Man vs Wild- real or fake இதுக்குப்பின்னால இவளவு இருக்கா?

 




ஒரு தவளை… கொஞ்சம் துணிச்சல்… இரவு உணவு.

டிஸ்கவரி சனல் பார்ப்பவரா நீங்கள்? (தமிழில்கூடப் போட்டபிறகும்  அதைப்பார்க்காமல் தங்கம்’ பார்ப்போர் மேலே தொடரவேண்டாம்.) அதில் ஒளிபரப்பாகும் Man vs Wild பார்ப்பதுண்டாபியர் கிரில்ஸ் என்னும் ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர் நாம் மனித உதவிகளற்ற வனாந்தரங்களில் தனியாக மாட்டிக் கொண்டால் என்ன செய்து உயிர்தப்பலாம் என்று உலகத்தின் ஒவ்வொரு மரணப்பொறிகளிலும் விழுந்து விழுந்து எழுந்துகாட்டுகிறார். நாளைக்கே வாழ்க்கை நம்மையும் ஒரு மரணப்பொறியில் மாட்டிவிடலாம் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் அதைப்பார்த்து வாழ்க்கையின் சவாலை ஏற்கத் தயாராகலாம்தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளலாம். அல்லது கயிறுகிறபிக்ஸ்மற்றும் டூப்களின் உதவியொடு அநியாயத்தைத் தட்டிக்கேட்கும் நம் நாயகர்களின் பம்மாத்துவேலை அலுத்துப்போனவர்கள் ஒரு உண்மையான வீரசாகசத்தைக் காணவரும்பினாலும் இதைப் பார்த்து மயிர்கூச்செறியலாம்.

பியர் கிறில்ஸ்ஸால் முதலில் Channel 4 இல் Born Survivor நிகழ்ச்சியாக நடத்தப்பட்ட இதுபின்னர் Discovery Channel இல் Man vs  Wild ஆக ஒளிபரப்பப்படத் தொடங்கியபின்தான் உலகளவில் மிகப்பிரபலமானது. நேற்று எண்ணிய கணக்கின்படி 1.2 பில்லியன் பார்வையாளர்கள் உலகளவில் இதை  வெறித்தனமாகப் பார்க்கின்றனர். சகாரா பாலைவனம் தொடக்கம் கிறீன்லண்ட் பனிமலைகள்வரை உலகிலுள்ள எல்லா வனாந்தரங்களிலும் தனியாக மாட்டிக்கொண்டால் நாம் எவ்வாறு உயிர்தப்புவது என்பதைச் செய்துகாட்டுவதற்காக பியர் கிறில்ஸையும்அதைப் படம்பிடிப்பதற்காக ஒரு படப்பிடிப்பக் குழுவையும் இறக்கிவிடுவார்கள். அங்கேயே ஆரம்பமாகிவிடுகிறது மயிர்கூச்செறியும் சாகசவேலை.  இறக்கிவிடுவார்கள் என்றால் கைபிடி பத்திரமாக கொண்டுவந்து தரையில் விட்டுவிடுவார்கள் என்றில்லை. பிளேனைக் கவிழ்த்து கிறில்ஸை விழத்திவிடுவதுகடலுக்குள் போட்டுவிடுவது… இப்படித்தான் தொடங்கும் அந்த நிகழ்ச்சி. பிறகு ஒரு மனிதநடமாட்டமுள்ள பகுதிக்குச் சென்றுதப்பிப்பதற்கு உதவிபெறும்வரை பியர் செய்யும் வேலைகள்உண்ணும் உணவுகள்..  அட,ஒருமுறைதான் பாருங்களேன். வெறும் ஒரு சின்னக் கத்தியும்சிலவேளைகளில் பரசூட்டும் தவிர வேறு எந்தவித உபகரணமும் இல்லாமலேயே சாப்பிடுவதுவேட்டையாடுவதுகூடாரம் அமைப்பதுபடகு கட்டுவதுநெருப்பபை உண்டுபண்ணுவது.. என்று ஒவ்வொரு நாளும் ஒரு ஆங்கிலப்படம். 

தமிழ்முக்கியம்தாய்முக்கியம் என்று என்னதான்  வீரவசனங்கள் பேசினாலும்ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமானது உயிர்தான். அதைக் காப்பாற்றுவதற்காக அவன் என்னவும் செய்வான்எதையும் சாப்பிடுவான். அதற்கு அவனுக்குத் தேவைப்படுவது மனோதைரியமும் பயிற்சியும்கொஞ்சம் அறிவும். இந்த மூன்றையும் வளர்த்துக்கொள்ள இந்த நிழ்ச்சி உதவுகிறது. 

முதலில் சாப்பாடு. பாம்போபல்லியோஅல்லது பன்றிசூப்பிய ஏதாவதோசாப்பிட ஏற்ற (சாப்பிட ஏற்ற என்றால்நஞ்சாகாத எதுவும்) எதையும் சாப்பிடும் பக்குவம் வேண்டும். அதில் சிலவற்றை ஹோர்லிக்ஸ் போல அப்படியெ சாப்பிடலாம்சிலவற்றை வேகவைத்துத் தின்ன வேண்டும் தவளைநத்தைமட்டத்தேள்.. இவை எல்லாவற்றையும் சாப்பிடும் முறைகளையும்சமைக்கும் முறைகளையும் சொல்லித்தருகிறார். முதல் படியாக இவர் தவளைகளை உயிரோடு சாப்பிடுவதைப் பார்த்து நம் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள்லாம்.  சாப்பாடு மட்டும் சும்மா கிடைக்கப்போவதில்லை. அதை வேட்டையாட வேண்டும். அதுவும் எவ்வித ஆயுதங்களும் இல்லாமல். பொறி வைத்து காட்டுப்பன்றிகளைப் பிடிப்பதுகல்லெறிந்தே முயலை விழுததுவதுகூரிய தடி ஒன்றை வைத்துக்கொண்டு மீன்ஏன் சுறாவரைக்கும் பிடிப்பது எல்லாவற்றுக்கும் முறைகள் சொல்லித்தருகிறார். அவை எமக்குப் பிடிபடுகிறதோஇல்லையோஅந்த வேட்டையாடலின் சுவாரசியமே தனி. ஒருமுறை தனது பொறிக்குள் அகப்பட்ட காட்டுப்பன்றியொன்றை பாய்ந்து பிடித்து அதன் குரல்வளைக்குள் கத்தியைச் செருகினார். அதைல்லாம் மனிதர்களால் சாத்தியமே இல்லைஇது நிச்சயம் நாடகமாக்கப்பட்ட காட்சிதான் என்று விமர்சகர்கள் புலம்புமளவுக்கு இருந்ததுஅந்தச் சாகசவேலை.

45 நிமிடம் நடக்கும் அந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு நிமிடமுமே ஆச்சர்யம்தான்விறுவிறுப்புத்தான். அந்த விறுவிறுப்பத்தான் இந்த நிகழ்ச்சியை உலகளவில் அதிகம்பேரால் பார்க்கப்படும் முதல் 10 நிகழ்ச்சிகளுக்குள் ஒன்றாக ஆக்கியது. இதுவரை 7 ஸீஸன்களாக, 66 இடங்களில் உயிர்தப்பும் வழிககாட்டியையும், 10 விசேட  பகுதிகளையும் உள்ளடக்கி மார்ச் 10, 2006 முதல் நொவம்பர் 29, 2011 வரை டிஸ்கவரியில் ஒளிபரப்பானது. ஒப்பந்தக்காலம் முடிந்தும்அதற்கு இணையாக வேறொரு நிகழ்ச்சியை தயாரிக்க முடியாததால்பழைய நிகழ்ச்சிகளையே இன்றுவரை மீண்டும் ஒளிபரப்புகிறார்கள். அதைப்பார்க்கவே கூட்டம் அலைமோதுகிறது. நீங்களும் ஒருமுறை பார்த்துவிடுங்கள். முதல்முறை பார்ப்பதுமட்டும்தான் உங்கள் கையில். பிறகு அதுவே உங்களைதன்னைப் பார்க்குமாறு பார்த்துக்கொள்ளும்.

ஒரு மனிதனுக்கு இரண்டு வழிகளால் ஆபத்து வரலாம். ஒன்று பக்கத்தில் மனிதர்கள் இல்லாதபோதுமற்றது பக்கத்தில் இருக்கும் மனிதர்களாலேயே. பக்கத்தில் மனிதர்கள் இல்லாதபோது ஆபத்து வந்தால் என்ன செய்வது என்று இந்நிகழ்ச்சியில் சொல்லித்தருவதுபோலமனிதர்களால் ஆபத்து வந்தால் எவ்வாறு சமாளிப்பது என்பதையும் இவரே சொல்லித்தருகிறார் Worst Case Scenario நிகழ்ச்சியில். 26 பகுதிகள் கொண்ட அந்த நிகழ்ச்சிதுரதிர்ஷ்டவசமாகமுடிந்துவிட்டது.

Man vs Wild நிகழ்சியைப்பற்றி எதிர்வினையான அபிப்பிராயங்களும் இருக்கின்றன. நடித்துப் படமாக்குகிறார்கள்குழுவின் தவியோடதான் பியர் எல்லாவற்றையும் சாதிக்கிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. நீங்கள் எதற்கும் ஒருமுறை பாருங்களேன்நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

நீதுஜன் பாலசுப்பிரமணியம்

பியர் கிறில்ஸின் வலைதளம்: BearGrylls
ஃபேஸ்புக்க : facebook.com/man vs wild with bear grylls

கருத்துரையிடுக

0 கருத்துகள்