உடல் எடையை குறைக்கிறது இவளவு ஈஸியா?


  • உடல் எடை அதிகரிப்பு என்பது உலகில் பலரும் கூறக்கூடிய ஒரு பிரச்சைனையாக உள்ளது. உடல் எடை அதிகமாக இருக்கும் ஒருவரை உணவைக் குறைக்குமாறே பலரும் அறிவுரை கூறுவர். ஆனால் உடல் எடை என்பது உணவில் மட்டுமே தங்கியுள்ள விடயமா? உணவு தவிர வேறு காரணங்களும் உடல் எடையை தீர்மானிக்குமா? அதிகமாக உண்ணும் சிலர் மெலிந்த உடலும் குறைவாக உண்ணும் சிலர் அதிக எடையுடனும் இருப்பதற்கு காரணம் என்ன? இது தொடர்பாக அறிய தொடர்ந்து வாசியுங்கள்.

  •  உடல் எடை அதிகரிப்புக்கான காரணங்களை நோக்கும் போது அது தனியே ஒரு காரணத்தினால் மட்டுமின்றி பல காரணங்களின் கூட்டாகவே ஏற்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அவையாவன 1. ஏற்கனவே கூறப்பட்டது போல உணவுப் பழக்கவழக்கம் உடல் எடையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பினாலேயே எடை அதிகரிக்கிறது என்று பலர் தவறாகக் கருதுகின்றனர். இதற்காக கொழுப்பை தவிர்த்துக் கொண்டு ஏனையவற்றை நன்றாக உண்பதால் எடை நிச்சயமாக குறைவடையாது. எமது உணவானது சமிபாடடைந்து உடலுக்கு தேவையான சக்தியாகவும் மேலதிகமானவை கொழுப்பாகவும் மாற்றப்பட்டு adipose tissue எனப்படும் பகுதியில் சேமிக்கப்படுகிறது. இதில் காபோவைதரேற் புரதம் என்பன எவையாக இருப்பினும் மேலதிகமானவை கொழுப்பாகவே சேமிக்கப்படும்.

  •  தற்போதுள்ள துரித உணவுகளான பிட்ஸா பேர்கர் சிப்ஸ் ஸ்னாக்ஸ் எனப் பலவும் சுவையூட்டிகள் எனப்படும் MSG ஐ தம்மகத்தே கொண்டுள்ளன. இவை சுவையை அதிகரிப்பதற்காக வழக்கமாக சேர்க்கப்பட வேண்டிய அளவுக்கு மேலதிகமாக சேர்க்கப்படுகின்றன. இதனால் சுவை அரும்புகள் இதற்கு அடிமையாகி உள்ளெடுக்கும் உணவின் அளவு அதிகரிக்கிறது. சில உணவுக் கம்பெனிகள் தமது ஆரோக்கியமற்ற உணவு வகைகளை ஆரோக்கியமானதாக விளம்பரப்படுத்துவதால் மக்கள் அதன்பால் ஈர்க்கப்பட்டு அவற்றை ஆரோக்கியமான உணவு என நம்பி அவற்றை கூடுதலாக உள்ளெடுக்கின்றனர். குறிப்பாக சிறு குழந்தைகள் இவற்றுக்கு அடிமையாவதால் சிறு வயதிலேயே அதிகரித்த உடல் எடை மற்றும் நீரிழிவு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

  •  2. உடல் இயக்கங்கள் குறைவான நிலை. இன்றைய அவசர உலகில் உள்ளெடுக்கப்படும் கலோரி அதிகமாகவும் வெளியேற்றப்படும் கலோரி குறைவாகவும் இருப்பதால் மேலதிக கலோரி கொழுப்பாக மாற்றப்பட்டு சேமிக்கப்படுகிறது. குறைவான உடற்பயிற்சி வாழ்க்கை முறை வேலை முறை சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாதல் ஆகியன இதற்கான காரணங்களாகும்.

  • 3.ஹார்மோன்கள். தைராய்டு ஹார்மோன் மற்றும் இன்சுலின் ஹார்மோன் ஆகியவையும் உடல் எடையினைத் தீர்மானிக்கின்றன.

  • 4. பரம்பரை இது உடல் எடையை தீர்மானித்தாலும் கூட குடும்பங்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாகவே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்சேர்ந்தவர்களின் உடல் அமைப்பு ஒரே மாதிரி இருப்பதற்கான காரணம். 

  • 5. சில மருந்துகளின் பாவனை  

  • 6. மன அழுத்தம் இவை தொடர்பாக விரிவாக அறிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்