சார்பட்டா பரம்பரை

 சார்பட்டா பரம்பரை ~ Not a review


1962 காலகட்டத்தில் Sony Liston ஒரு மிகப்பெரிய பாக்சராக வலம்வந்தார். பாக்சிங்கைவிட அவரது கர்வம் சற்றே மகுதியாக இருந்தப்படியால், அவரது வெற்றியை மக்களால் கொண்டாட முடியவில்லை. நாளாகஆக அவரின் தற்பெருமை, தானென்ற கர்வம் தலைக்கேறி, உடல் முழுவதும் பரவி அவரை ஆட்கொண்டே விட்டது. அதனாலேயே மாபியா தொழிலும் குதித்தார் லிஸ்டன். ஒரு பக்கம் பாக்சிங், இன்னொரு பக்கம் மாபியா னு ஏரியாவையே மிரள வைத்துக்கொண்டிருந்த சோனி லிஸ்டனுக்கு அப்போது ஒரு பெரிய பாக்சிங் பைட் வந்தது. அது அப்போதைய ஜாம்பவானான பேட்டர்சனுடனான போட்டி. 


ஊரெங்கும் பதாகைகள் வைத்து Patterson vs Liston என்று பிரபலபடுத்தினர்.


எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த மேட்ச் முடிந்தது. ஆனால் எதிர்ப்பார்த்தவர் வெற்றி பெறவில்லை. 


பாட்டர்சனை லிஸ்டன் வீழ்த்தினார்.அதுவும் நாக்அவுட்டில். அவர் அப்போட்டியில் வெற்றி பெற்றதாய் நினைத்து மிதப்பில் மிதந்துக்கொண்டிருந்தார். ஆனால் உண்மையாலும் அவர் வெற்றி பெறவில்லை, அவரின் கர்வம் தான் அவரை வெற்றிக்கொண்டது. 


நாளாக ஆக லிஸ்டனின் தலையீடு பாக்சிங் இல் மிகுதியாக இருந்தது. இதனால் பொறுக்கமுடியாத பாக்சிங் சீனியர்ஸ் எல்லாம் முடிவு பன்னி மீண்டும் பத்து மாதம் கழித்து லிஸ்டனிடம் பாட்டர்சனை மோத வைத்து லிஸ்டன் கொட்டத்தை அடக்க ஏற்பாடு செய்தனர். 


மீண்டும் மேட்ச் ஆரம்பம். 


அதே பாட்டர்சன் vs லிஸ்டன் 


இம்முறை ஒரே ரௌண்டில் ஒரே நாக்அவுட்டில் பாட்டர்சனை படுக்க வைத்தார் லிஸ்டன். 


அவன் சும்மாவே ஆடுவான். இப்போ கால்ல சலங்கைய வேற கட்டி விட்டாங்கனு சொல்ற மாரி லிஸ்டனின் ஆட்டமும் ஆகங்காரமும் நீடித்துக்கொண்டே போனது. 


February 24, 1964 


வளர்ந்து வரும் வாலிபன் க்ளாசியஸ் கிளே வுடன் லிஸ்டன் மோதப்போவதற்கான போட்டியோட Pre Match Press conference நடைபெறுகிறது. 


லிஸ்டனை அமெரிக்கர்களுக்கு பிடிக்கலை என்றாலும் லிஸ்டனின் போட்டியை எல்லோரும் ரசித்தார்கள். தாறுமாறாக மூஞ்சியை பஞ்சர் ஆக்குவது அல்லது ஒரே அடியில் எடுத்த எடுப்பில் நாக்அவுட் செய்வது. இப்படி இருந்தால் யாருக்கு தான் லிஸ்டனின் போட்டி பிடிக்காமலிருக்கும். அப்போது க்ளாசியஸ் கிளே வை, "ரெண்டு ரவுன்டு கூட தாண்ட மாட்டான், பிள்ளக்கா பையன்" என்று கலாய்த்தார். 


அதே இடத்தில் மைக்கை எடுத்து ஒரு லைவ் மேட்சிற்கு கமெண்ட்டரி கொடுப்பது போல், அடுத்த நாள் மேட்ச் எப்படி இருக்கும். அதில் லிஸ்டன் எப்படி தோற்பான் என்று கமெண்ட்டரி செய்தார் க்ளாசியஸ். 


இந்த போட்டியின் போது க்ளே வின் கூட இருந்த பலரே லிஸ்டன் பக்கம் சப்போர்ட் செய்தனர். 


அடுத்த நாள் சூரிய உதயமானது. 


பிப்ரவரி 25, 1964 


மக்கள் கூட்டம் மியாமி கடற்கரையில் திரண்டு கிடந்தது. எல்லாரும் எதிர்பார்த்த மேட்ச் ஆரம்பமானது. ஆனால் இந்த முறையும் எல்லோரும் எதிர்பார்த்தவர் வெற்றி பெறவில்லை. 


ஆம் லிஸ்டன் இம்முறை வெற்றி பெறவில்லை. க்ளாசியஸ் க்ளே விட்ட பன்ச்சில் படுத்து கிடந்தார். வெற்றி பெற்றது க்ளாசியஸ் க்ளே!!!!!! 


ஒரு மிகப்பெரிய அசைக்கமுடியாத என்று மக்கள் நினைத்துக்கொண்டிருந்த பாக்சரை, ஒரு 22 வயசு பையன் நாக்அவுட் ஆக்கிட்டான். 


இனிமே ஊரு உலகமெங்கும் அவன் பெயர் ஒலிக்கும். எல்லோரும் க்ளே க்ளே என்று அவனைக் கொண்டாடுவார்கள்.

இதை ஒரு கணம் நினைத்து, வெற்றி பெற்ற அந்த வாலிபன் முழங்கினான். 


MUHAMMAD ALI!  THE GREATEST என்று. 


இப்போது திரைக்கு வந்திருந்த சார்பட்டா பரம்பரையிலும் இந்த சிமிளாரிட்டி தென்ப்பட்டது. அலியை ஒரு inspiration ஆக எடுத்துக்கொண்டு கபிலனை shape ஆக செதுக்கி வைத்திருக்கிறார் ரஞ்சித். 


இறுதிசுற்று படம் பார்த்துவிட்டு, இனிமே இதுபோல ஒரு தரமான பாக்சிங் படம் எப்படியும் தமிழ்ல இனி வரப்போவதில்லை. வந்தாலும் இதை தாண்டி அது பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்த போவதில்லை என்று நினைத்திருந்தேன். 


ஆனால் ரஞ்சித் அந்த நினைப்பை சுக்குநூறாக உடைத்து தவிடுபொடியாக்கி விட்டார். 


எல்லா படத்திலும் இசையை தனியாக உருவி எடுத்து ரசிக்கலாம். சண்டைகளை தனியாக உருவி எடுத்து ரசிக்கலாம், காமெடிகளை தனியாக உருவி எடுத்து ரசிக்கலாம். ஆனால் சர்பட்டா பரம்பரையில் அது கொஞ்சம் கடினமான விடயம். படத்தோடு படமாய் அத்தனை விசயங்களும் ஒன்றி விடுகிறது. சாதம், மசாலா, காரம், தக்காளி, ரைத்தா, பீப் என்று ஒரு கலவை கலந்து மொத்தமாக பிரியாணியாகவே பக்ரீத்துக்கு கொடுத்துவிட்டார் ரஞ்சித்.


நடிப்பு - சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு படத்துக்கும்  best supporting character என்று ஒரு அவார்ட் கொடுப்பாங்க. அப்படி கொடுத்தா இந்த படத்தில நடிச்சிருக்க ஒரு 15 பேருக்கு supporting character award மட்டுமே கொடுக்கனும். தமிழ் சினிமா எந்த அளவுக்கு ஒசத்தினு சொல்ல அவங்க நடிப்பு மட்டுமே போதும். 


குத்துச்சண்டை வீரர்களுள் பலர் எப்படி அரசியல் அடியாளாக மாறுகிறார்கள். அப்படி மாறி எப்படி தன் வாழ்க்கையையே தொலைத்து கொள்கிறார்கள் என்று கபிலனின் அப்பா வாயிலாக ஒரு பக்கமும், அரசியலில் இருந்தும் சண்டை அடித்தடிக்கு செல்லாமல் எப்படி வைராக்கியத்தோடு பாக்சிங் செய்துக்கொண்டே கொள்கையை கொண்டு போராடுகிறார்கள் என்று பசுபதி வாயிலாகவும் சற்றும் காம்ப்ரமைஸ் செய்துக்கொள்ளாமல் நேர்த்தியாக காண்பித்துள்ளார் பா ரஞ்சித். கொஞ்சம் நேரம் வரும் காதல் காட்சிகளிலுமே தன் தனி பாணியை கையாண்டு மீண்டும் மெட்ராஸ் படத்தை கண்ணில் நிறுத்துகிறார் ரஞ்சித்.


சந்தோஷமா பேமிலியோட ஒரு full entertaining படம் பாக்கனுமா? 


சார்பட்டா பரம்பரை பாருங்க. 


நண்பர்களோடு அரட்டை அடித்துக்கொண்டு ஜாலியான ஒரு படம் பார்க்கனுமா? 


சார்பட்டா பரம்பரை பாருங்க. 


மனம் நொந்து போய், வாழ்க்கையே இடிஞ்சு போன மாரி இருக்கிங்களா? 


கண்டிப்பா சார்பட்டா பரம்பரை பாருங்க!


நன்றி🙏💕

- Vishnu  💐😍

கருத்துரையிடுக

0 கருத்துகள்