ஆபத்து!! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு பக்கவாதமாககூட இருக்கலாம்

இன்று உலகில் அதிகளவில் ஏற்பட்டுவரும் மிகவும் அச்சுறுத்தக்கூடிய பிரதான தொற்றா நோய்களில் பக்கவாதமும் ஒன்றாகும்.  இன்று 6 பேரில் ஒருவர் பக்கவாத நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பக்கவாதம் வருமுன் காக்கப்பட வேண்டிய ஒரு பிரதான நோயாகும். இருந்த போதிலும் பக்கவாதம் பற்றிய போதிய விழிப்புணர்வு பொது மக்களிடம் மிகக் குறைவாகக் காணப்படல் ஒரு வருந்தக் கூடிய விடயமாகும். இது மிகவும் அச்சுறுத்தக் கூடியதும்இ உயிரிழப்பைத் தோற்றுவிக்கக் கூடியதுமான ஒரு தொற்றா நோயாகும்.  நவீன மருத்துவத்துறை எவ்வளவு சிறப்பாக முன்னேற்றமடைந்திருந்தாலும் நாளுக்கு நாள் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் நேயாயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே செல்கின்றது



கடவுளுடைய அதிசயமான படைப்பிலே உருவான மனிதப் பிறவியில் மிகவும் பிரமிக்கக் கூடிய பல பிரமாண்டமான ஆற்றல்களை உள்ளடக்கியுள்ளதும் இ மிகவும் சிக்கலானதும் அதிக குருதிஇ நரம்பு விநியோகம் கொண்ட உறுப்பு மனித மூளையாகும். மனிதனில் அனைத்து விதமான செயல்பாடுகளையும் கட்டுப்படுகின்ற உயர் கட்டமைப்பு இ  தொழிற்பாட்டு மையமும் அதுவேயாகும். மனிதனின் ஒவ்வொரு தொழிற்பாடுகளும் மூளையின் குறித்த ஒரு பகுதியால் கட்டுப்படுத்தப்படும். மூளையானது உயர் ஒட்சிசன் தேவையுள்ள குருதிக் குழாய்களின் சிக்கலான வலைப்பின்னலால் உருவான அமைப்பாகும். அதே வேளை ஒட்சிசன் விநியோகம் தடைப்படும் போது முதலாவதாக இறக்கின்ற உறுப்பும் அதுவேயாகும்.



பக்க வாதம் அல்லது பாரிசவாதம் என்றால் என்ன????


மூளையின் குறித்த சில பாகங்கள் சடுதியாக செயலிழப்பதால் உடலின் சில பாகங்களை அசைக்க முடியாத நிலை உண்டாகின்றது. பொதுவாக மூளையின் வலது பகுதி உடலின் இடது பாகங்களையும் மூளையின் இடது பகுதி உடலின் வலது பாகங்களையும் கட்டுப்படுத்துகின்றது. மூளையின் குறித்த பகுதி செயலிழப்பதால் அப் பகுதியால் கட்டுப்படுத்தபடுகின்ற உடலின் குறித்த பாகம் செயலிழந்துவிடுகின்றது. மூளைக்கு குருதியை கொண்டு செல்கின்ற நாடிகளில் ஏற்படும் திடீர் அடைப்புக்களால் மூளைக்கான சீரான குருதி சுற்றோட்டம் பாதிக்கப்படும். தொடரும் இன் நிலையானது மூளையின் விரைவான செயலிழப்புக்கு வழிகோலும். இதனால் மூளையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட குறித்த பாகத்துக்கான நரம்பிணைப்பு துண்டிக்கப்படுவதால் அப் பாகம் செயலிழக்கின்றது. இந்நிலை பக்கவாதம் எனப்படும்.


இதன் விளைவாக உடலில் பின்வரும் மாற்றங்கள் நிகழும்



•   சுய நினைவற்ற நிலை


•   புலனுணர்வுகள் உடலின் இயக்கம் என்பன பாதிக்கப்படும்


•   உடலின் ஒருபக்கம் செயலிழக்கும்


•   உடல் தசைகளுடைய அசைவு பாதிக்கப்படும்


•   உடல் பலவீனமடையும்


•   சுவாசிப்பதில் சிக்கல் நிலை தோன்றும்


•   மூட்டுகள் விறைப்புத்தன்மையாக மாறும்


•   முகம் மற்றும் வாய் சமச்சீரற்று காணப்படல் அல்லது வாய் சற்று கோணலாக மாறல்


•   வுழமையான பேச்சில் தெளிவின்மை


•   உணவை விழுங்குவதில் சிக்கல்


•   நினைவாற்றல் குறையும்


•   சடுதியான மயக்கம் கடும் தலைவலி ஏற்படும்


 


இன்று கீழ்வரும் காரணிகள் பக்கவாதத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கின்றது.


•   வயது- வயது அதிகரிக்கும் போது ஆண் பெண் இருபாலாருக்கும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்


•   இலிங்கம்-  ஆண்கள் பெண்களை விட அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்


•   மது அருந்துதல் புகைப்பிடித்தல் போன்ற பழக்கவழக்கங்கள் பக்கவாதம் ஏற்படுவதை பன் மடங்கு அதிகரிக்கும்


•   நீரழிவு நோய் ,உயர் குருதி அமுக்கம்,   மன அழுத்தம் போன்ற நிலைமைகளும் பக்கவாதத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கும்


•   போதிய அளவு உடற்பயிற்சியின்மையால் குருதி சுற்றோட்டம் பாதிக்கப்பட்டு காலபோக்கில் பக்கவாதத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கும்


•   முறையற்ற உணவு பழக்கங்கள் அதாவது நிரம்பிய கொழுப்பமிலங்கள் நிறைந்த உணவுகள் குருதி கலன்களில் கொலத்திரோல் படிவுகளை ஏற்படுத்துவதால் இது பக்கவாதத்திற்கு வழிகோலும்


•   பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும் நிறமுர்த்தங்களாலும் இவை ஏற்படுத்தப்படும்


•   அதிகளவில் கருத்தடை மாத்திரைகள் பாவித்தல் கொகையின் (ஊழஉயiநெ) பாவித்தல் அதிக உடற் பருமன் போன்ற பல காரணிகளும் பக்கவாதம் ஏற்படுவதில் செல்வாக்கு செலுத்துகின்றது.


 

பக்கவாதத்தில் பொதுவாக இரண்டு வகை உள்ளது


•   இஸ்கேமிக் (Ischemic stroke)


•   கீமோறேஜிக் (Hemorrhagic stroke)



இஸ்கேமிக் (Ischemic stroke)


மூளைக்கு செல்லும் இரத்தகுழாய்களில் கொழுப்பு பைபிரின் நார்கள் கல்சியம் ஆகியன படிவதாலும்  இரத்தக்கட்டிகள் உறைவதாலும் கருதிக்குழாயின் பருமன் குறைவடைந்து மூளைக்கான குளுக்கோசு ஒட்சிசன் விநியோகம் தடைப்படுகிறது இதனால் மூளையின் கலங்;கள் காலப்போக்கில் இழக்கப்படுகின்றது.


கீமோறேஜிக் (Hemorrhagic stroke)


மூளையில் காணப்படுகின்ற சில குருதிக்குழாய்களின் சுவர் மென்மையடைந்து உயர் குருதி அமுக்கத்தின் காரணமாக ஏற்படுத்தப்படும் இரத்தக் கசிவினால் இந்நிலை உருவாகின்றது. சுpல வேளைகளில் குருதி மயிர்த்துளைக் குழாய் வெடிப்பினால் இது ஏற்படுகின்றது. இதற்கு தலையோட்டிலுள்ள அமுக்கமும் காரணமாகும்.




சில தடுப்பு முறைகள்


•   தினந்தோறும் ஒழுங்குமுறையான உடற்பயிற்சிகளை றே;கொள்ளுதல்.


•   ஆரோக்கியமான உணவுமுறைகளை கையாளுதல்


•   புகைத்தல்   மது அருந்துதல் போன்றவற்றை தவிர்த்தல்


•   நீரழிவு நோய் இதய நோய்களிலிருந்து விடுபடுதல்


 


பக்கவாத புனர்வாழ்வு சிகிச்சையில் இயன் மருத்துவர்களின் பங்களிப்பு


பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களிற்கு புனர்வாழ்வளித்து வழமையான நிலைக்கு கொண்டு வருவதில் இயன் மருத்துவம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. பக்கவாதத்தினால் யாராவது பாதிக்கப்பட்டால் அருகிலுள்ள வைத்தியசாலையை உடனடியாக நாட வேண்டும். அதன் பின்னர் வைத்தியசாலையில் அந் நோயாளி உயிர் ஆபத்தை தாண்டிய பின்னர் இயன் மருத்துவ சிகிச்சைக்காக பொது வைத்திய நிபுணரால் சிபார்சு செய்யப்பட்டு இயன் மருத்துவ சிகிச்சை தொடங்கப்படும். இயன் மருத்துவர்களினால் தொடர்ச்சியான சரியான ஆலோசனைகளும் உடற்பயிற்சிகளும் வழங்கப்படும். பல்வேறு வகையான கையாளுதல் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு உரிய வேளையில் பொருத்தமான புனர்வாழ்வளித்து வழமை நிலைக்கு திரும்பும் இயன் மருத்துவ நுணுக்கங்கள் கையாளப்படும். இதன் மூலம் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் விரைவில் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடர்ச்சியாக பயிற்சி வழங்கப்பட்டு குணமடைய இயன் மருத்துவர்கள் துணை புரிவார்கள்.

 



பக்கவாதம் என்பது வரும் முன் தடுக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும். சரியான  உடற் பயிற்சியும் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கமும் பக்கவாதம் வராமல் தடுக்க சிறந்த எளிய வழிகளாகும். ஆகையால் இதன் தோற்றத்துக்கு காரணமாகும் காரணிகளிலிருந்து முற்காப்பு எடுத்துக்கொள்வதுடன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு திறமையான இயன் மருத்துவரின் உதவியை நாடி தொடர்ச்சியான சிகிச்சைகளை பெறுவதன் மூலம் ஒரு முன்னேற்றகரமான நிலையை அடைய முடியும். எனவே பக்கவாதம் எனும் கொடிய நோயிலிருந்து எம்மையும் எம் அயலவர்களையும் பாதுகாத்து ஒரு ஆரோக்கியமான சமுகத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து பக்கவாதத்தை வராமல் விரட்டியடிப்போமாக..


 க.ஹரன்ராஜ்

இயன் மருத்துவர் (physiotherapist )

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை



கருத்துரையிடுக

0 கருத்துகள்