ஜோக்கர் பின்னால் மறைந்திருக்கும் சாபம்-joker



நமக்கு உள்ளே ஒழிந்துகொண்டிருக்கும் மிருகத்தை அதன் கோர உருவத்தை உணர்ச்சிவசப்படாமல் இயல்பாகவே காட்டிவிடும் பாத்திரங்கள் மக்களால் வெகுவாகக்கொண்டாடப்படுகின்றன.இதன் காரணமாகத்தான் திரில்லர் படங்கள் முதற்கொண்டு சைக்காலஜிப்படங்கள் வரை அனைத்து வகைக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.ஆனால் நாம் பார்க்கப்போகும் கதாப்பாத்திரம் இவை அனைத்தையுமே தூக்கிசாப்பிட்டுவிடும் ஒரு கதாப்பாத்திரம்(joker) ஜோக்கர்.கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்த பாட்மான் பிகின்ஸ் திரைப்படத்தின் வில்லன் கதாப்பாத்திரம்தான் இந்த ஜோக்கர்.

காமிக்ஸ் உலகத்தில் பாட்மானின்(Bat man) மிகப்பெரிய எதிரி இந்த ஜோக்கர்தான்.படத்தின் ஆரம்பத்திலேயே  பாங்கை கொள்ளையடிக்கும் ஒரு சீன் வரும் இந்த சீனின் இறுதியில் முகமூடியை கழற்றிக்கொண்டு அறிமுகமாவார் ஜோக்கர்.உண்மையில் படத்தின் ஹீரோ பாட்மானாக ஸ்கிரிப்ட் எழுதப்பட்டிருந்தாலும் ஒட்டுமொத்தபடமுமே ஜோக்கருக்குத்தான்.இந்த திரைப்படம் வெளியாகி அடுத்தடுத்த நாளில் நோலன் தன் குடும்பத்துடன் படம்பார்க்க சென்றிருந்தபோது ஜோக்கரின் ஆக்குரோசமான நடிப்பால் உந்தப்பட்டு வெறியேறிய சில ரசிகர்கள் ஜோக்கர் போலவே வேடமணிந்துகொண்டு தியேட்டருக்குள் புகுந்து பார்வையாளர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் அந்த அளவுக்கு வெறித்தனமான நடிப்பால் அனைவரையும் ஆடவைத்த ஹெத் லீட்ஜர் இந்த கதாப்பாத்திரத்துக்கு பொருத்தமானவரல்ல என நெட்டிசன்களால் வறுத்து எடுக்கப்பட்டார்.



இவளவு ஏன் ஜோக்கர்(Joker) கதாப்பாத்திரத்தை அதுவரை நடித்தவர்களில் மிக தேர்ச்சியாக நடித்துப்புகழ்பெற்ற ஜாக் நிகோல்சன் கூட மிகக்குறைந்த அனுபவமுடைய மிக இளம் நடிகர் என குறிப்பிட்டார்.கிறிஸ்டின் பேலை பாட்மான் கதாப்பாத்திரத்துக்கு தெரிவுசெய்த நோலனினால் அவளவு இலகுவாக ஜோக்கர் கதாப்பாத்திரத்திற்கு யாரையும் தெரிவுசெய்யமுடியவில்லை ஏனென்றால் ஸ்கிரிப்ட் பாட்மானை சுற்றி இருந்தாலும் மையம் ஜோக்கரை நோக்கித்தான் இருக்கப்போகின்றது என்று நோலனுக்கு தெரிந்திருந்தது ஜோக்கரின் கண்கள் கொடூரத்தை தெறிக்கவிடும்போது ஜோக்கர் செய்யும் விளையாட்டுத்தனமான செயல்கள் பயத்தை ஏற்படுத்தவேண்டும் கொலைசெய்யும்போதும் ஜோக்கருக்குரிய அதே ரசனையுடன் செய்யவேண்டும்.சும்மா ஒரு ஹொலிவூட் பட வில்லன்போல் குரலை சற்று உயர்த்திப்பேசிவிட்டு குடும்பத்தையே கத்தியால் வெட்டியோ,துப்பாக்கியால் சுட்டோ கொன்றுவிடும் வில்லானக ஜோக்கர்(Joker) இருக்கப்போவதில்லை.ஒவ்வொரு கொலையை ரசித்து ருசித்து ஏதோ சான்விச் சாப்பிடுவதுபோல் நோக்கமில்லாமல் கொலை செய்யும் சீரியல்கில்லராகவும் ஜோக்கர் இருக்கப்போவதில்லை ஜோக்கர் என்பது ஒரு தனி மொழி அது தனி உலகம் அதற்கு அவனே ராஜா.அவளவு இலகுவாக இவை அனைத்தையும் ஒருவனால் உள்ளிழுத்து அந்தக்கதாப்பாத்திரத்திற்கு உயிர்கொடுக்க முடியாது அப்படி செய்தால் நிச்சயம் அந்த நடிகர் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இவளவு சவால்கள் நிறைந்த இந்த கதாப்பாத்திரத்தின் வெயிட்டை யார் தலையில் போடுவது என்று மண்டையை உடைத்த நோலனுக்கு ஹெத் லீஜரின் ஒரு படத்தைப்பார்த்ததும் தலைக்குமேல் பல்ப் எரிய ஆரம்பித்தது.

இரண்டு ஓரிச்செயற்கையாளர்களிடம் இருக்கும் காதல்தொடர்பான திரைப்படம் அது புரோக் பாக் மவுண்டின் இந்தப்படத்தில் ஹெத் லீஜருடன் இணைந்து நடித்தவர் ஜேக் ஹிலன்ஹால்,படத்தில் இருவருக்குமிடையில் ஒரு வலிமையான முத்தக்காட்சி இருந்தது ஹெத் கட்டிப்பிடித்து முரட்டுத்தனமாக கொடுத்த முத்தத்தில் ஹிலஹாலின் மூக்கு உடைந்துவிட்டது.ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்ட அவர் உண்மையில் ஹெத் ஓரினச்செயற்கையாளர்தானோ என்று சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டாராம் அந்த அளவுக்கு ஒரு கதாப்பாத்திரமாகவே மாறியிருந்தார் லீஜர் இந்தக்காட்சியைப்பார்த்ததும் கதாப்பாத்திரத்திற்காக தன்னை எந்த நிலைக்கும் கொண்டுசெல்லக்கூடிய சிறிதும் பயமற்ற கண்களை கண்டுகொண்டார் நோலன்.இந்த ஒரே காரணத்திற்காகத்தான் ஹெத் லீஜர் பாட்மேன் பிகின்ஸ் படத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் 

ஆனால் நீங்கள் நினைப்பதுபோல் ஜோக்கர் கதாப்பாத்திரத்திற்காக அல்ல பாட்மேன் கதாப்பாத்திரத்துக்குத்தான் அழைப்புவிடப்பட்டிருந்தது.ஆனால் ஹெத் லீஜரை சிறிது நேரம் படித்த நோலன் பாட்மானெல்லாம் சரிவராது என்று கூறிவிட்டு ஜோக்கர் என்னும் பிரமாண்ட கதாப்பாத்திரத்தை ஹெத்லீஜரின் தலையில் சுமத்திவிட்டார்.சரி என்று ஏற்றுக்கொண்டார் லீஜர் கதை இத்துடன் முடிவடையவில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்