கள்ளக்காதல் காதலன் குடும்பத்தையும் கணவனின்குடும்பத்தையும் கொலைசெய்தபெண்

2019 october இல் அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டிருந்த இந்தியரான ரோஜோ தாமஸ் என்பவர் கேரளாவின் பத்தலந்திட்டு ஐஎஸ்பி சைமனிடம் தன் அண்ணன் சாவில் சந்தேகம் இருப்பதாக ஒரு கம்பிளாயிண்ட்டை கொடுக்கிறார் அண்ணன் சாவில் மட்டுமல்ல தன் தாய்,தந்தைமரணத்திலும் சந்தேகம் இருப்பதாக அவர் புகாரளிக்கிறார்.2019 இல் இந்த புகாரைவாங்கிக்கொண்ட போலீஸுக்கு தாம் ஒரு சீரியியல்கில்லரைத்தேடித்தான் போய்க்கொண்டிருக்கின்றோம் என்ற எந்தவிடயமும் அப்போது தெரிந்திருக்கவில்லை

புகாரளித்த ரொஜோதாமஸின் அண்ணை ரோய் தாமஸ் இறந்தது 2011 செப்டம்பர் 9இல் சுமார் 8 வருடங்கள் கழித்து இந்த புகார்வந்தமையால் கேஸ் தமக்கு மிகவும் சவலாக இருக்கப்போவது போலீஸாருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.ரோய்தாமஸ்ஸின் மனைவியின் பெயர் ஜோலிஜோசப்,இவர் இறந்த ரோய் தாமஸ்ஸை காதலித்து திருமணம்செய்துகொண்டவர் 1072 கட்டப்பல்லா என்ற கிராமத்தில் ஜோசப் என்றவிவசாயிக்கு 5 வது மகளாகப்பிறக்கின்றார் ஜோலி சிறியவயதில் இருந்தே இவருக்கு படிப்பில் அதிக நாட்டம் இருக்கவில்லை ஸ்கூலை முடித்துவிட்டு பிரீடிகிடி கோர்ஸுக்காக நெடுங்கட்டம் என்ற இடத்தில் உள்ளா எம் சி எம் காலேஜ்ஜில் இணைந்து அங்கு கல்வியை தொடர்ந்த ஜோலிமீது தன் ரூம்மேட்டிடம் இருந்து கம்மலை திருடிவிட்டார் என்று குற்றச்சாட்டுவைக்கப்பட அந்த காலேஜ்ஜையும் பாதியிலேயே விட்டுவிட்டார் ஜோலி இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் 1996 இல் தனது மாமனார் வீட்டில நடந்த ஒரு பன்சனுக்காக ஜோலி கூடத்தாயு என்ற இடத்துக்குப்போகிறார் அங்குதான் தன் வருங்கால கணவரான ரோய் தாமஸ்ஸை சந்திக்கிறார்.இருவரும் பார்த்துப்பேசி பிடித்துப்போக அவர்களுக்கிடையில் காதல் மலர்கின்றது கடிதங்கள்மூலம் தொலைபேசிமூலமும் தொடர்புகள் நீள இறுதியில் இருவரும் திருமணம் செய்துகொள்கின்றார்கள் ரோய் ஜோசப்பின் தந்தையார் ஒரு அரசாங்க உத்தியோகத்தர் தன் கணவரிடம் தான் ஒரு பட்டதாரி என்றுதான் கூறியிருந்தார் ஜோலி ஆனால் அவரது மாமியாருக்கு எப்படியோ இவர் கூறுவது பொய்


என்றவிடயம் தெரியவந்துவிட்டது இந்த சந்தர்ப்பத்தில் ஜோலியின் கணவரது பிஸ்னஸும் நட்டத்தில்போய்க்கொண்டிருந்தது,கணவர் சாதாரணமாக குடுப்பதைவிட ஒவ்வொரு நாளும் மிக அதிகமாகக்குடிக்க ஆரம்பித்துவிட்டார் அதோடு மாமியாரின் நச்சரிப்பும் ஜோலிக்கு அதிகரித்தது.பொறுமையிழந்த ஜோலி முதலில் தீர்த்துக்கட்ட நினைத்தது மாமியாரான அன்னம்மா தாமஸ்ஸைத்தான்,கொலைசெய்ய இவர் தேர்ந்தெடுத்த ஆயுதம் விசம் எப்படி செய்வது என்று கிரிமினலாக யோசித்தபோது  நாய்களைக்கொல்வதற்காக சிபாரிசு செய்யப்படும் டாக் கில் என்ற மருந்தைப்பற்றி இவருக்கு  தெரியவர் அதைவாங்கிக்கொள்கின்றார் ஜோலி சரியானசந்தர்ப்பத்தை எதிர்பார்த்துகாத்திருந்த ஜோலி 2002 ஆகஸ்ட் 22 இல் மாமியாருக்குக்கொடுத்த மட்டன் சூப்பில் சிறிதளவு சைனட்டை கலந்துகொடுத்துவிட சிறுது நேரத்திலேயே வாயில் நுரைதள்ளி மரணமடைந்துவிடுகின்றார் அன்னம்மா.

இறந்தவர் மிகவயதானவர் அதோடு அவருக்குவலிப்பு நோயும் அடிக்கடி ஏற்படுவதால் அந்த மரணத்தையாருமே பெரிதாக எடுக்கவில்லை மரணம் இயற்கையானதுதான் என்று முடிவுகட்டிவிட்டார்கள் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டையும் போலீஸார் அவளவாகக்கவனிக்கவில்லை.மாமியார் மரணித்ததும் வீட்டின் நிர்வாகம் முழுமையாக தன் கைக்குவந்துவிடும் என்று நினைத்த ஜோலிக்கு பெருத்த ஏமாற்றமே காத்திருந்தது காரணம் சொத்தில் ஒரு பகுதியைத்தான் தனக்கும் கணவருக்கும் தருவதற்கு மாமனார் சம்மதித்திருந்தார் ஏனைய சொத்தின் பகுதிகளை அமெரிக்காவில் இருக்கும் தன் கணவரான ராய் தாமஸ்ஸின் தம்பிக்கும் தங்கைக்கும் பகிர்ந்துகொடுப்பதுதான் அவரது இறுதிமுடிவாக இருந்தது எவளவு பேசிப்பார்த்தும் அவர் தன் முடிவில் பிடிவாதமாகவே இருந்தார்.இதனால் கோபமடைந்த ஜோலி அவரையும் தீர்த்துக்கட்டுவதற்கு சரியான சந்தர்ப்பம் ஒன்றை எதிர்பார்த்துக்காத்திருந்தார்.இந்த நேரத்தில் ஊரில் தனக்கு மரியாதையை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக நஸனல் சயன்ஸ் ஆப் இன்ஸ்டிடியூட்டில் புரொபஸராக வேலைபார்ப்பதாக ஊரில் கூறி அனைவரையும் நம்பவைத்தார் ஜோலி ,ஊராரை நம்பவைப்பதற்காக காலையில் சென்று மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார் இவர்.ஊரில் நடக்கும் விழாக்கள் போராட்டங்களிலும் இவர் தவறாமல் கலந்துகொள்வார் இதனால் ஜோலி டீச்சர் என்றால் அனைவருக்கும் தெரியும்படி பிரபலமாகியிருந்தார் ஜோலி.



ஆகஸ்ட் 28 2008 அன்னம்மா இறந்து சரியாக 6 வருடங்கள் கழித்து மரவள்ளிப்பொரியலில் சயனைட்டை தடவி தன் மாமனாருக்கு கொடுக்கிறார் ஜோலி அதை உண்ட சில நிமிடங்களிலேயே அவரது உடல் நிலை மோசமாக அவரை வைத்தியசாலைக்கு விரைவாக அழைத்துசெல்கின்றார்கள் ஆனால் போகும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிடுகின்றது,அவரையும் அன்னம்மாவின் உடலைப்புதைத்த அதே சர்ச்சிலேயே அவரின் சமாதிக்கு அருகில் புதைத்துவிடுகின்றார்கள்.இந்த மரணம் நடந்து சில மாதங்களில் சொத்துமுழுமையாக தன் கணவருக்குத்தான் சொந்தம் என போலியாக ஒரு பத்திரத்தை உருவாக்கி அந்தப்பத்திரங்களின் பிரதியை அமெரிக்காவில் இருக்கும் தன் கணவர் ராய் தாமஸின் தம்பியான ரோஜோ தாமஸிற்கும் இலங்கையில் இருக்கும் ரஞ்சி தாமஸிற்கும் அனுப்பிவிடுகிறார் ஜோலி.இதைப்பார்த்து அவர்கள் குழம்பிவிடுகின்றார்கள் இப்படியே சில வருடங்கள் ஓடிவிட ராய் தாமஸின் கடன் மேலும்மேலும் அதிகரிக்கிறது தினம் தினம் குடித்துவிட்டு வீட்டில் சண்டை அடி உதை என்று ஜோலியின் வாழ்க்கையில் மீண்டும் பிரச்சனைகள்வெடிக்க ஆரம்பிக்க மீண்டும்


சயனைட்டை கையில் தூக்குகின்றார் ஜோலி.2011 செப்டம்பர் 9 இல் புட்டை சாப்பிட்டுவிட்டு குளியலறைக்குசென்ற ரோய் தாமஸ் குளியலறைக்கு உள்ளேயே சுருண்டு மரணமடைந்துவிடுகின்றார்.பாத்ரூம் சென்றவர் நெடு நேரமாகியும் வெளியே வரவில்லை என அயலில் உள்ளவர்களிடம் ஓடிச்சென்று ஜோலி அலறுகிறார் அவர்கள் உடனடியாகவந்து கதவை உடைத்து உள்ளே பார்க்கும்போது கணவர் ராய் தோமஸ் வாயில் நுரைதள்ளி இறந்துபோய்கிடந்தார்.போஸ்ட்மாட்டம் ரிப்போட்டில் உடலில் சயனைட் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது கடன் தொல்லை அதிகரித்ததால் தற்கொலைசெய்திருப்பார் என ஜோலியும் காரணம்கூற போலீஸாரும் கேஸை மூடிவிட்டார்கள்.இந்த சந்தர்ப்பத்தில்தான் அமெரிக்காவில் வாழும் ராய் தாமஸின் தம்பியான ரோஜோ தாமஸிற்கு சந்தேகம் ஏற்பட ஆரம்பிக்கின்றது தன் குடும்பத்தைச்சேர்ந்தமூவர் மர்மமானமுறையில் மரணித்திருந்தார்கள்.அண்ணை அப்பா அம்மா மூவருமே உயிருடன் இல்லை.

இந்த மரணங்கள் நடைபெற்று சிலமாதங்களில் ஜோலிக்கு  சஜ்ஜு என்பவருடன் தொடர்பு ஏற்பட ஆரம்பிக்கின்றது.இருவரும் ஒன்றாகவெளியே செல்ல ஆரம்பிக்கிறார்கள்.பீஸ் பார்க் என்று இவர்கள் ஊர் சுற்றுவதை ஜோலி இருந்த அதே தெருவில் இருந்த ஜோலியின் சின்ன மாமனாரான  68 வயதுடைய மத்தியூஸ் என்பவர் கண்டிக்கிறார்.இதனால கோபமடைந்த ஜோலி 2014 பெப்ரவரி 24 இல் அவர் குடித்த விஸ்கியில் சயனைட் கலக்கப்படுது அடுத்த சில நிமிடங்களிலேயே வாயில் நுரைதள்ளி அவரும் இறந்துவிடுகிறார்

சஜ்ஜுவை எப்படியாவது திருமணம் செய்துவிடவேண்டுமென்று ஜோலி ஆசைப்படுகிறார் ஆனாலும் சஜ்ஜு ஏற்கனவே திருமணமானவர் அதோடு 2 வயதில் அவருக்கு ஒரு குழந்தையும் இருக்கின்றது இது ஜோலிக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது ஆனால் ஜோலி அதற்கும் திட்டத்தை தீட்டிநார்.

ஜோலியின் சின்னமாமனார் இறந்து 3 மாதத்திற்குள் நல்ல ஆரோக்கியமாக ஜோலியின் கைகளில் இருந்த சஜ்ஜுவின் 2 வயது குழந்தை அல்பின் சுகவீனமுற்று மரணமடைந்துவிடுகிறார் மூச்சுக்குழலில் இறைச்சித்துண்டு சிக்கியதுதான் காரணம் என போர்ஸ்மாட்டம் ரிப்போட் தெரிவிக்க அந்தகேசும் மூடப்பட்டுவிடுகின்றது.


இந்த மரணம் நடைபெற்று 2 வருடங்களாகிறது 2016 இல் சஜ்ஜு தன் மனைவியையும் ஜோலியையும் அழைத்துக்கொண்டு டெண்டிஸ்டிடம் செல்கின்றர் அவர்களை வாசலில் இறக்கிவிட்டு காரைப்பார்க்செய்ய சென்றுவிடுகின்றார்.உள்ளே சென்ற சஜ்ஜுவின் மனைவி சில்லி ஜோலியிடம் குடிப்பதற்கு தண்ணீர்கேட்கின்றார் ஜோலி கொடுத்த தண்ணீரை வாங்கிக்குடித்த சில்லி அங்கேயே சுருண்டு இறந்துவிடுகின்றார் அவரது வாயிலும் நுரை காணப்படுகின்றது.அவரின் இறுதிக்கிரியையில் ஜோலியும் சஜ்ஜுவும் நெருக்கமாக இருப்பதைப்பார்த்த ரோய் தாமஸின் தங்கை ரஜ்சி தாமஸ்ஸுக்கு ஜோலியின் மீது சந்தேகம் ஏற்பட அமெரிக்காவில் இருக்கும் தன் அண்ணன் ரோஜோ தாமஸிக்கு கால்செய்துவிடயத்தைக்கூறிவிடுகின்றார்.


இந்த மரணம் நடைபெற்று 3 மாதங்களில் சஜ்ஜுவும் ஜோலியும் திருமணம் செய்துகொள்கின்றார்கள் அதோடு ரோய் தாமஸின் வீட்டையும் விற்கமுயற்சிசெய்கின்றார்கள் விடயம் அமெரிக்காவில் இருக்கும் ரோஜோ தாமஸ் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பிவந்து பத்தலந்திட்டு ஐஎஸ்பி சைமனிடம் தன் அண்ணனின் சாவில் மர்மம் இருப்பதாகவும் தன் குடும்பத்தில் பலர் மர்மமாக இறந்திருப்பது தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் புகாரை போலீசாரிடம் கையளித்துவிடுகின்றார்

உடனடியாக போலீஸார் விசாரணையை ஆரம்பிக்கின்றார்கள் முதலாவது மரணம் நடைபெற்றது 2002 இல் அதாவது 17 வருடங்களுக்கு முன்னால் அடுத்ததாக மாமனார் இறந்தார் இது நடைபெற்றது 2008 இல் அடுத்து ஜோலியின் கணவர் இவர் இறந்தது 2011 இல் இப்படி படிப்படியாக 3 வர் ஒரே குடும்பத்தில் இறந்திருக்கின்றார்கள் அதோடு மாமனார் மத்தியூ 2014இல் இறந்திருக்கிறார்,ஜோலியின் தற்போதைய கணவர் சஜ்ஜுவின் 2 வயது மகள் 2014இல் இறந்திருக்கின்றார் அதோடு சஜ்ஜுவின் மனைவி 2016இல் இறந்திருக்கிறார்.அனைத்து மரணங்களுக்கிடையில் 3 ஒற்றுமைகளை போலீசார் கண்டுபிடிக்கின்றார்கள். முதலாவது அனைத்துமரணங்களின்போதும் ஜோலி மரணமடைந்த்வர்களுடன் கூடவே இருந்திருக்கின்றார்,இரண்டு அனைவரும் வாயில் நுரைதள்ளியே இறந்திருக்கின்றார்கள் மூன்றாவது அனைவரது உடலிலும் போஸ்ட்மோட்டத்தில் சயனைட் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்