உஷ்ஷ் யாருக்கும் சொல்லாதீங்க/magic secrets - மாஜிக் ரகசியம் 03

வாளை விழுங்கக்கூடமுடியுமா? sword swallowing trick-Magic tricks reveled 




நீண்டவாளை விழுங்கும் மாஜிக் உயிருக்கே ஆபத்தாகக்கூடிய பயங்கரமான இந்த மாஜிக் விளையாட்டு 2000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில்தான் ஆரம்பமாகியது வீதிகளில் மக்களுக்கு காட்டப்படும் குறளிவித்தைகளில் ஒரு பகுதிதான் இது ,பிரிட்டிஸ் காட் டலண்ட் என்ற ரியாலிட்டி ஷோவில் அலெக்ஸாண்டர் மெகில்லா இதே மாஜிக்கை அனைவருக்கும் முன் செய்துகாட்டி அசத்தினார் சாதாரணமாக நீளமான கத்தியை விழுங்குவதோடு நிறுத்திக்கொள்ளாமல் விழுங்கியபடியே அனைவருக்கும் முன்னால் குட்டிக்கரணமும் அடித்துக்காட்டினார் இதைச்செய்ததும் அனைவரும் உறைந்துவிட்டார்கள் காரணம் சாதாரணமான ஒருவரால் கத்தியை இப்படி விழுங்கமுடியாது குடல் கிழிந்து இரத்தம் கசிந்து உடனே இறந்துவிடுவார் அதுவும் குத்துக்கரணம் அடித்தால் வாள் உடலை குற்றி கிழித்துக்கொண்டுவெளியே வந்துவிடும் அப்படியானால் எப்படி இதைச்செய்தார்?

இதற்குள் இரண்டுரகசியங்கள் இருக்கின்றது முதலாவது உண்மையிலேயே பயிற்சிமூலம் வாளைவிழுங்குதல் இதை எல்லோராலும் செய்யமுடியாது 2 இலட்சத்தில் ஒருவரால் மட்டுமே இது சாத்தியம்


வாளை விழுங்கும்போது வாந்தி ஏற்படும் அந்த உணர்ச்சிகளைக்கட்டுப்படுத்தி உணவுக்கால்வாயையும் உடலையும் நேராக்கும் பயிற்சியை நீண்டகாலம் மேற்கொண்டவர்களால் மட்டுமே இது சாத்தியம் இரண்டாவது ரகசியத்தை யார்வேண்டுமானாலும் இலகுவாக செய்யமுடியும் காரணம் பிளாஸ்டிக் வாள் பார்ப்பதற்கு உலோகத்தால் உருவாக்கப்பட்டதுபோன்று மினுமினுப்பாக இருந்தாலும் உடனே சுருளக்கூடிய பிளாஸ்டிக்கினால் இது உருவாக்கப்பட்டிருக்கும் எனவே வாளை அனைவரிடமும் காட்டிவிட்டு வாய்க்குள்வைத்து சிறிது அழுத்தினால் வாய்க்குள் வாள் சுருள ஆரம்பித்துவிடும் வெளியே மேடையில் இருந்து பார்ப்பவர்கள் உண்மையிலேயே வாளை விழுங்கிவிட்டதாக ஆச்சரியமடைவார்கள்

உஷ்ஷ் யாருக்கும் சொல்லாதீங்க - மாஜிக் ரகசியம் 01

உஷ்ஷ் யாருக்கும் சொல்லாதீங்க - மாஜிக் ரகசியம் 02

கத்திமேல படுத்து ஒரு மாஜிக் முடியுமா-Sword stabbing trick



ஜேசன் மோர் என்ற மாஜிக்ஸன் மேடையின் மீது உலோகத்தாலான கூரான கம்பியொன்றை வைத்துவிடுகிறார் அவரது உதவியாளர்கள் ஜேசன் மோரை தூக்கிச்சென்ரு அவரை கம்பியின் கூரானமுனையில் ஜேசனின் முதுகுப்புறம் பொருந்தும்படியாக வைத்துவிடுகிறார்கள் சாதரணமாக இப்படி ஒருவரை கூரான உலோகத்தில் வைத்தால் உலோகம்  உடலைத்துளைத்துக்கொண்டு மறுபக்கம் வந்துவிடும் ஆனால் ஜேஸனின் உடல் சில செக்கண்ட்கள் அப்படியே அந்தரத்தில் நின்றது ஆனால் சடுதியாக உலோகம் ஜேஸனின் உடலைத்துளைத்துகொண்டுவெளியே வந்துவிட்டது அனைவரும் அதிர்ச்சியடைந்துவாயைப்பிளக்கும்போது ஜேஸனை உதவியாளர்கள் கீழே இறக்குகிறார்கள் ஜேஸன் சிரித்துக்கொண்டே கீழே இறங்குகின்றார்

இது எப்படி சாத்தியமானது

இந்த மாஜிக்கின் ரகசியம் ஜேஸன் ரகசியமாக அணிந்திருந்த இடுப்புப்பட்டியினுள்ளே மறைந்திருக்கின்றது இந்த மாஜிக்கை செய்வதற்காகவே உலோகத்தாலான இடுப்புப்பட்டி தயாரிக்கப்பட்டிருக்கின்றது அதோடு மேடையில் வைக்கப்படிருந்த உலோகக்கம்பியின் முனையை அழுத்தினால் அது ஸ்பிரின் போல் உள்ளே சென்றுவிடும் தயாரிக்கப்பட்ட இடுப்புப்பட்டிக்கு 2 பக்கங்கள் பின்புறமுள்ள இடுப்புப்பட்டியின் பகுதியில் உலோகத்தாலான கம்பியின் முனை பொருந்தும்படி ஜேசனை உதவியாளர்கள் வைப்பார்கள் வைத்ததும் அதன் கூரான முனை கம்பிக்குள்ளே ஸ்பிரிங்கை அழுத்தியதுபோல் சென்றுவிடும் எனவே ஜேஸனுக்கு எந்த வலியுமிருக்காது

அப்படியானால் வயிற்றை துளைத்துக்கொண்டுவந்த உலோகமுனை எங்கிருந்து வந்தது

இதன் ரகசியம் இடுப்புப்பட்டியின் அவரது வயிற்றுப்புறப்பகுதியில் மறைந்திருக்கின்றது வயிற்றுப்புறத்தில் இருக்கும் இடுப்புப்பட்டியில் சட்டையைக்கிழித்துக்கொண்டுவெளியேவரும்வகையில் உலோகத்தாலான துண்டு ஸ்பிரிங்கின் உதவியுடன் அழுத்தி உருவாக்கப்பட்டிருக்கின்றது ஆனால் இவை அனைத்தையும் வெளியில் இருந்து ஒருவர் இயக்கவேண்டும் ரைமிங்தான் இங்கு மிக முக்கியமான விடயம் 



கருத்துரையிடுக

0 கருத்துகள்