ஜனவரி முதல் 50 000 ரூபா அபராதம்-TIN No ஐ online இல் பெற்றுக்கொள்வது எப்படி?

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

TIN no ஐப்பதிவு செய்யாதோருக்கு 50000 ரூபா தண்டப்பணமாக அறவிடப்படும்


இலங்கை அரசு TIN -tax identification no என்ற சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றது, இதை அரசு முன்பே அறிமுகப்படுத்தியிருந்தாலும் உலக வங்கியின் நிபந்தனைகளின்பேரில் இப்போது இது கடுமையாக்கப்பட இருக்கின்றது.



வங்கியில் வைப்பிலிடப்படும் பணம்கூட கண்காணிக்கப்படும். அந்தப்பணம் எங்கிருந்துவந்தது என்பதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்படவேண்டும் அதற்கான வரிப்பணமும் அறவிடப்படும். 

TIN இலக்கத்தை ஒன்லைனிலும் பெற்ருக்கொள்ளமுடியும். இங்கே கிளிக் செய்து படிவத்தை பூர்த்திசெய்துகொள்ளலாம்.

Link ஐ கிளிக் செய்ததும் அதில் இருக்கும் Registration type இல் Individual Local என்பதை கிளிக் செய்யுங்கள்


அதன் பின்னர் கீழே இருக்கும் படிவம் தோன்றும்.


2) இங்கே உங்கள் அடையாள அட்டை இலக்கத்தை  நிரப்பிக்கொள்ளுங்கள்.

4) இங்கே தமிழர்களுக்காக மட்டும் இடம்விடப்பட்டுள்ளது. kandaiyah yogarajah என்பது உங்கள் பெயராக இருந்தால் இங்கே K.Yogarajah என்று குறிப்பிடவும்.

5) உங்கள் பிறந்த நாளை இங்கே குறிப்பிடவும்.

6) பால்- ஆண்/ பெண்

7) தமிழ் என்பதை தெரிவுசெய்யவும்

8) பிறந்த நாடு- இலங்கை

9) SMS, Mail, E- mail இதில் எந்த முறையையாவது நீங்கள் தெரிவுசெய்யலாம், முடிந்த அளவில் E- mail  ஐ தெரிவுசெய்யவும் ஆனால் நீங்கள் எந்த முறையையும் தெரிவுசெய்யலாம்.


10) Resident என்பதை தெரிவுசெய்யவும்

11) உங்களுக்கு இரட்டைக்குடியுரிமை இருந்தால் Yes இல் கிளிக் செய்யவும், இல்லையாயின் No இல் கிளிக் செய்யுங்கள்.

Yes கொடுத்திருந்தால் 13 இல் குடியுரைமை கொடுத்த நாடை தெரிவுசெய்யவேண்டும்.

15) இதில் சில வேலைகளை ஏற்கனவே பட்டியல்படுத்தியிருக்கின்றார்கள், உங்களது தொழில் இந்தப்பட்டியலில் இல்லையென்றால் OTHERS என்பதை தெரிவுசெய்துவிட்டு அதற்கு கீழே இருக்கும் இடைவெளியில் உங்கள் தொழிலை நிரப்பிக்கொள்ளவும்.

16) அண்மையில் இருக்கும் பிராந்திய அலுவலகத்தை தெரிவுசெய்யவும்.



உங்கள் நிரந்தர வதிவிட விலாசத்தை ஆங்கிலத்தில் நிரப்புவதாயின் 1, சிங்களத்தில் நிரப்புவதாயின் 2, தமிழில் நிரப்புவதாயின் 3 இலும் நிரப்பவேண்டும்.

4- Postal code உதாரணமாக யாழ்ப்பாணத்தின்Postal code 40000 , உங்கள் வசிவிடத்திற்குரிய Postal code ஐ அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.


1) மாகாணத்தை தெரிவுசெய்யுங்கள்

2) பிரதேச செயலகம்

3) மாவட்டம்

4) கிராமசேவகர் பிரிவு

தற்காலிகமாக நீங்கள் வேறு ஒரு இடத்தில் வசித்தால் அதையும் நிரந்தரவதிவிடத்திற்கான இடைவெளியை நிரப்பியதுபோன்று நிரப்பவேண்டும்.


உங்கள் தொலைபேசி எண், E- Mail முகவரி, உங்கள் வங்கியின் பெயர், வங்கியின் கணக்கு இலக்கம் என்பவற்றை சரியாக நிரப்பவும்.


பின்னர் கீழே இருக்கும் இடைவெளியை நிரப்பவேண்டும்




1) நீங்கள் சிங்கிளாக இருப்பின் அதையும் இல்லையென்றால் திருமணமானவர் என்றும் குறிப்பிடவும்.

2) உங்கள் மனைவியின்/ கணவரின் பெயர்

3) கணவரின்/மனைவியின் அடையாள அட்டை இலக்கம்

4) அவர் முன்பே TIN நம்பர் எடுத்திருந்தால் அதைகுறிப்பிடவும்.

5) பிள்ளைகள் இருந்தால் Add child என்பதைக்கிளிக்செய்து பிள்ளைகளின் விபரங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.

6) நீங்கள் சுயதொழில் செய்பவராயின் அதன் பதிவு இலக்கத்தையும், தொழிலையும் Add business என்பதை கிளிக்செய்து குறிப்பிடவேண்டும்.

1) இதில் கிளிக் செய்து National identity card என்பதை தெரிவு செய்யுங்கள். Select என்பதை கிளிக் செய்து உங்கள் போனில் அல்லது லப்பில் இருக்கும் போட்டோவை அப்லோட் செய்துகொள்ளவேண்டும். 

2)  இதில் கிளிக் செய்து Others என்பதை தெரிவுசெய்துவிட்டு 3 இல் Government new policy என்று type செய்துகொள்ளாலாம்/ Income Tax Clearance என்பதை தெரிவு செய்யுங்கள்.

Next ஐ கிளிக் செய்யுங்கள், நீங்கள் கொடுத்த Details அனைத்தும் சரியா என்பதை சரிபார்க்க ஒரு Summary sheet தோன்றும், இதில் ஏதாவது தகவல்களை நீங்கள் மாற்றவிரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.



1)Name of applicant- உங்கள் பெயர்
2)Designation of applicant- உங்கள் தொழில்
3)Contact No- உங்களது தொலைபேசி இலக்கம்
4)இல் இருக்கும் ஆங்கில எழுத்துக்களை அருகில் இருக்கும் பெட்டிக்குள் type செய்து Submit என்பதைகிளிக் செய்யுங்கள்.

Acknowledgement number என்ற தரவு தோன்றும், கீழே இருக்கும் print என்ற பொத்தானை அழுத்தி Download செய்துகொள்ளுங்கள். 
Mail இற்கு கீழே இருப்பதைப்போன்ற தகவல் ஒன்றை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.



5 நாட்களுக்குள் உங்களால் TIN no ஐப்பெற்றுக்கொள்ளமுடியும், ஆனாலும் Mail இல் spam என்ற பகுதியில்தான் இந்த mail களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.



Tin No approve ஆகியதும் மேலே காட்டப்பட்டதுபோன்ற மெயில் உங்களுக்கு அனுப்பப்படும். கீழே இருக்கும் pdf இல் கிளிக் செய்து Download செய்துகொள்ளலாம் ஆனாலும் அதை open செய்வதற்கு நீங்கள் pass word ஐக்கொடுக்கவேண்டும்.

உங்களது முழுப்பெயர் Kandhaiya yogarajah என்றிருந்தால், மஞ்சளாக வர்ணம் தீட்டப்பட்டபகுதியில் காட்டப்பட்டிருக்கும் உங்கள் தந்தையின் முதல் 5 எழுத்துக்களும், உங்கள் பெயரின் இறுதி 5 எழுத்துக்களையும் ஒன்றாக சேர்த்து Kandhrajah  என்று type செய்தால் மாத்திரமே பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்