உஷ்ஷ் யாருக்கும் சொல்லாதீங்க - மாஜிக் ரகசியம் 02

டெனின் ஆத்த்தியா இவர் உலகின் மிகப்பிரபலமான எஸ்கேப் மாஜிக்ஸியன்


அமேரிக்கா காட் டலண்ட் என்ற மிகப்பிரபலமான ஷோவில் டெத் ட்ராப் எஸ்கேப் என்ற மாஜிக்கை அனைவருக்கும் முன்னால் மேடையில் செய்துகாட்டுகின்றார் உயரமான 2 தூண்களுக்கிடையில் ஒரு பெட்டிக்குள் டெனின் படுத்துக்கொள்கின்றார் அந்தப்பெட்டி மரப்பலகைகளால் மூடப்பட்டு ஆணிகளைக்கொண்டு அறையப்பட்டு திறக்கவே முடியாதபடி மூடப்படுகின்றது பெட்டியின் மேற்புறம் டெனினின் கைகள்மட்டும் வெளியே இருக்கும்படி துளையிடப்பட்டிருக்கின்றது அத்துளையினூடாக வெளியே தெரியும் கைகளை விலங்குகளைக்கொண்டு பூட்டிவிடுகிறார்கள் விடயம் இத்துடன் முடிந்துவிடவில்லை அந்தரத்தில் கயிற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் அந்தப்பெட்டியின் கீழே 3 கூரிய கம்பிகள் வைக்கப்பட்டிருக்கின்றது அதோடு அந்தக்கம்பிகள்மீது  நெருப்பும் பற்றவைக்கப்பட்டிருக்கின்றது மேலே இருக்கும் பெட்டியை தாங்கிவைத்திருக்கும் கயிற்றின் ஒரு முனையில் தீயைப்பற்றவைத்துவிடுகிறார்கள் அந்த தீயில் கயிறு எரிந்து அறுவதற்குள் ஆணியடிக்கப்பட்ட பெட்டியில் இருந்தும் கைவிலங்குகளில் இருந்தும் தன்னை

விடுவித்துக்கொள்ளவேண்டும் இல்லையென்றால் கீழே இருக்கும் கூரான கம்பிகள் அவரை சல்லடையாக்கிவிடும் கயிறு எரிந்ததும் பெட்டிகள் கீழே விழ ஆரம்பித்து இடையில் சிக்கிக்கொள்கின்றன இதைப்பார்த்ததும் அனைவரும் உறைந்துவிட்டார்கள் டெனின் எங்கே உள்ளேதான் இருக்கிறாரா மாஜிக் பிழைத்துவிட்டதா அவரை காப்பாற்றிவிடுவோமா என சிந்திப்பதற்குள் டெனின் நடுவர்கள் பின்னால் தோன்றி அனைவரையும் திக்குமுக்காடவைத்துவிடுகிறார்

ஆனால் இது எப்படி சாத்தியமானது பெட்டிக்குள் இருந்தவரால் சில செக்கண்ட்களில் எப்படி வெளியேவரமுடிந்தது இதோ ரகசியம்






சற்று உன்னிப்பாக அவதானித்தால் மாஜிக் ஸோ நடைபெற்ற மேடைக்குப்பின்னால் கறுப்பு நிற பாக்கிரவுண்டை அவதானிக்க்முடியும் இதுதான் இந்த மாஜிக்கின் ரகசியம்

டெனின் உள்ளேயிருந்த பெட்டியின் பின்னால் டெனின் இறங்குவதற்காக ஒரு பாதை ஏற்படுத்தப்பட்டிக்கிறது அதனூடாக வெளிவந்த டெனின் பின்னால் வைக்கப்பட்டிருந்த கறுப்பு ஏணியினூடாக கீழே இறங்கியிருக்கின்றார் அப்படியானால் கைவிலங்கு? கைவிலங்கை அவிழ்க்கும் டெக்னிக்கின் உதவியுடன் அதை விடுவித்திருக்கிறார் ஏனென்றால் இது சாதாரண கைவிலங்கு அல்ல மாஜிக்செய்வதற்காக மாஜிக்ஸனால் உருமாற்றப்பட்ட கைவிலங்கு

கருத்துரையிடுக

0 கருத்துகள்