Covid -19 தீவிர தொற்று நிலைகளில் இயன் மருத்துவர்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

 2018 ஆம் ஆண்டில் வளர்ந்து வரும் இயன் மருத்துவருக்கான விருது பெற்ற இயன் மருத்துவர் கணபதிபிள்ளை ஹரன்ராஜ்  அவர்கள் தற் கால Covid -19 தீவிர தொற்று நிலைகளில் இயன் மருத்துவர்களின் பங்களிப்பு தொடர்பாக பகிர்ந்து கொள்கிறார் 

இயன் மருத்துவம் என்பது பௌதீகவியல் தத்துவங்களை அடிப்படையாக கொண்டு என்பு, தசை, நரம்பு போன்ற பிரச்சினைகளுக்கு பக்க விளைவுகள் அற்ற முறையில் சிகிச்சையளிக்கும் ஒரு உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற நவீன மருத்துவ முறையாகும். இது பல்வேறு உப பிரிவுகளில் விசேடமாக சிகிச்சை அளிக்கப் பட்டாலும் இக் கால கொரோனா தொற்று வராமல் தடுக்கவும் மற்றும் தொற்றில் இருந்து உயிரிழப்புக்களை                        

பெரிதும் குறைப்பதில் பெரும் பங்கு ஆற்றுகின்றது. பொதுவாக இதற்கு மார்பு மற்றும் நெஞ்சு சார்ந்த விசேட இயன் மருத்துவ சிகிச்சைகள்(Cardio Thoracic and Respiratory Physiotherapy ) பெரிதும் உதவுகின்றது .

பொதுவாக இயன் மருத்துவர்கள் Covid 19 தொற்று வராமல் தடுப்பதிலும் அதே போன்று Covid 19 தொற்றுக்கு உள்ளானவர்கள் விரைவில் குணமடையச் செய்வதில் இயன் மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சைகள் மற்றும் Chest physiotherapy போன்றன பெரும் பங்கு ஆற்றுகின்றது.

இன்று Covid 19 மூன்றாவது அலை மிக வேகமாக பரவினாலும் பெரும்பாலான நோயாளிகள் / தொற்றுக் குள்ளாவர்களில் குணம் குறிகள் வெளிப்படையாக தெரிவதில்லை. குறித்த ஒரு சுகதேயி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி  2-10 நாட்கள் வரை மனித உடலில் பெருக்க மடையும் . பொதுவாக இந்த கால பகுதியிலேயே ஒருவரிடம் இருந்து இன்னும் ஒருவருக்கு பரவல் அடையும். 


தொற்றுக்கு உள்ளான நோயாளியின் சீதம் ,சளி போன்ற பதார்த்தங்கள் இருமும் போது அல்லது தும்மும் போது வெளியிடப்படும் சுவாச வளியில் உள்ள துளிகள் ஊடாக காற்றில் பரவலடையும். இது சில மணித்தியாலங்கள் வரை உயிர்ப்பு உடையதாக இருக்கும். இவ்வாறாக தொற்றுக் குள்ளான ஒரு நபரிடம் இருந்து புதிதாக தொற்றை ஒருவர் பெறுகின்ற போது சில வேளைகளில் வைரஸ் தாக்கம் சுவாசப் பாதையினூடாக பயணித்து நுரையீரலில் பல்வேறு விதமான பாதிப்புக்களை ஏற்படுத்தும்

இந்த நேரத்தில் தான் Chest Physiotherapy ஒரு தொற்றுக்கு உள்ளான நோயாளியின் உயிர் காப்பதிலும் அவரின் நிலைமை மோசமடையாமல் தடுப்பதிலும் மிகவும் இன்றியமையாதது ஆகின்றது.  பொதுவாக இயன் மருத்துவர்கள் இவ் வேளையிலே நெஞ்சு பகுதியில் அல்லது சுவாச பாதையில் தேக்கமடைத்த கடின தன்மையான சளியை அகற்றுவதற்கு தேவையான பல கையாளுதல் நுட்பங்களையும் மற்றும் மார்பு இயன் மருத்துவ சிகிச்சை நுட்பங்களை பிரயோகித்து நுரையீரலை விட்டு அகற்றுவதை இலகு படுத்துவார்கள் . இதன் போது சுவாசப் பாதையை அடைத்துள்ள சளி இலகுவாக செயற்கை உறிஞ்சுதல் கருவியால் வெளியே கொண்டு வரப்படும். இதற்கு தாதியர்களும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தொற்றுக்கு உள்ளான சளியை அகற்ற உதவுவார்கள் . இது மிகவும் ஆபத்து நிறைநத்து .Chest physiotherapy, suctioning procedure இன் போது நோயாளியில் பலமான வேகமான இருமல் ஏற்படும் போது நுரையீரலில் உள்ள பெருமளவு சளி மிக வேகமாக வெளியேற்றப்படும்.


அது மட்டுமல்லாமல் அதிகமாக பாதிப்படைந்த நோயாளிகள் செயற்கை சுவாச கருவிகளின் உதவியாலும் மற்றும்  செயற்கை சுவாச Oxygen  இல் முற்று முழுதாக தங்கி இருக்க வேண்டிய நிலையிலேயே நோயாளிகள் இருக்கும் போது உடல் உறுப்புக்கள் பலவீனம் அடையும். பெரும்பாலும் உடல் தொழிற் பாடுகள் குறைந்து உடல் பலவீனம் ஆகும்.. இவற்றை தடுத்து உரிய உடற் பயிற்சிகள் மூலமாக உடல் அங்கங்களை அசைய வைத்து இதய தொழிற்பாட்டை சீராக பேணவும் இயன் மருத்துவம் பெரிதும் உதவுகின்றது. 

அத்துடன் ஒரு சில உடற் பயிற்சிகள் மூலமாக விரைவில் நோய் தாக்கத்தில் இருந்து விடுபட்டு கட்டிலில் இருந்து தாமாக எழும்பி  பின்னர் நடந்து விரைவாக வீடு திரும்ப இயன் மருத்துவத்தில் பல் வேறு வகையான புனர் வாழ்வு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றது .


அது மட்டுமல்லாமல் அதிகமாக பாதிப்படைந்த நோயாளிகள் செயற்கை சுவாச கருவிகளின் உதவியாலும் மற்றும்  செயற்கை சுவாச Oxygen  இல் முற்று முழுதாக தங்கி இருக்க வேண்டிய நிலையிலேயே நோயாளிகள் இருக்கும் போது உடல் உறுப்புக்கள் பலவீனம் அடையும். பெரும்பாலும் உடல் தொழிற் பாடுகள் குறைந்து உடல் பலவீனம் ஆகும்.. இவற்றை தடுத்து உரிய உடற் பயிற்சிகள் மூலமாக உடல் அங்கங்களை அசைய வைத்து இதய தொழிற்பாட்டை சீராக பேணவும் இயன் மருத்துவம் பெரிதும் உதவுகின்றது. 

அத்துடன் ஒரு சில உடற் பயிற்சிகள் மூலமாக விரைவில் நோய் தாக்கத்தில் இருந்து விடுபட்டு கட்டிலில் இருந்து தாமாக எழும்பி  பின்னர் நடந்து விரைவாக வீடு திரும்ப இயன் மருத்துவத்தில் பல் வேறு வகையான புனர் வாழ்வு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றது .

மேலும் Covid 19 தொற்றுக்குள்ளாகி மீண்டு வரும் ஒருவரது நுரையீரலில் உட் சுவாச, வெளி சுவாச வளி கொள்ளவு மிகவும் குறைவாக காணப்படும். 

இதனை சரி செய்யும் முகமாக Respirometer training,  மூச்சு பயிற்சிகள் வழங்கப்படும். 

மூச்சு பயிற்சிகள் மூலம் சுவாசப்பைகளின் சுருங்கி விரிதல் வினைத்திறணாக அதிகரிக்கப்படும் . ஆனால் இப் பயிற்சிகள் ஒருவர் தொற்றுக்கு உள்ளாகி 2-10 நாட்கள் வரை இந்த மூச்சு பயிற்சிகளை மேற் கொள்ள கூடாது. ஏனெனில் இப் பயிற்சிகள் மூலமாக வெளியில் வருகின்ற Droplets   பரவும் தன்மை வாய்ந்ததாக காணப்படும்  .இதன் மூலம் வேறு ஒருவருக்கு தொற்று ஏற்பட கூடிய வாய்ப்பு அதிகரிக்கும்

பொதுவாக மூச்சு பயிற்சிகளை பொறுத்த வரையில் ஆழமாக சுவாசத்தை எடுத்து வெளி விடும் பயிற்சிளுக்கு பதிலாக சாதாரண சுவாசத்தை மூக்கு துவாரங்களின் ஊடாக மிக மெதுவாக எடுத்து சற்று மூச்சினை 2 அல்லது 3 செக்கன் கள் மெதுவாக உள்ளே அடக்கி வாயை உதடுகளை ஒரு சிறிய இடைவெளி இருக்க கூடியவாறு குவித்து மிக மெதுவாக வளியை  கடினமில்லாமல் வெளியேற்ற வேண்டும். 


இவ்வாறு மெதுவாக மூச்சினை உள் இழுக்கும் போது மெதுவாக கையை உயர்த்தி மூச்சினை விடும் போது மிக மெதுவாக கைகளை இறக்கி செய்யலாம். இது மூச்சு விடுதல் பொறி முறையின் அதிகளவான சக்தி செலவீட்டை குறைத்து சுவாசத்தின் வினைத்திறணை அதிகரிக்க கூடிய ஓர் சிறந்த பயிற்சி ஆகும்.  அத்தோடு இதே போன்று இதே பயிற்சியை மேல் நெஞ்சு பகுதி, மத்திய நெஞ்சு பகுதி, அடி நெஞ்சு பகுதியின் பிரிமென்றகட்டு தசை பகுதியின் மேலே கைகளை வைத்தும் இப் பயிற்சிகளை பத்து, பத்து தடவைகளாக செய்ய முடியும். 



இதன் மிக முக்கியமான விடயம் மூச்சினை கட்டுப் படுத்த பழகி கொண்டு சுவாச வினை திறணை அதிகரிப்பதாகும் .

இம் மூச்சு பயிற்சிகளை முறையாக செய்யும் போது உடல் இழைப்பு , மூச்சு எடுப்பதில் சிரமப் படுதல் வெகுவாக குறையும். 

ஆரோக்கியமான நபர்கள் வீட்டில் இருந்து கொண்டே இப் பயிற்சிகளை முன் பாதுகாப்புக்காக செய்யலாம் . ஆனால் தொற்றுக்கு உள்ளானவர்களோ அல்லது தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சந்தேகம் இருந்தாலோ  அல்லது அதிக சன நெரிசல், அலுவலகங்கள்,  பொது இடங்கள் போன்ற இடங்களில் தொடர்பு உடையவராக இருந்தால் இப் பயிற்சிகளை செய்ய வேண்டாம்.  அத்துடன் மூச்சு பயிற்சிகளை செய்வது தொடர்பாக ஓர் இயன் மருத்துவரின் வழி காட்டலில் பிழைகளை திருத்தி நன்கு பயிற்சி பெற்று தொடர்வது அநுகூலமான பல பலன்களை தரும். இலகுவான பயிற்சி ஆனாலும் பலருக்கு செய்வதில் பல சிரமங்கள் ஏற்படலாம். 


அத்தோடு உரிய முறையில் முன் காப்பு நடவடிக்கை களாக உரிய சுகாதார நடைமுறைகளை பின் பற்றி தொற்று எமக்கு ஏற்படாத வகையில் எம்மையும் பாதுகாத்து எம் குடும்பத்தை யும் பாதுகாத்து எம் நாட்டை பாது காக்க வேண்டியதே எம் அனைவரினதும் தலையாய கடமையாகும். 


வருமுன் காப்பதே மிக சிறந்தது.




கருத்துரையிடுக

0 கருத்துகள்