நாசா மறைக்கும் ரகசியம்? 01/The Flat Earth Theory Explained
பூமியின் வடிவம் தட்டைதளம் எனும் கருத்து தட்டையான புவி கோட்பாடு என அழைக்கப்படுகிறது. பண்டைய இந்தியா மற்றும் 17-ஆம் நூற்றாண்டு வரையிலான சீனா போன்ற பல நாகரீகங்களிலும் நமது பூமி தட்டையானது என்றே நம்பப்பட்டு வந்தது.ஆனால் இப்போதும் இதை நம்பும் ஒரு கூட்டத்தினர் இருக்கின்றார்கள் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் தட்டையான பூமிகோட்பாடு எப்போது ஆரம்பித்தது உலகின் வெவ்வேறு நாகரீகத்தின் மக்கள் பூமியின் அமைப்பு வடிவம் பற்றி என்ன கருத்தைக்கொண்டிருக்கிறார்கள் எந்தெந்த விஞ்ஞானிகள் புவி தட்டை என்ற கருத்தை ஆதரித்தார்கள் அவர்களுக்கு என்ன நடந்தது நவீன புவித்தட்டைக்கோட்பாடுகளை ஆதரிப்பவர்கள் யார் அவர்கள் புவி தட்டை எனக்கூறுவதற்கான காரணம் என்ன என்றகேள்விகளுக்கான விடையைத்தான் நாம் இப்போது பார்க்கப்போகின்றோம்அமெரிக்காவில் YouGov என்ற நிறுவனம் கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொண்டது.8,215 பேரிடம் நடத்தப்பட்ட இக்கருத்துக் கணிப்பில் பங்கேற்றோரில் 52% பேர் அதிக மதநம்பிக்கைக் கொண்டோர். அமெரிக்க மக்கள் தொகையில் வெறும் 20% மக்கள் மட்டுமே மதநம்பிக்கை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையிலான கணக்கீடானது அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 2% பேர் உலகம் தட்டை என நம்புவதாக கணித்துள்ளது. 84% பேர் உலகம் உருண்டை என நம்பும் வேளையில், 5% பேர் உலகம் உருண்டையா? தட்டையா என்பதில் உறுதியான பதில் சொல்ல முடியாத நிலையில் இருந்துள்ளனர்.
18 வயது முதல் 24 வயது உடைய இளைய தலைமுறையில் 4% பேர் உலகம் தட்டை என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர். போலி செயற்கைக்கோள் படங்கள், மீன் கண்களைப் போன்ற லென்ஸ்களைக் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் உள்ளிட்டவைகளைக் கொண்டு உலகம் உருண்டை என நம்ப வைக்க முயற்சிகள் நடைபெறுவதாக இவர்களில் பெரும்பான்மையானோர் தெரிவித்துள்ளனர்.
பூமி உண்மையில் என்ன வடிவத்தில் அமைந்திருக்கின்றது?சூரியன் பூமியை சுற்றுகின்றதா அல்லது சூரியன் பூமியைச்சுற்றுகின்றதா?பிரபஞ்சம் என்றால் என்ன என்ன வடிவத்தில் அது அமைந்திருக்கின்றது நட்சத்திரங்கள் பூமி சூரியன் மனிதன் உயிர்கள் இவற்றையெல்லாம் உருவாக்கியவர்கள் யார் இப்படியான கேள்விகள் எல்லாம் இன்று நேற்றல்ல மனிதன் சிந்திக்கத்தொடங்கிய உடனேயே இப்படியான கேள்விகள் மனிதனின் மூளையை துளையிட ஆரம்பித்திருந்தன காலத்திற்கு காலம் அவனால் அடையமுடிந்த வளர்ச்சிகளையும் கற்பனைத்திறனையும் அவதானங்களையும் நுண்ணறிவின் வளர்ச்சிகளையும் அடிப்படையாக்கொண்டு பல்வேறு ஊகங்கள் கோட்பாடுகளையும் அமைக்கத்தொடங்கியிருந்தான் மனிதன்.உலகில் தோன்றிய ஒவ்வொரு நாகரீங்களிலும் பூமியின் வடிவம் தொடர்பில் கொள்கைகள் உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்தன
0 கருத்துகள்