நிலவில் காலடிவைத்தபோது உண்மையில் நடந்தது இதுதான்-moon landing

 



1969 july 16 உலகவரலாற்றின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்று 
அப்பலோ 2 விண்கலத்தில் விஞ்ஞானிகளான நீல் ஆம்ஸ்ரோங்க்,அல்ட்ரின்,மைக்கேல் கோலின்ஸ் ஆகியோர் நிலவுக்கு செல்வதற்காக புளோரிடாவின் கென்னடி விமான ஏவு தளத்தில் தயாராக இருந்தார்கள்.சிறிது நேரத்தில் விண்கலம் விண்ணைக்கிழித்துக்கொண்டு புறப்பட்டது சரியாக 4 நாட்களின் பின்னர் அதாவது 1969 july 20 அன்றுதான் அந்த சாதனை நிகழ்த்தப்பட்டது ஆம் சிறிய காலடித்தடம் ஆனால் மனித வரலாற்றின் மிகப்பெரிய பாய்ச்சல் என்ற கூற்றை நீலாம்ஸ்ரோங்க் கூறியிருந்தார். 

ரஷ்யாவிற்கும் அமேரிக்காவிற்குமிடையில் விண்வெளி தொடர்பாக பனிப்போர்  உச்சத்தில் இருந்த நேரம் அது.விண்வெளியை ஆதிக்கத்தில் கொண்டுவரும்போரில் ரஷ்யா தொடர்ச்சியாக கோல்போட்டுக்கொண்டிருந்தது.முதன் முதலில் ரஷ்யா விண்வெளிக்கு  லைக்கா என்ற நாயை வெற்றிகரமாக அனுப்பியதுடன் யூரீககாரினையும் அனுப்பி மனிதனை விண்வெளிக்கு அனுப்பிய நாடு என்ற பெருமையை பெற்றுக்கொண்டது இவற்றால் அமெரிக்கா தலைகுனிய ஆரம்பித்துவிட்டது என்றெண்ணிய அப்போதைய ஜனாதிபதி கென்னடி புரட்சிகரமான ஒரு பேச்சை பேசியிருந்தார் இன்னும் 10 ஆண்டிற்குள் அமெரிக்கா நிலவுக்கு மனிதனை அனுப்பும் என்பதுதான் அது.

அதுவரையில் அமெரிக்கவிண்வெளி ஆய்வு மையம் நிலவின் சுற்றுவட்டத்திற்கு மனிதர்களை அனுப்பி மீண்டும் பூமிக்கு திரும்புவதுதான் இலக்கு என்று முடிவுகட்டியிருக்க கென்னடியின் பேச்சால் வேறுவழியில்லை நிலவில் மனிதனை இறக்கிவிடவேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்திருந்தார்கள்
நிலவிற்கு அப்பலோ 11 ஐ அனுப்பும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதும் நிலவில் வீரர்களை விண்கலத்தோடு இறக்கிவிட்டு அப்படியே மீண்டும் பூமி திரும்பிவிடுவது என்ற முடிவில்தான் அனுப்பிவைக்கப்பட்டார்கள் ஆனால் ஆம்ஸ்ரோங் இறுதி நேரத்தில் திட்டத்தை மாற்றிவிட்டார்
முதன் முதலில்  நிலவுக்கு அனுப்பும் திட்டம் என்பது உண்மையில் ஒரு சூசைட் மிஸின் என்பதை உணர்ந்துதான் வீரர்கள் ஆயத்தமாகியிருந்தார்கள் விண்கலம் புறப்பட ஆயத்தமானபோது வீரர்களது ஹார்ட் பீட் எகிறியிருக்கவேண்டும் ஆனாலும் அதிசயிக்கத்தக்கவகையில் அவர்களது இதயத்துடிப்பு சாதாரண அளவிலேயே இருந்தது

அப்பலோ 11 மிஸின் தோல்வியடைந்தால் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் அவர்களது தியாகத்தை பாராட்டுவதற்குமாக ஜனாதிபதி நிக்ஸன் ஒரு பேச்சை தயாரித்துவைத்திருந்தார் ஏனென்றால் அப்பலோ 11 முழுமையாக வெற்றியடையும் என்று யாருமே நம்பியிருக்கவில்லை



விண்வெளியில் மனித உடலின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் சவால்காளை முகம்கொடுப்பதற்கு நாசா எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மேற்கொண்டிருக்கவில்லை
உடலில் எத்தகையமாற்றங்கள் ஏற்படும் என்ற எந்த முன்யோசனைகளையும் நாசாவால் எதிர்வுகூறமுடியாமல் இருந்தது ,எனவே விண்வெளிவீரர்கள் சிறு நீர்கழிக்கவோ மலம் போன்றவற்றை வெளியேற்றவோ பெரிதாக எந்த ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை
மலம் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் ஆண்டி டயரியல் மருந்துகளையே வீரர்களுக்கு நாசா வழங்கியிருந்தது


கருத்துரையிடுக

0 கருத்துகள்