ஒருதுளி ஒரு கோடி - most expensive liquids

உலகின் மிகவிலை உயர்ந்த திரவங்கள் இவைதான்/The Most Expensive Liquids In The World


நீர் உலகின் 71% பகுதி நீரினாலேயே சூழப்பட்டிருக்கின்றது அதோடு நாம் வாழும் எமது உலகின் மையப்பகுதியும் திரவத்தால் ஆன பாறைகளால் ஆக்கப்பட்டிருக்கின்றது இதைவிட எமது உடலின் 60 % ஆன பகுதி நீரினால்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றது இப்படியாக எம்மைசூழ உள்ள அனைத்துமே நீரினால் உருவாக்கப்பட்டவைதான்

நீர் சில இடங்களில் இலகுவாக இலவசமாகக்கிடைத்தாலும் பல இடங்களில் தண்ணீருக்கும் விலை உண்டு தண்ணீரைவிட உலகில் விலை மிக உயர்வான பல திரவங்கள் இருக்கின்றன அதுவும் நம்பமுடியாதவகையில் மிக விலை உயர்ந்த திரவங்களாகவும் காணப்படுகின்றன அவ்வாறான விலையுயர்ந்த திரவங்களைப்பற்றித்தான் நாம் இப்போது பார்க்கப்போகின்றோம்

 குதிரைலாட நண்டின் இரத்தம்

நீல நிறமாககபோத்தலினுள் அடைக்கப்பட்டிருக்கும் இந்த திரவம்தான் குதிரைலாட நண்டுகளின் இரத்தமாகும் மற்ற உயிரினங்களைப்போல் இவற்றின் குருதி சிவப்பு நிறமாக இருப்பதில்லை காரணம் இவற்றின்  குருதியில் ஈமோகுளோபினைக் (Hemoglobin) குருதி நிறப்பொருளாகக் இவை கொண்டிருப்பதில்லை. மாற்றாக, அவை ஒட்சிசனைக் காவுவதற்காக ஈமோசயனின் (Hemocyanin) எனும் செப்பினைக் (Copper) கொண்டுள்ள ஒரு புரதத்தைக் கொண்டுள்ளன. ஈமோசயனினில் செப்புக் காணப்படுவதால் குதிரைலாட நண்டுகளின் குருதியின் நிறம் நீலம் ஆகும். 


அவற்றின் குருதியில் அமீபாக்குழியங்கள் (Amebocytes) எனப்படும் ஒருவகைக் கலங்கள் காணப்படுகின்றன. இக் கலங்கள், முள்ளந்தண்டுளிகளின் உடலில் வெண்குருதிச் சிறுதுணிக்கைகள் புரியும் தொழிலுக்கு ஒப்பான தொழிலைப் புரிகின்றன. அதாவது இக் கலங்கள், குதிரைலாட நண்டுகளை நோய் விளைவிக்கும் நுண்ணங்கிகளிலிருந்து பாதுகாக்கின்றன. சத்திரசிகிச்சைமூலம் உடலுக்குள் பொருத்தப்படும் உபகரணங்கள் ,மருந்துகள் போன்றவை பாக்டீரியா தொற்றுக்கு உட்பட்டிருக்கின்றதா என பரிசோதிப்பதற்கு பயோமெடிக்கல் துறையினர் குதிரைலாட நண்டுகளின் இரத்தத்தையே பயன்படுத்துகின்றார்கள் இதனால் குதிரைலாட நண்டுகளின் இரத்தத்தின் விலை மிக அதிகமாக காணப்படுகின்றது 1 கலன் இரத்தத்தின் விலைமட்டும் 53320டாலர்களாகும் இதற்காகவே அதிகமான நண்டுகள் கொல்லப்படுகின்றன.இதனால் இந்த இனம் அழிவடையும் ஆபத்தை எதிர் நோக்கியிருந்தது ஆனாலும் தற்போது இதைப்போன்று செயற்கையாக மாற்று திரவம் உருவாக்கப்பட்டுள்ளது


கருத்துரையிடுக

0 கருத்துகள்