நாம் இங்கே பார்க்கப்போகும் மாஜிக் விளையாட்டுக்கள் அனைத்துமே அதற்காக வருடக்கணக்காக பயிற்சி எடுக்கப்பட்டு மேடைகளின் பின்னே பார்வையாளர்களான எமக்குத்தெரியாமல் செய்யும் தந்திரவிளையாட்டுக்கள்தான் இதனால் தவறியும் யாரும் இவற்றை வீட்டில் முயற்சிசெய்துபார்த்துவிடாதீர்கள்
பென் அண்ட் டெல்லர் 1970களில் இவர்கள் மிகப்பிரபலமான மஜிக்ஸன்களாக இருந்தார்கள் அதற்குகாரணம் இவர்களது மிகப்பிரபலமான ட்ரக் மாஜிக்தான்
டெல்லர் கீழே தரையில் படுத்திருக்கும்போது அவருக்கு மேலாக மிகப்பிரமாண்டமான ட்ரக்வண்டி ஏறிச்செல்லும் கமராவை பென்னிற்கு அருகில் வைத்துக்கூட அவரைக்காட்டுவார்கள் ட்ரக்கின் பெரிய ரயர் அவர்மீது எறிச்செல்கின்றது ஆனால் பென்னிற்கு எதுவுமே நடக்காது இது எப்படி சாத்தியம் ? ட்ரக் இதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறதா,டயரில் ஏதாவது மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதா? பார்ப்பவர்கள் அனைவரையும் இந்த மாஜிக் ட்ரிக் உண்மையில் திக்குமுக்காடவைத்துவிடும்
ட்ரக் உண்மையான ட்ரக்தான் ஒவ்வொருதடவை ட்ரக் ரெல்லர் மீது ஏறிச்சென்றபின்பும் டெல்லர் சர்வசாதாரணமாக எழுந்துவந்துவிடுகின்றார் இதன் ரகசியம் எங்கு ஒளிந்திருக்கின்றதுதெரியுமா ட்ரக்கில்தான் ஒளிந்திருக்கின்றது டெல்லர் படுத்திருக்கும் பக்கத்திற்கு எதிர்ப்பக்கத்தில் அதிக எடைகள் ட்ரக் மீது பொருத்தப்படுகின்றன இதன் காரணமாக டெல்லர் இருக்கும் பக்கத்தில் உள்ளசில்லின் மீது எந்த பாரமும் விசையும் தாக்குவதில்லை ஆனால் இதற்கும் மேலதிகமாக டெல்லரின் பக்கத்தில் காணப்படும் ட்யர்கள் உண்மையான டயர்கள் அல்ல இந்த மாஜிக்கிற்காகவே உருவாக்கப்பட்ட பஞ்சால் ஆன டயர்கள் பார்ப்பதற்கு உண்மையானவை போலத்தோன்றினாலும் உண்மையில் இவை மென்மையானவை எனவே டெல்லர்மீது லாறி ஏறும்போது எந்த விசையையும் டெல்லர் அனுபவிக்கமாட்டார் இதனால் அவரால் இலகுவாக எழுந்து நடமாடமுடிகின்றது எனவே இதற்குப்பின்னால் இருப்பது மாஜிக் அல்ல பிஸிக்ஸ்தான்
அடுத்த மிக பயங்கரமான மாஜிக் நைப் தொரோயிங்க்
மேடையில் இருக்கும் வட்ட சில்லுமீது ஒரு பெண்ணை பிணைத்துவிட்டு சற்று தூரத்திற்கு சென்று மாஜிக்செய்பவர் தன்னிடமிருக்கும் கத்திகளை பெண்ணை நோக்கி எறிவார் அது மிகச்சரியாக பெண்ணின் அருகில் குற்றி நிற்கும் ஆனால் அவளை காயப்படுத்தாது இப்படி ஒரு தடவையல்ல பல தடவைகள் அவரால் கத்தியை பெண்ணின் வேறுவேறு உடல் பாகங்களுக்கு அருகில் ஏறியமுடியும் ஆனால் நடைமுறையில் இது சாத்தியமேயில்லாத ஒரு விடயம் இதை முயற்சிசெய்தால் மரணம் நிச்சயம் ஆனால் மேடையில் சில மாஜிக்ஸன்ஸ் கண்களைக்கட்டிக்கொண்டுகூட இதை சர்வசாதாரணமாக செய்துவிடுகிறார்கள் இதை எப்படி செய்கின்றார்கள் வாருங்கள் பார்க்கலாம்
இந்த மாஜிக்கை செய்யும் மாஜிக்ஸனை உற்று அவதானித்தால் உண்மை புலப்பட்டுவிடும் உண்மையில் மாஜிக்ஸன் தன்கைகளில் இருக்கும் கத்தியை அந்தப்பெண்ணை நோக்கி எறிவதில்லை அவர் ஹாண்ட் சிலைடிங்க் டெக்னிக் அதாவது கையில் இருக்கும் பொருட்களை தன் சட்டைக்குள் மறைக்கும் டெக்னிக்கை உபயோகப்படுத்தி கத்திகளை வீசுவதுபோல் போலியாக பாசாங்குசெய்துவிட்டு மிகவிரைவாக கத்திகளை தனது ஆடைக்குள்ளேயே மறைத்துவிடுகிறார்
அப்படியானால் வட்டசில்லில் குற்றி நிற்கும் கத்தி எங்கிருந்து வருகின்றது
அதன் ரகசியம் அந்த வட்டச்சில்லில்தான் மறைந்திருக்கின்றது இந்த பிரமாண்ட வட்டவடிவத்தட்டில் கத்தி நுழையக்கூடிய துளைகள் துளைக்கப்பட்டிருக்கின்றன பின்னால் இறப்பட் பட்டியின் உதவியுடன் கத்தில அதிகவிசையைக்கொடுத்து இழுத்து பொருத்திவைக்கப்பட்டிருக்கும் வட்டத்தட்டின் பின்னால் இருக்கும் நபர் இவற்றை இயக்குவார் தட்டின் முன்பக்கத்தை மட்டுமே பார்வையாளர்களால் பார்க்கமுடியும்.
முன்னால் இருக்கும் மாஜிக்ஸன் கத்திகளை வீசும்போது தட்டின் பின்னால் இருக்கும் உதவியாளர் இழுவையில் இருக்கும் கத்திகளை ஒவ்வொன்றாக விடுவிப்பார் உடனே கத்திகள் துளையினூடாக வெளியே வந்து நிற்கும் பார்க்கும் எமக்கு இது புலப்படாது காரணம் சில செக்கண்களுக்குள் இவை நடந்துமுடிந்துவிடும் இதற்கு ரைமிங்க் மிக முக்கியம் தட்டின் பின்னால் இருக்கும் உதவியாளர்களுக்குப்பதிலாக இப்போது மின்சாரத்தின் மூலம் இவற்றை இயக்கும்வகையில் மாஜிக்ஸங்கள் இதை உருவாக்கியிருக்கிறார்கள் இதை இயக்கும் ஆளியும் மேடையில் இருக்கும் மாஜிக்ஸனிடமேயிருக்கும்.
0 கருத்துகள்