலோசனைகளையும் ,முறையான இயன்மருத்துவ சிகிச்சைகளைப்பெறுவதன் மூலமும் சிறந்த பலன்களை பெற்றுக்கொள்ளலாம்.

நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம்






கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. மிகவும் அழகான சிறந்த பதிவு.நன்றி உங்கள் சேவைக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்

      நீக்கு