மருந்து மாறி ஏற்றியதால் மாணவி மரணம் - ஒவ்வாமை Allergy

அலர்ஜி என்றால் என்ன? என்று முதலில் பார்த்துவிடுவோம். எமது உடலினுள் செல்லும் ஏதாவது ஒரு பொருளுக்கு அல்லது தொடுகையுறும் பொருளுக்கு எமது உடலால் காட்டப்படும் செயற்பாடுதான் இந்த ஒவ்வாமை. இந்த ஒவ்வாமை அதாவது அலெர்ஜி எதற்காகவேண்டுமானாலும் ஒருவருக்கு வரலாம் ஆனால் அது வரும்வரை அந்த நபருக்கு எனக்கு இது ஒவ்வாதபொருள் என்பது தெரியவராது.
ஒருவருக்கு பூனையின் முடி, நாயின் முடி, மகரந்தமணிகள், தூசுக்கள், ஹெயார் டை என எதனாலும் இந்த ஒவ்வாமை வரலாம், சிலருக்கு நண்டுக்கறி அல்லது இறால் சாப்பிட்டால் கை,கால் தடித்து உதடுகள் வீங்கி மூச்செடுப்பதில் சிரமம் ஏற்படும் இதேபோல்தான் எதற்குவேண்டுமானாலும் ஒவ்வாமைவரலாம். இந்த ஒவ்வாமை வைத்தியசாலையில் எமக்கு ஏற்றப்படும் மருந்துகளாலும் வரலாம். வழக்கமாக நோய்க்கு ஏற்றப்படும் அண்டிபயோட்டிக்கிற்கு சிலருக்கு ஒவ்வாமை வரலாம் இவளவு ஏன் சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் பனடோலுக்குகூட சிலருக்கு அலர்ஜி ரியாக்ஸன் வரலாம்/ வந்திருக்கின்றது ஏன் எறும்புகடித்தால்கூட இது வரலாம்.

முந்தைய பதிவுக்கு இங்கே கிளிக்



அண்டிபயோட்டிக்கில் பல வகைகள் இருக்கின்றன. நோய்க்கிருமிகளின் வகைப்படுத்தல்களுக்கு ஏற்ப இந்த அண்டிப்யோட்டிக் மருந்துகள் வகைப்படுத்தப்படும். ஒருகிருமிக்கூட்டத்தை அழிப்பதற்கு  அதைத்தாக்கக்கூடிய அண்டிபயோட்டிக்கை கொடுத்தால் மட்டுமே அழிக்கமுடியும் அதைவிட்டு வேறு ஒன்றை நோயாளிக்குக்கொடுப்பதும் அதை நிலத்தில் ஊற்றுவதும் ஒன்றுதான்.

ஒவ்வாமையை கண்டறிவது எப்படி?

கடி/ சொறி ஏற்படுதல், கைகால்கள் தடிப்படைதல், உடலின் பகுதிகளில் சிவப்பு நிற தழும்புகாள் தோன்றும், மூச்செடுப்பதில் சிரமம் ஏற்படும், இதயத்துடிப்பு குறைவடையும், வயிற்றுவலி, சத்தி ஏற்படும், அதிக வியர்வை, பய உணர்வு ஏற்படும், உதடு மற்றும் நாக்கு வீக்கமடையும், வயிற்றோட்டம் ஏற்படலாம். 


மருந்து ஏற்றப்பட்டதும் அல்லது ஏதாவது ஒரு பொருளை நீங்கள் கையாளும்போது மேலே கூறியவற்றுள் ஏதாவது ஒன்றோ அல்லது ஏனைய அறிகுறிகளோ தென்பட்டால் உங்களுக்கு அந்த மருந்துக்கோ அல்லது பொருள்ளுக்கோ ஒவ்வாமை  இருக்கின்றது என்று அர்த்தம்.

தோல் தடிப்படைதல்- Urticaria



கண்மடல்கள் வீக்கமடைதல்- Angioedema





மூச்செடுப்பதில் சிரமம்
உணவுக்கு ஏற்படும் ஒவ்வாமையால் ஏற்படும் கடிசொறியால் அவளவு பாதிப்பில்லை ஆனால் கண்மடல்கள் வீங்கி மூச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாகவைத்தியசாலைக்கு செல்வது அவசியம், உணவு ஒவ்வாமைக்கும், மருந்துகளால் ஏற்ப்படும் ஒவ்வாமையாக இருந்தாலும் சரியான நேரத்திற்குள் மருத்துவசிகிச்சையை பெறாவிடில் நிமிடங்களில் மரணம் சம்பவிக்கலாம்.

ஒவ்வாமையால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மருத்துவமனையில் எவ்வாறு சிகிச்சை வழங்கப்படுகின்றது?Best Oral Care

ஓவ்வாமைக்கு எவ்வாறு மருத்துவம் செய்யவேண்டுமென்றவரைபடம் கீழே காட்டப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்கு சென்றதும் அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு   நோயாளிக்கு உடனடியாக ஒக்சிசன் வழங்கப்படும். தீவிர ஒவ்வாமையில் குறட்டைச்சத்தம் போன்ற ஒலியை மயக்க நிலையில் இருக்கும் நோயாளி ஏற்படுத்திக்கொண்டிருப்பார், இவ்வாறான சந்தர்ப்பத்தில் வாய்வழியாக குழாயை பொருத்தி செயற்கைச்சுவாசத்தை ஏற்படுத்துவார்கள் ( Intubation). இதற்கான தேவையில்லாத சந்தர்ப்பத்தில் அதாவது நோயாளியின் தீவிரம் குறைவாக இருந்தால் ஒக்ஸிசஸ் மாஸ் பொருத்தப்படும் அதோடு Asthalin ஆவி பிடிக்கச்செய்வார்கள்.


 Adrenalin எனப்படும் மருந்து கையில் நேரடியாக ஏற்றப்படும் (IM Intra muscular ), கையில்Cannula ஏற்றப்பட்டு Hydrocortisone எனப்படும் மருந்து வழங்கப்படும். Chlorphenamine எனப்படும் பிரிட்டோன் கனுலா ஊடாக வழங்கப்படும். இவற்றை தனியே ஒரு வைத்தியரால் செய்யமுடியாது குறைந்தது 3 தாதியர்களாவது தேவை, ஒரே நேரத்தில் இவை அனைத்தும் மிகக்குற்கிய காலத்தில் செய்துமுடிக்கப்படவேண்டும்.

நோயாளியின் இரத்த அழுத்தம் உடனடியாக குறைவடையலாம். இதற்காக சேலையின் கனூலாஊடாக விரைவாக வழங்குவார்கள், விரைவாக வழங்கலை போலஸ் என்று அழைப்பார்கள். இதன் பின்னர் ECG எடுக்கப்படும், சிலருக்கு ஒவ்வாமையால் நெஞ்சுவலி கூட ஏற்படலாம்.

வெளி நாடுகளில்   Adrenalin pen (Epi pen) விற்பனையில் இருக்கின்றது. இப்படியான ஒவ்வாமைகள் ஏற்படும்போது பேனாபோல் இருக்கும் இதன் மூடியைக்கழற்றி நாமே நமது காலில் ஊசியைப்போட்டுக்கொள்ளமுடியும். ஒவ்வாமை ஏற்பட்டு அம்புலன்ஸ் வருவதற்குள் ஏற்படும் மரணத்தை இது கூடியவரையில் தடுக்க உதவுகின்றது. வெளி நாடுகளில் ஒவ்வாமை இருக்கும் சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் இதைப்பயன்படுத்துகின்றார்கள்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு நோயாளிக்கு ஏற்றப்படும் மருந்தால் ஒவ்வாமை ஏற்பட்டாலும் மேலே கூறிய அனைத்தையும் உடனே செய்வார்கள், செய்யவேண்டும்.
அப்படியானால் வைத்தியசாலையில் ஏற்றப்படும் மருந்தால் ஏற்படும் அலர்ஜியை முன்பே கண்டறியவழிகள் இருக்கின்றதா? அப்படியானால் ஏன் மரணங்கள் சம்பவிக்கின்றன?

அடுத்தபதிவில் பார்ப்போம்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்