நம்ம பூமி உருண்டை இல்லை தட்டை நம்புவீங்களா?

 



நாம் வாழும் இந்த பூமி உண்மையில் தட்டையான உருவம் கொண்டது உலக நாடுகள் நாசா எல்லோரும் கூட்டாக சேர்ந்து நம்மை ஏமாற்றுகின்றார்கள் எம்முடன் இணைந்துகொண்டு உண்மையை கண்டுபிடிக்க முன்வாருங்கள் என்று ஒரு குழு உலகம் முழுவதிலும் இருக்கும் மக்களை அழைத்துக்கொண்டிருக்கின்றது என்ன தட்டையான பூமியா என்று கிண்டலாக நீங்கள் கேட்கலாம் ஆனால் தட்டையான பூமி சமூகம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி இவ்வாறான கருத்துக்களை பரப்பும் ஒரு குழு உலகெங்கிலும் இயங்கிவருகிறது யார் இவர்கள்?பூமி தட்டையாக இருக்கின்றது எனபதற்கு இவர்கள் என்ன ஆதாரம்கூறுகின்றார்கள்


1800 களில் சாமுவேல் ரோபோதம் என்ற ஆய்வாளர் பூமி தட்டையானது என்ற கருத்தை முன்வைக்கின்றார் தன் கோட்பாட்டை முன்வைத்ததோடு மட்டுமல்லாமல் பூமி தட்டையானது என்பதை பரிசோதனைமூலம் தான் கண்டுபிடித்ததாக கூறி தான் செய்தபரிசோதனைகளையும் கோட்பாடுகளையும் உள்ளடக்கிய புத்தகங்களை ஸிட்டிரிக் ஆஸ்ரோனமி  என்ற தலைப்பில் ஏர்த் நாட் ஏ குலோப் என்ற நூலை 3 தொகுதிகளாக வெளியிடுகிறார் இவர்.இவரின் கருத்துக்களில் இருந்துதான் பிளாட் ஏர்த் சொசைட்டி என்ற குழு ஆரம்பமாகின்றது இவர்தான் இந்தக்குழுவின் தந்தை

பூமி என்பது ஒரு வட்டமான வில்லை. அதன் நடுவில் ஆர்டிக் பிரதேசம் இருக்க, ஓரங்களில் அன்டார்டிகா மற்றும் அதன் 150 அடி உயர மலைகள் இருக்கின்றன. இந்த மலைகள்தான் நம்மைப் பூமியின் ஓரத்திலிருந்து கீழே விழாமல் தடுக்கின்றன. அதோடு இவைதான் கடல் நீர் கீழே வழிந்துவிடாமல் தடுக்கின்றன என இவர்கள் கூறுகின்றார்கள் ,இந்த மலைகளை ஏறி இறங்கினால், நாம் பூமியிலிருந்து கீழே விழுந்து விடுவோம். 
வில்லை வடிவில் இருக்கும் பூமியின் மேல், சூரியன் மற்றும் சந்திரன் கோள வடிவில் இருக்கின்றன. பூமியிலிருந்து 4,828 கிலோமீட்டர்கள் உயரத்தில் இவை இரண்டும் இருப்பதாகவும், 5000 கிலோமீட்டர்களுக்கு மேலே நட்சத்திரக் கூட்டங்கள் இருப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர். 24 மணி நேரங்களை அட்டவணை போட்டு பிரித்து பூமிக்கு இவையெல்லாம் வெளிச்சம் கொடுப்பதாக கூறுகின்றனர். 

புவியீர்ப்பு விசை என்ற ஒன்று இல்லை என்றும், வில்லை வடிவ பூமி ஒரு நொடிக்கு 32 கிலோமீட்டர்கள் தொடர்ந்து மேலே பறந்து கொண்டிருக்கின்றது இதனால்தான் நாம் போலியான ஈர்ப்புவிசையை உணர்கின்றோம் என இவர்கள் கூறுகின்றார்கள்


பூமி தட்டை என நிரூபிப்பதற்காக சாமுவேல் ரோபோதம் பெட் போர்ட் ரிவெர் எக்ஸ்பெரிமண்ட் என்ற ஆய்வையும் செய்துபார்த்தார் இங்கிலாந்தில் 6 மைல் நீளத்திற்கு செயற்கையாக அமைக்கப்பட்ட ஒரு நீண்ட ஆற்றிலேயே இந்தப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இந்த ஆற்றின் மீது ரோபோதம் ஒரு படகை செலுத்துமாறு கூறிவிட்டு ஆற்றில் இருந்து 20 செண்டிமீட்டர் உயரத்தில் ஒரு தொலை நோக்கியைப்பொருத்தி ஆற்றில் செல்லும் படகை அவதானித்தார் உண்மையில் பூமி கோளமாக இருந்தால் படகு சிறிது சிறிதாக மறைந்துவிடும் ஆனால் பூமி தட்டையாக இருப்பது உண்மையானால் படகு தெரிந்துகொண்டேயிருக்கும் இதை பரிசோதனை மூலம் நிரூபிக்க விரும்பினார் அவர் இவர் எதிர்பார்த்ததுபோலவே படகு இவர்கண்களில் இருந்து மறையவில்லை இதனால் இந்தப்பரிசோதனையும் புவி தொடர்பான  நாம் முன்பு பார்த்த அனைத்துக்கோட்பாடுகளையும் உள்ளடக்கி எர்த் இஸ் நாட் குலோப் எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார் ரொபோதம்

ரொபோதம்மின் தீவிர ஆதரவாளரான ஜோன் ஹாம்டன் என்ற உயிரியலாளர் 
ரோபோதம்மின் பரிசோதனையை பிழை என்று நிரூபிப்பவர்களுக்கு பரிசு என அறிவித்தார். ஜோன் ஹாம்டன் இந்த சவாலை ஏற்றுக்கொண்ட ஆல்பிரட் ரஸல் வாலஸ் என்பவர் ஜோன் ஹாம்டனின் பரிசோதனைகளில் சில மாறுதல்களை ஏற்படுத்தி மீண்டும் அதே பரிசோதனையை மேற்கொண்டார் ஜோன் ஹாம்டன் 20 செண்டி மீட்டர் உயரத்தில் தொலை நோக்கியை பொருத்தியிருந்தார் ஆனால் ரஸல் 4 மீட்டர் உயரத்திற்கு தொலை நோக்கியை உயர்த்திப்பொருத்தியிருந்தார் 

இதனால் ரஸலின் பார்வையில் இருந்து சிறிது சிறிதாக கப்பல் மறைய தொடங்கியது இதன் பின்னர் ஆற்றின் குறுக்காக இருந்த பாலத்தில் கறுப்பி நிறத்திலான கோடை வரைந்து விட்டு தொலைவில் ஆற்றின் நடுவில் தொலைகாட்டியைப்பொருத்திவிட்டு அதே உயரத்தில் தொலைகாட்டிக்கும் பாலத்திற்கும் இடையில் இரண்டு தட்டுக்களை ஒரு தடியில் பொருத்தினார் ரஸல் முக்கியமாக மூன்றையும் ஒரே உயரத்தில் இருக்குமாறு பொருத்தியிருந்தார் ரஸல் உண்மையில் பூமி தட்டையென்றால் இரண்டு தட்டுக்களினூடாக கோட்டைப்பார்க்கமுடியும் ஆனால் ஒருவேளை பூமி கோளமாக இருந்தால் தட்டின் கீழாகத்தான் கோடுகள் தெரியும்
ஆனால் இந்தப்பரிசோதனையின் முடிவில் தட்டின் கீழாகவே கோடு தெரிய ரஸல் ஹாம்டனின் சவாலை தோற்கடித்து பணப்பரிசைப்பெற்றுக்கொண்டார் ரஸல்.சாமுவேல் ரோபோதம் ஒளிவிலகலை கவனிக்கத்தவறியிருந்தார் ஆனால் ரஸல் அவற்றை கருத்திற்கொண்டு ஆற்றில் இருந்தான தொலைகாட்டியின் உயரத்தை அதிகப்படுத்தியதால் பரிசோதனை சரியாக அமைந்துவிட்டது இதனால் சரியான விடையையும் அவரால் பெறமுடிந்தது.


 தட்டை உலக சொசைட்டியை மீள உயிர்ப்பித்த பெருமை சாமுவேல் ஷெண்டனை சாரும் உலகம் தட்டையானது என்று உறுதியாக நம்பியவர் இவர் அதை தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார் இவர்

உலகம் தட்டையானது என்ற தனது கருத்தில் பிடிவாதமாக இருந்துவந்தார் ஷென்டன். அதற்குப் பல ‘விளக்கங்களை’யும் அவர் எடுத்துச் சொன்னார்.

அவற்றில் ஒன்றுதான், ஷென்டன் சொன்ன பலூன் உதாரணம். ஒரு பெரிய வெப்பக்காற்று பலூனில் பொருட்களை ஏற்றி வானில் நிலைநிறுத்த வேண்டும். பூமி தனது அச்சில் சுழல்வது உண்மை என்றால், வானில் பலூனை அசையாமல் நிலைநிறுத்தினாலே, அது அடைய வேண்டிய இடத்தை அடைந்து விடும் என்றார் ஷென்டன்.




பூமி உருண்டையானது என்ற விஞ்ஞானிகளின் கூற்று உண்மை எனில், இம்முறையிலேயே பொருட்களை உலகின் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்குக் கொண்டு சென்றுவிடலாம். ஆனால் நிஜத்தில் அப்படி நடப்பதில்லை என்பதால், பூமி தட்டையானது என்பதுதான் உண்மை என்றார் ஷென்டன்.

1956-ல் ‘ஸெட்டெட்டிக் சொசைட்டி’ என்ற அமைப்பின் செயலாளர் ஆனார், ஷென்டன். 1823-ம் ஆண்டு நிறுவப்பட்ட மிகப் பழமையான அமைப்புதான், ‘ஸெட்டெட்டிக் சொசைட்டி’. இந்த அமைப்பின் உறுப்பினர்கள், பூமி தட்டையான வட்ட வடிவம் கொண்டது, அது நிலையாக இருக்கிறது, சூரியன்தான் அதைச் சுற்றி வருகிறது என்று ஆணித்தரமாக நம்பினார்கள். சூரியன் வெறும் 51 கி.மீ. சுற்றளவே கொண்டது என்றும் அவர்கள் சொன்னார்கள்.

‘ஸெட்டெட்டிக் சொசைட்டி’யை ‘தட்டை பூமிக் கழகம்’ என்று பெயர் மாற்றம் செய்தார், ஷென்டன். அத்துடன், அவ்வப்போது பரபரப்பான அறிக்கைகளை வெளியிட்டு, தம்மையும், தமது அமைப்பையும் செய்தி வெளிச்சத்திலேயே வைத்திருந்தார்.

ஷென்டனின் அதிரடியான அறிவிப்புகளில் ஒன்று, ‘அமெரிக்கர்களும் ரஷியர்களும் சூழ்ச்சித்திறன் மிக்கவர்கள். அவர்கள் கூட்டுச்சதி செய்துதான், நம்மையெல்லாம் பூமி உருண்டையானது என்று நம்ப வைத்துவிட்டார்கள்.’

மேலும், ‘உண்மையிலேயே சூரியன் பூமியில் இருந்து 10 கோடி கி.மீ. தொலைவுக்கு அப்பால் இருக்கிறது என்றால், பூமியின் கோடை காலம் இப்படியா இருக்கும்?’ என்று ஷென்டன் கேள்வி எழுப்பினார்.

விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள், பூமியை உருண்டையாகத்தானே காட்டுகின்றன என்று சிலர் கேட்டபோது, ‘‘அவை ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட படங்கள்’’ என்றும் தடாலடியாகச் சொன்னார் ஷென்டன்.

கடந்த 1971-ம் ஆண்டில் ஷென்டன் இறந்துவிட்டார். ஆனால் தட்டை பூமிக் கழகம் இன்றும் உயிரோடு இருக்கிறது.

அதன் உறுப்பினர்கள், ‘‘மக்கள் சுயமாகச் சிந்திக்க வேண்டும், வழக்கமான அறிவியல் கருத்துகள் குறித்து அவர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்றுதான் நாங்கள் ஊக்குவிக்கிறோம்’’ என இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

சரி இவர்கள் பூமி தட்டை என்பதற்கு எவற்றை ஆதாரங்களாக கூறுகின்றார்கள் என்று பார்த்துவிடுவோம்

பூமி உருண்டையென்றே வைத்துக்கொள்வோம் ஒரு னெட்பால் பந்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதை அருகில் வைத்துப்படம்பிடித்தால் பந்தின் வளைவு எமது கண்ணுக்கு தெரியும் ஆனால் பூமியின் எந்தப்பகுதியில் இருந்து பார்த்தாலும் எம்மால் இப்படியான வளைவை பார்க்கமுடியாது எனவே பூமி தட்டையானது 
ஆனால் உண்மை இதுவல்ல பூமி மிகப்பெரியது ஒரு மிகப்பெரிய பந்தின் மீது அமர்ந்திருக்கும் எறும்புபோன்றுதான் நாம் புவியின் மேலே வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் புவியின் விட்டம் மட்டுமே 12700 கிலோமீட்டர்கள் என்றால் புவியின் அளவை  நாம் கற்பனைசெய்துபார்க்கவேண்டும் புவியின் வளைவை அவதானிப்பதர்கு நாம் அதற்கேற்ற உயரத்திற்கு செல்லவேண்டும் விமானத்தின் மீலம் 35 000 அடிகளுக்கு மேலாக நாம்பறந்துகொண்டிருப்போமேயானால் புவியின் வளைவை எம்மால் இலகுவாக அவதானிக்கமுடியும் அமெரிக்காவின் பல்கலைக்கழகமாணவர்கள் வெதர் பலூனினை பறக்கவிட்டு பூமியின் மேற்பரப்பை எடுத்த புகைப்படத்தைத்தான் நீங்கள் இப்போது பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள்



அடித்து இவர்கள் கூறும் காரணம் பூமி உண்மையில் சுற்றவில்லை காரணம் மணிக்கு 1600 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றுவது உண்மையானால் நாம் எல்லோரும் தூக்கிவீசப்பட்டுவிடுவோம் எனவே புவி சுற்றவில்லை எங்கிறார்கள்
உதாரணத்திற்கு  நாம் விமானத்தில் பிரயாணம் செய்யும்போது மணித்தியாலத்துக்கு 500 மைல் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது ஆனால் விமானத்தின் உள்ளே எம்மால் நடக்கமுடியும் நீரை அருந்தமுடியும் சாப்பிடமுடியும் எதுவும் பறக்காது இவற்றிற்கெல்லாம் காரணம் புவியின் அபரிமிதமான ஈர்ப்புவிசை ஒருவேளை புவி சடுதியாக சுற்றாமல் வேகம் குறைய ஆரம்பித்தால் எம்மால் புவியின் வேகக்குறைதலை உணரமுடியும் உதாரணமாக நாம் அதிவேகமாக காரில் போய்க்கொண்டிருக்கும்போது காரின் வேகத்தை எம்மால் உணரமுடியாது ஆனால் சடுதியாக பிரேக் போடும்போது எம்மால் வேகத்தை உணரமுடியும் இதைத்தான் நியூட்டன் தனது முதலாவது விதியில் குறிப்பிட்டிருக்கிறார் அதாவது புறவிசைகள் தாக்காமல் இருக்கும்போது இயங்கிக்கொண்டிருக்கும்பொருள் இயங்கிக்கொண்டே இருக்கும் நிலையாக இருக்கும்பொருள் நிலையாக இருந்துகொண்டே இருக்கும்
அடுத்தகேள்வி பூமி கோளம் என்படு உண்மை என்றால் ஒரு விமானம் ஒரு இடத்தில் இருந்து புறப்பட்டால் உடனடியாக விண்வெளிக்குத்தானே செல்லவேண்டும் ஆனால் எப்படி வேறு ஒரு நாட்டுக்கு சென்று தரையிறங்குகின்றது புவி தட்டை என்பதாலேயே இது சாத்தியம் என்று கூறுகிறார்கள் தட்டைப்பூமி கோட்பாட்டாளர்கள்
விடயம் இதுதான் புவியைவிட்டு விண்வெளிக்கு தப்புவதற்கு தேவையான வேகம் எவளவு தெரியுமா மணித்தியாலத்துக்கு 25020 கிலோமீட்டர்கள் செக்கனுக்கு 11.18 கிலோமீட்டர்கள் ,இதை எஸ்கேப் வெலோசிட்டி என்று கூறுவார்கள்,ஒரு கிரகத்தின் திணிவு அதன் ஆரை ஆகிய்வை அதிகரிக்கும்போது அந்த கிரகத்தில் இருந்து தப்புவதற்கான வேகம் அதிகரிக்கும் இது ஒரு சாதாரணவேகமல்ல மனிதன் கண்டுபிடித்த விமானங்கள் எதுவுமே இந்தவேகத்தில் செல்லமுடியாது
விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கட் மட்டுமே இந்த வேகத்தில் செல்லமுடியும் நாசாவின் எக்ஸ் 43 என்ற ஹைப்பர்சோனிக் விமானமே தற்போது வரை மணிக்கு 11854 கிலோமீட்டர்கள் வேகத்தை தொட்டிருக்கின்றது எனவே நாம் எவளவு முயற்சிசெய்தாலும் புவியைவிட்டு வெளியே செல்லமுடியாது எனவேதான் விமானம் எங்கிருந்து புறப்பட்டாலும்பூமியில்தான் இறங்கமுடியும்


ஜிபிஎஸ் என்ற ஒன்று இல்லவே இல்லை நம்மை ஏமாற்றுவதற்காகவே இந்த ஏற்பாடு ஆனால் நாம் பிரயாணம் செய்யும்போது நாம் பிரயாணம் செய்வதை லைவாகவே எம்மால் அவதானிக்கமுடிகின்றது அதோடு ஒரே ஒரு நாட்டினது சாட்லைட்டை நாம் பயன்படுத்தினால் கூட இது பொய் அந்த நாடு எம்மை ஏமாற்றுகின்றது என்று கூறிவிடமுடியும் ஆனால் அமெரிக்க இந்தியா ரஷ்யா என பல நாடுகள் ஜிபிஎஸ் இற்காக 24 சாட்லைட்களை அனுப்பியுள்ளன

கருத்துரையிடுக

0 கருத்துகள்