இறந்தவர் எழுந்துவந்த அதிசயம்

 கொடூரமான கனவுகளை நாம் கண்டிருப்போம் அவ்வாறான கனவுகளில் உயிருடன் புதைக்கப்பட்டிருப்பதுபோலவும் கனவுகள் வந்திருக்கலாம் உயிருடன் சவப்பெட்டிக்குள் புதைக்கப்பட்டிருக்கும்போது கை முஸ்டியினால் சவப்பெட்டியின் உள்ளே குத்தி குத்தி அதை உடைக்கமுயன்று அது பயனற்றுப்போய் பதட்டம் அதிகமாகி பயத்தில் அலறும்போது கண்விழித்த அனுபவங்கள் கூட உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம் ஆனால் இவையெல்லாம் கனவுகள்தான் ஒருவேளை உண்மையிலேயே உங்களை உயிருடன் சவப்பெட்டிக்குள் புதைத்தால் எப்படி இருக்கும்?எப்படி உயிர் தப்புவது?



உண்மையில் இதுபோன்ற பல சம்பவங்கள் வரலாற்றில்


நடைபெற்றிருக்கின்றன 1800களில் அமெரிக்காவின் ஹெண்டக்கியைச்சேர்ந்த ஒக்டீவியா சிமித் என்ற இளம் பெண்  மகன் இறந்துவிட்டதால் மிகவும் துன்பத்துக்கு ஆளாகின்றார் மகன் இறந்து 2 3 நாட்களிலே கோமா நிலைக்குச்சென்ற இந்தப்பெண் இறந்துவிடுகின்றார் இறந்ததும் இவரின் உடலை எடுத்துச்சென்று உறவினர்கள் அடக்கம்செய்துவிடுகின்றார்கள்,ஆனால் இவரைப்போன்று பலர் சடுதியாக கீழே விழுந்து கோமா நிலைக்கு சென்று 2 3 நாட்கள் உணர்வற்றிருந்தபின் மீண்டும் பழைய நிலைக்கு மீள ஆரம்பித்தார்கள் இந்தவிடயம் வைத்தியர்களையும் குழப்ப ஆரம்பித்திருந்தது அவர்களால் தெளிவான ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை பின்னர் ஒரு இலையான் போன்ற ஒரு பூச்சியின் கடியினாலே இவ்வாறான கோமா நிலை தோன்றுவதாக வைத்தியர்கள் கண்டறிந்தார்கள்.இந்தச்செய்தி சில நாட்களில் ஊடகங்களில் வெளிவந்ததும்

ஒக்டீவியா சிமித்தின் கணவருக்கு பொறி தட்டியது ஒருவேளை தன் மனைவியை தான் உயிருடன் புதைத்துவிட்டேனோ என எண்ணி அவரின் மனைவி புதைக்கப்பட்ட இடத்திற்கு ஓடிச்சென்றார் அவர் அங்கே சென்று குழியைத்தோண்டி சவப்பெட்டியைத்திறந்தபோது இவர் எதிர்பாராத கொடூரவிடயம் ஒன்று அங்கு அரங்கேறியிருந்தது .மனைவியின் தலை முதுகின் பக்கம் திரும்பியிருந்தது சவப்பெட்டியின் உட்புறம் கீறல் அடையாளங்கள் இரத்தக்கறையுடன் இருந்தன மனைவியின் கைகளின் விரல்கள் தேய்ந்து எலும்ப்கள் வெளியே தெரிந்தன அவரது மனைவி இப்போது நிச்சயமாக இறந்திருந்தார் ஆனால் உயிருக்காக உள்ளே போராடி மரணித்திருந்தார்.


1786 இல்  புரபஸர் ஒருவர் பாரிஸ்ஸில் 14 ஆம் நூற்றாண்டின் கல்லறைகள் உடைக்கப்பட்டு புனரமைக்கப்படும்போது பாரிஸ்ஸிற்கு சென்றிருந்தார்


அங்கிருந்த கல்லறைகள் தோண்டி எடுக்கப்பட்டு உடைக்கப்பட்டபோதுதான் உள்ளே இருந்த எலும்புக்கூடுகள் அசைந்திருப்பதற்கான தடயங்கள் இருப்பதையும் சவப்பெட்டியின் உட்புறம் கீறல் அடையாளங்கள் இருப்பதையும் இவர் அவதானித்திருக்கின்றார் தூக்கிலிடப்பட்டு இறந்துவிட்டார்கள் என முடிவுசெய்யப்பட்டு புதைக்கப்பட்ட சிலர்  சவப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டு புதைக்கப்பட்டபின்னர் மீண்டும் சுய நினைவுக்கு மீண்டிருக்கிறார்கள் அங்கு அவர்கள் பார்த்த அனுபவித்த விடயங்கள் மரணத்தைவிட கொடுமையானவையாக இருந்திருக்கின்றன வெளியேவரபோராடி பயங்கரமான சூழ் நிலையை எதிர்கொண்டு கத்திக்கத்தியே அவர்கள் மரணித்திருக்கின்றார்கள்


1817 ல் ஜோன் சினார்ட் ரெஸோர்ஸ் ஆப் ஹாரர் என்ற நாவலில் ஒரு உண்மை


சம்பவத்தை எழுதியிருந்தார் மிஸ்ரட் கோர்னிஸ் என்ற நபர் கடுமையான காய்ச்சல் காரணமாக மரணமடைந்துவிடுகிறார் அவரை உறவினர்கள் புதைத்துவிடுகின்றார்கள் அன்றிரவு பிணங்களை புதைக்கும் நபர்கள் புதைக்கப்பட்ட கல்லறையில் இருந்து சத்தம் வருவதை கேட்டதும் உடனடியாக மீண்டும் குழியைதோண்ட ஆரம்பித்தார்கள் அவர்கள் விரைவாக குழியைத்தோண்டினார்கள் ஆனால் நேரம் கடந்துவிட்டிருந்தது அவர்கள் சவப்பெட்டியை திறந்ததும் சவப்பெட்டியினுள்ளே கீறல்கள் இரத்த சகதிகளுடன் அவரது பிணமே கிடைத்தது உள்ளே இருந்தவர் ஏற்கனவே இறந்துவிட்டிருந்தார்.சில வருடங்களில் இவரது சகோதரனும் இறந்துவிட இவர்களது குடும்பத்தில் எஞ்சியிருந்த சகோதரி தன் முதல் சகோதரனைப்போல் தற்போது இறந்தவரும் துன்பப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இறந்த சகோதரனின் கழுத்தை வெட்டி துண்டாக்கிய பின்னரே அவரை புதைத்தார் அந்த நாட்களில் இவ்வாறு செய்வதற்கு சட்ட ரீதியாக அனுமதியிருந்தது ,இதயத்துடிப்பை வைத்தியரால் அவதானிக்கமுடியாமல்போகும்போது உடல் குளிராக இருந்தால் நபர் இறந்துவிட்டார் என்றே கருதப்படுவார் அப்போது இப்போது  நம்மிடமிருப்பதைப்போன்ற எந்த தொழில் நுட்பங்களும் இருக்கவில்லை


ஆனால் ஒரு நபர் இறக்காமலேயே இவ்வாற நிலமைகள் ஏற்படக்கூடும் மருத்துவத்துறையில் ஹைப்போ தேர்மியா என்ற நிலை இருக்கின்றது ஒருவர் இந்த நிலமையால் பீடிக்கப்படும்போது அவரது உடல் நிலை 21 டிகிரிவரைகூட குறையலாம் அதேபோன்று லெதார்ஜிக் சிலீப் என்ற நிலையில் இதயம் மிக மெதுவாகவே துடிக்கும் இப்படியான சந்தர்ப்பங்களில் மிகவும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களால் கூட இதயத்துடிப்பை உணரமுடியாது இவ்வாறு பல காரணங்களால் உயிருடன் இருப்பவரையே இறந்துவிட்டார் என கருதும் வாய்ப்புக்கள் இருந்தாலும் தற்போது எம்மிடம் மருத்துவத்தொழில் நுட்பசாதனங்களால் இது தவிர்க்கப்படுகின்றது  இதனால் 17 18 ஆம் நூற்றாண்டுகளில் இறந்தவரை உடனே புதைக்கமாட்டார்கள் குறைந்தது 3 நாட்கள் அவரது உடலை வைத்திருந்த பின்னே இறுதிக்கிரியைகளை மேற்கொள்வார்கள்

ஆனால் தற்போதும் இறந்தவர் உயிர்த்தெழுந்த கதைகளை சமூகவலைத்தளங்கள் மூலமாக எம்மால் அறியமுடிகின்றது ஆனாலும் சரியான தகுதியற்ற வைத்தியர்களால் இவ்வாறான தவறுகள் 


நடைபெறத்தான் செய்கின்றன பிரேசில் நாட்டின் ரியாக்கோ நகரில் 37 வயதான ரோஸ் அஞ்சேலா என்ற பெண் செப்ஸிஸ் காரணமாக இறந்துவிட்டார் என தீர்மானிக்கிறார் வைத்தியர் ,அவை புதைத்து 11 நாட்களின் பின்னர் அவரது கல்லறையில் இருந்து சத்தம் கேட்பதை அவதானித்த உறவினர்கள் உடனடியாக குழியை தோண்டி சவப்பெட்டியை திறந்தபோதுதான் அதிர்ச்சிகரமான அந்த விடயம் அவர்களுக்கு தெரியவருகின்றது

ஆஞ்சலோவின் நெற்றியிலும் கைகளிலிலும் இருந்து இரத்தம் வெளிவந்து உறைந்திருந்தது அவர் நீண்ட நாட்களாக வெளியே வருவதற்கு போராடியே பின்னர் மரணமடைந்திருக்கின்றார்

1993 இல் ஆபிரிக்காவில் வில்லியம் என்பவரும் அவரது மனைவியும்


திருமணமான புதிதில் காரில் பிரயாணம் செய்யும்போது கொடூரமான விபத்து ஒன்றை சந்திக்கின்றார்கள் அதில் மனைவி தப்பிவிடுகிறார் ஆனால் கணவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துவிடுகின்றார். அவரது உடலை பிரேதப்பரிசோதனைக்காக  எடுத்துச்செல்கின்றார்கள் அங்கே சில நாட்கள் குளிர்சாதனப்பெட்டிக்குள் அவரது உடல் வைக்கப்படுகின்றது அங்கே இருந்த ஊழியர்களுக்கு பெட்டிக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்க ஆரம்பிக்கின்றது ஆரம்பத்தில் பயந்தாலும் பின்னர் ஒருவாறு பெட்டியை திறந்துபார்க்கும்போது இறந்துவிட்டதாக கருதப்பட்ட  இந்த நபர் உயிரோடு இருப்பது தெரியவருகின்றது கதை இத்துடன் முடியவில்லை உயிருடன் மீண்ட வில்லியத்தைப்பார்க்க அவரது மனைவி திரும்பிவரவே இல்லை உயிருடன் மீண்ட கணவர் உண்மையில் ஒரு சோம்பி என பயந்த அவரது மனைவி ப்யத்தில் ஊரைவிட்டே ஓடிவிட்டார் மத்தியகாலப்பகுதியில் இவ்வாறுதவறுதலாக புதைக்கப்படும் மீண்டும் சவப்பெட்டிக்குள் இருந்து திரும்பினால் அவர்களை ட்ரெகுல்லாக்களாக கருதி மக்கள் அவரை கம்பத்தில் கட்டிவைத்து உயிருடன்  எரித்தே கொன்றிருக்கின்றார்கள்


பிரான்ஸை சேர்ந்த 19 வயதான அஞ்சலோ ஹேய்ஸ் கார்விபத்தில்


மரணமடைந்துவிடுகின்றார் அவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்னர்தான் அவரது தந்தை மகன் மீது 2 லட்சம் டாலர்களுக்கு இன்சூரன்ஸை செய்திருந்தார் பணத்திற்காக மகனை இவர் கொன்றிருக்கலாம் என சந்தேகித்த கம்பனி கோர்ட்டின் உதவியுடன் மீண்டும் கல்லறையைத்தோண்டியபோது இறந்துவிட்டதாக கருதப்பட்ட மகனின் இதயம் துடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது அவர் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டார் இதைவிட ஆச்சரியமான விடயம் எது தெரியுமா அவரைப்புதைக்கப்பயன்படுத்திய சவப்பெட்டிதான் அந்த சவப்பெட்டி உள்ளே ஒருவரை உயிருடன் வைத்திருக்கும்வகையில் பிரத்தியேகமாக செய்யப்பட்டிருந்தது இதன் காரணமாகவே அவரது மகனால் நீண்ட நாட்கள் உயிருடன் இருக்கமுடிந்தது 


1987இல் 39 வயதான தொழில் அதிபர் எதிர்பாராதவிதமாக ஒரு நட்டத்தை சந்திக்கிறார்  அதிலிருந்து மீளுவதற்கு பெரும்தொகை பணம் தேவைப்பட்டது இதனால் தன் மனைவியிடமிருந்து பணம் பெறுவதாற்காக தன்னைக் கடத்திப்புதைப்பதற்கு தானே குண்டர்களை தயார்செய்துவிடுகிறர்


அவர்களும் இவரை சவப்பெட்டிக்குள் அடைத்துப்புதைத்துவிடுகிறார்கள் ஆனால் உணவு ஆக்ஸிஜன் சப்பிளை போன்றவற்றை ஏற்படுத்திவிட்டுத்தான் அவர் புதைக்கப்படுகின்றார் புதைக்கப்பட்டபின் அவரது குடும்பத்துடன் பேரம்பேசப்படுகின்றது 1 மில்லியன்டாலர்களுக்கு அவரது குடும்பம் சம்மதிக்க பணத்தைகொடுப்பதற்கு அவரது மனைவி வரும்போது போலீஸார் குற்றவாளிகளை கைதுசெய்து புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து சவப்பெட்டியை தோண்டி எடுக்கின்றார்கள் உள்ளே திறந்து பார்த்தால் அதிர்ச்சி அவர் ஏற்கனவே இறந்துவிட்டிருந்தார் ஆக்ஸிஜன் சப்பிளையில் ஏற்பட்ட தடை காரணமாகவே அவர் மரணமடைந்திருந்தார் போலீஸார் கடத்தியவர்கள் மீது ஆட்கடத்தல் மற்றும் கொலைக்குற்றத்திற்காக வழக்குப்பதிவுசெய்து அவர்களை உள்ளே தள்ளிவிடுகின்றார்கள்



 கில்பில் என்ற பிரபல ஹாலிவூட் திரைப்படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள் அதில்வரும் பியட்ரிக்ஸ் உயிருடன்   நிலத்தில் புதைக்கப்பட்டபோது தன்கைகளாலே அதை உடைத்துக்கொண்டுவெளியே வந்துவிடுவார் உண்மையிலேயே ஒருவரை உயிருடன் சவப்பெட்டிக்குள் அடைத்துப்புதைத்தால் அவரது அனுபவம் எப்படி இருக்கும் இதை உண்மையிலேயே செய்துபார்ப்பதற்காக அமெரிக்காவின் பிரபல ரியாலிட்டி மாஜிக் ஷோக்களை நடத்தும் மித் பஸ்டர் குழிவினர் இதை முயற்சிசெய்தார்கள்

ஆனால் நிஜம் படத்தைவிட மிச மோசமாக இருந்தது மிகவும் வலிமையான 600 குத்துக்களின் பின்னர்தான் சவப்பெட்டியில் துளையை இட முடிந்தது ஆனால் அதனூடாக கையை 60 செண்டிமீட்டர் அதாவது இரண்டடி உயரத்திற்கு மட்டுமே உயர்த்த முடிந்தது ஆனால் சவப்பெட்டி 6 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்தது எனவே உண்மையில் இது சாத்தியமற்றவிடயம்தான் 

ஆனால் ஏன் பிணத்தை 6 அடி ஆழத்திற்கு குழி தோண்டி புதைக்கின்றார்கள்


தெரியுமா இதற்கும் ஒரு காரணம் இருக்கின்றது1655 இல் லண்டனை பிளேக் நோய் ஆட்டிப்படைத்தது அந்த நோய் இறந்தவர்களிடமிருந்தும் பரவும் என்ற காரணத்தினால் 6 அடி ஆழமான குழியைத்தோண்டி புதைக்கும் வழக்கத்தை அவர்கள் அப்போது பின்பற்றினார்கள் பின்னர் தொடர்ந்து இதே வழக்கத்தை பல நாடுகள் பின்பற்ற ஆரம்பித்தன இந்த வழக்கம் இன்றுவரை தொடர்கின்றது


ஆனால் நிபுணர்கள் 6 அடி ஆழத்தில் புதைத்தாலும் தப்ப வாய்ப்பிருப்பதாக கூறுகின்றார்கள் நிலத்திற்கு கீழே எமக்கு தேவையான ஆக்ஸிஜனின் அளவு மிகக்குறைவாகவே இருக்கும் சாதாரண அளவையுடைய சவப்பெட்டியில் இருக்கும் ஆக்ஸிஜன் சராசரி வளர்ந்த நபர் ஒருவருக்கு 40 நிமிடங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். ஆனால் புதைக்கப்பட்ட நபர் மிகவும் பயந்து பதட்டமடைந்தால் இதயம் வேகமாக துடிக்கும் வேகமான சுவாசிப்பார் இதனால் ஆக்ஸிஜன் மிகவேகமாக முடிவடைந்துவிடும் இது நிலமையை இன்னும் மோசமாக்கிவிடும்

எனவே நீங்கள் இப்படியான சவப்பெட்டிக்குள் மாட்டிக்கொண்டால் முதலில் அமைதியாக இருக்கவேண்டும் பதட்டமடையக்கூடாது அடுத்ததாக உங்கள் டீசார்ட் அல்லது ஏதாவது ஒரு துணியை உங்கள் மூக்கு மற்றும் வாயைச்சுற்றி நன்றாக கட்டிக்கொள்ளவேண்டும் இதனால் உள்ளே இருக்கும் தூசியால் உங்கள் நுரையீரல் பாதிப்படையாது பாதுகாக்கப்படும் 


உங்களிடம் மோதிரம் பேனை அல்லது திறப்பிருந்தால் உள்ளே உள்ள பலகையில் சத்தம் வருமாறு தட்டி அல்லது கீறி ஒலி எழுப்பி யாரையாவது உதவிக்கு அழைக்கமுயற்சிக்கலாம் உதவி எதுவும் கிடைக்கவில்லையென்றால் சவப்பெட்டியினை உடைக்கவேண்டும் கைகளால் அல்ல கால்களால் உதைந்து உடைக்கவேண்டும் உடையும்போது உள்ளே மண் அடைந்துகொள்ளும் இப்போது உங்கள் தலைக்கு அருகேயுள்ள பகுதியை கைகளால் பலம் முழுவதையும் பயன்படுத்தி உயர்த்தவேண்டும் இதற்கு கால்களுக்கிடையில் நிரம்பியிருக்கும் மண்ணில் உதைத்து விசையைப்பெற்றுக்கொள்ளலாம் அப்படியே பலத்திய பயன்படுத்தி எழ முயற்சிசெய்துகொண்டு எழுந்தால் ஒருவாறு எழ்ந்து நிற்கமுடியும் பின்னர் மெதுமெதுவாக மேலே தரைக்கு மீளமுடியும் ஆனால் ஒவ்வொரு சவப்பெட்டியும் ஒவ்வொரு விதமாக தயாரிக்கப்படுகின்றன என்பதுதான் முக்கியவிடயம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்