"Manike Mage Hithe " yohani யின் மறுபக்கம்? தந்தை குற்றவாளியா?

 மனிகே மஹே ஹித்தே என்ற சிங்களப்பாடல் இலங்கைதாண்டி உலக அளவில் பிரபலமடைந்துவிட்டது.இதுவரை எந்த ஒரு சிங்களப்பாடலும் இந்த அளவுக்கு வைரல் ஆனதில்லை ஆனால் யொஹானியின் மனிகே பாடல்மட்டுமே அனைவரது காதுகளையும்சென்றடைந்திருக்கின்றது

Manike mage hithe


தற்போது 150 மில்லியன் பார்வையாளர்களைத்தாண்டி இந்தப்பாடல் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.யொஹானி 1993 ஆம் ஆண்டு பிறந்தவர்,விசாகாக்கல்லூரியில் தன் கல்வியைத்தொடர்ந்த யொஹானி அங்கே நீச்சல்வீரராகவும் மிளிரிந்திருக்கின்றார்,பாடசாலை முடிவடைந்ததும் மேலதிக கல்விக்காக லண்டன் சென்றிருந்த  யொஹானி அங்கு தன் இசைத்திறமையை வளர்த்துக்கொண்டார்.பாடல்களைப்பாடுதல்,இசையமைத்தல்,பாடல்களை எழுதுதல் என பலவற்றை செய்யக்கூடியவர் இவர் , 2016 பங்குனியில் வலைஒளித்தளம் ஒன்றை உருவாக்கிய இவர் அதில் தனது பாடல்களை வெளியிட ஆரம்பித்தார்.



லண்டலில் கல்வியைமுடித்தபின் உயர்கல்வியைக்கற்பதற்காக அவுஸ்டேலியாவிற்கு சென்றிருந்தார் யொஹானி அங்குதான் தன் இசைத்திறமையை மேலும்  வளர்த்துக்கொண்டார் இவர்,அங்கிருந்து பல காணொளிகளைப்பதிவேற்றிக்கொண்டிருந்தார் யொஹானி

கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்கள்வட்டம் வளர ஆரம்பித்தது சில மாதங்களில் மேடைகளிலும் தோன்றி பாட ஆரம்பித்தார் யொஹானி

இசைத்துறையில் ஆரம்பம் முதல் தற்போதுவரை தான் சந்தித்த நிராகரிப்புக்கள்,துன்பங்கள்,அவமானங்கள் என அனைத்தையும் ஒரு பாடலாக ஆயே என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார் யொஹானி இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகவரவேற்பைப்பெற்றிருந்தது.

இந்தப்பாடலைக்கேட்டுவிட்டு அமிதாபச்சன் தன் டுவிட்டரில் பழைய படத்தில் தனது நடனம் ஒன்றையும் செயார்செய்துவிட்டு இந்தப்பாடலையும் செயார் செய்திருந்தார் உடனே தீ பற்றிக்கொண்டது,இது அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றிருக்கின்றது ,சல்மான் கான் தொகுத்துவழங்கும் பிக்பாஸ்வரை யொஹானி சென்று திரும்பியிருக்கிறார் ஆனால் இலங்கைத்தமிழர்கள் மத்தியில் இவரின் தந்தை தொடர்பாக சலசலப்பும் காரசாரமான விவாதங்களும் எழ ஆரம்பித்திருக்கின்றது காரணம் இவரது தந்தை பிரசன்ன டி சில்வா இறுதி யுத்தத்தில் பங்குபற்றியவர் யுத்தக்குற்றவாளி என அடையாளங்காணப்பட்டவர் இதை கூறியதே முன்னால் இராணுவ மார்ஷல் சரத் பின்சேகாதான் இதனால் சமூக வலைத்தளத்தில் விவாதங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன.


மனிகே மஹே ஹித்தே பாடலின் தமிழ் வரிவடிவம்

இரவில் ஒன்றே ஒன்று

மனதில் சென்றதென தேடி

உன்னை தேடி


பறக்கும் பறவை ஒன்று

விரியும் மலர்கள் இன்று

போலி நீ என்தேவி


நீ இந்த இரவில் பறந்ததும்

நெஞ்சம் மறந்து சிரிப்பதும்

சுகுமாரி கதை தேடி

நான் உயிரை கொடுத்ததும்


நீ இந்த இரவில் பறந்ததும்

நெஞ்சம் மறந்து சிரிப்பதும்

சுகுமாரி கதை தேடி

நான் உயிரை கொடுத்ததும்


உன்னை போல பொண்ணுதான் இல்ல

பக்கத்துல நானும் மயங்கி மெல்ல

இப்போ நானும் என்னத்தை சொல்ல

சிலை போல வர அழகு பொம்மை



நீ இந்த இரவில் பறந்ததும்

நெஞ்சம் மறந்து சிரிப்பதும்

சுகுமாரி கதை தேடி

நான் உயிரை கொடுத்ததும்


நீ இந்த இரவில் பறந்ததும்

நெஞ்சம் மறந்து சிரிப்பதும்

சுகுமாரி கதை தேடி

நான் உயிரை கொடுத்ததும்


இனியென் விழிகளில் நீ

நிறையும் மனசிலும் நீ

ஏறி என் தேவி


பிரியாது இனி ஒருநாள்

அகலாது இனி ஒரு நாள்

தேவி என்னை தேவி


நீ இந்த இரவில் பறந்ததும்

நெஞ்சம் மறந்து சிரிப்பதும்

சுகுமாரி கதை தேடி

நான் உயிரை கொடுத்ததும்


நீ இந்த இரவில் பறந்ததும்

நெஞ்சம் மறந்து சிரிப்பதும்

சுகுமாரி கதை தேடி

நான் உயிரை கொடுத்ததும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்