யாருடைய மனைவிக்கும் நடக்கவேகூடாத சம்பவம் /kim jong un wife rules

வட கொரியாவின் சர்வாதிகாரிதான் கிம் ஜொங்க் உன் என்பது எம் அனைவருக்குமே தெரிந்தவிடயம்தான் வடகொரியாபோன்ற சர்வாதிகார நாட்டில் நடக்கும் எந்த விடயங்களும் வெளி உலகத்துக்கு தெரிவதேயில்லை காரணம் அங்கிருக்கும் ஊடகங்கள்,சமூகவலைத்தளங்கள் என அனைத்துமே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அரசாங்கத்தின் நேரடிக்கண்காணிப்பிலேதான் இருக்கும் உலகின் மிகச்சிறந்த உளவுப்பிரிவுகளால்கூட அங்கு என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பதை கண்பானிப்பது கடினமானவிடயமாகத்தான் இருந்துகொண்டிருக்கின்றது
கிம் ஜொங்கைப்பற்றி அடிக்கடி செய்திகளில் நாம் கேட்டுக்கொண்டிருக்கின்றோம் ஆனால் எந்த மீடியாவெளிச்சமும் படாமல் அவருடன் இருக்கும் அவரது மனைவியான ரி சொல் ஜூ பற்றித்தான் நாம் இப்போது பார்க்கப்போகின்றோம்

சாதாரணமாக உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் திருமணத்தின் பின்னர் பெண்ணின் பெயரில் அவரது கணவரின் பெயர் இணைக்கப்படுகின்றது இந்தமாற்றம் ஒன்றுதான் திருமணமாகும் பெண்ணின் பெயரில் ஏற்படும் ஒரேயொருமாற்றமாக இருக்கும் ஆனால் கிம் ஜொங்கின் மனைவி ரி சொல் ஜூவின் உண்மையான பெயர் என்னவென்பது யாருக்குமே தெரியாது.வடகொரிய அதிபர் ஒரு பெண்ணைத்திருமணம் செய்துகொண்டால் அந்தப்பெண்ணின் பெயர் முழுவதுமாக மாற்றப்பட்டுவிடும்.


ரி சொல் ஜூ வின் கடந்தகாலம் எப்படி இருந்தது என்றவிடயமும் யாருக்குமே தெரியாது.ரி சொல் ஜூ ஸ்கூல் காலேஜில் படிக்கும்போது சிங்கராக இருந்திருக்கிறார்,விளையாட்டுப்போட்டிகளில் பங்குபற்றியிருக்கின்றார்,வடகொரியா நாட்டுவீரர்கள் வேறு நாடுகளுக்கு விளையாட்டுப்போட்டிகளுக்காகசெல்லும்போது சியர் கேளாகக்கூட இருந்திருக்கின்றார் இந்தவிடயங்களையெல்லாம் கூகிளில் இருந்து அழிப்பதற்கு பலத்தமுயற்சிகளைவடகொரிய அரசுசெய்திருக்கின்றது.அவரது பாடல்கள் வெளியிடப்பட்ட சீடிக்கள் அவரது புகைப்படங்கள் என அனைத்தும் கொரியமக்களிடமிருந்து பறிமுதல்செய்யப்பட்டன,ரி சொல் ஜூ இறுதியாக ஆகஸ்டா எனப்படும் இசைக்குழுவில் இணைந்திருந்தார் அங்கு அவர் பெர்போம்பண்ணியபோதுதான் கிம் ஜொங்க் அவரை முதன்முதலில் சந்தித்தார் என்று கூறப்படுகின்றது.காதல் மலர்ந்த உடனேயே கிம் அவரைத்திருமணம் செய்துகொண்டார் இத்தனைக்கும் ரி சொல் ஜூ பெரிய பாக்ரவுண்டில் இருந்துவந்தவரும் அல்ல
திருமணத்திற்குப்பின் ரி சொல் ஜூ வின் முன்னால் காதல்களைப்பற்றி பேசிய 9 ஆகஸ்டா குழுவினர் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கின்றார்கள்


பிரபலமான பெண்கள் திருமணத்திற்குப்பின் கர்ப்பமாவதைப்பற்றிய செய்திகளை உலகம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கும் அதுவும் அரசகுடும்பத்துப்பெண்களாகவோ அல்லது ஒரு நாட்டின் அதிபரின் மனைவியாகவோ இருந்தால் தம் நாட்டுத்தலைவரின் வாரிசை எதிர்பார்த்து நாட்டுமக்கள் காத்துக்கொண்டிருப்பார்கள் இவையெல்லாம் உலகின் ஏனைய நாடுகளுக்குபொருந்தலாம் ஆனால் வடகொரியாவுக்கு பொருந்தவே பொருந்தாது காரணம் வடகொரிய அதிபரின் மனைவி ரி சொல் ஜூ கர்ப்பமாக இருக்கின்றாரா இல்லையா என்பதை வெளிக்காட்ட அவருக்கு அனுமதியில்லை முதல் 2 மாதங்களுக்கு அதை மறைக்கும்வகையில் உடையணிவார் பின்னர் மீடியாவில் இருந்து மறைந்துபோவார் எங்கும் அவரைக்காணவேமுடியாது இப்படியான சந்தர்ப்பத்தில் கொரியமக்கள் 2 விதமானமுடிவுகளை எடுத்திருப்பார்கள் 1.அவர் கர்ப்பமாக இருக்கின்றார் 2 அவர் மரணமடைந்துவிட்டார் இது மாத்திரமல்ல கிம்மிற்கு எத்தனை பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்பதுகூட வெளி உலகத்திற்குத்தெரியாது கிம்மின் குடும்பத்தைச்சேர்ந்த பெண்கள் மிக மிக அரிதாகவே மீடியாவில் தோன்றியிருக்கின்றார்கள் நீங்கள் கூகிள் செய்துபார்த்தாலும் முன்னுக்குப்பின் முரனான பல தகவல்களை பல இணையத்தளங்கள் தெரிவிக்கும்.
ரி சொல் ஜூ ஆவது 3 4 தடவைகள் மீடியாவில் தோன்றியிருக்கின்றார் ஆனால் கிம்மின் தாயாரை ஒரே ஒருதடவைதான் வடகொரியமக்கள் பார்த்திருக்கின்றார்கள் அதுவும் ஒரு பிளாக் அண்ட் வைட் புகைப்படத்தில்தான் பார்த்திருக்கின்றார்கள்.

3 தலைமுறைகளாக வடகொரியாவை கிம்மின் குடும்பமே ஆட்சிசெய்துவருகின்றது ஆனால் அடுத்ததலைமுறையில் இருந்து ஒரு ஆணே வடகொரியாவின் தலைமை பதவியை  ஏற்கவேண்டுமென்பதுதான் சட்டம் எனவே ஆண்குழந்தை எந்த ஒரு தலைவருக்கும் அவசியமான ஒரு விடயமாகப்பார்க்கப்படுகின்றது.ரி சொல் ஜூ இற்கு ஆரம்பத்தில் 2


பெண்குழந்தைகள் பிறந்ததாம் இதனால் கிம்மிற்கும் ரி சொல் ஜூ விற்குமிடையில் பிளவு ஏற்பட ஆரம்பித்ததாம்பின்னர் 3 வதாகத்தான் ஒரு ஆண்குழந்தைபிறந்திருப்பதாக கூறிக்கொள்கின்றார்கள் கொரிய மக்கள்.
கொரியாவில் 2 குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது எனவே 3 வது குழந்தை நிச்சயம் ஆண்தான் என்று ஆணித்தரமாக கொரியமக்கள் நம்புகின்றார்கள்.அதோடு ரி சொல் ஜூ எப்போதும் தனியாக மீடியாவின் முன் தோன்றவே மாட்டார் அதுவும் அவர்களின் சட்டத்துக்கு விரோதமானது.மீடியா முன் தோன்றும்போது சிரித்துக்கொண்டு கைகாட்டிவிட்டு உள்ளே செல்லவேண்டும் இவளவுதான் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரம்

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்