பூமி சுத்துறது நின்னா இப்படிகூட நடக்குமா ?

நாம் வாழும் பூமியானது தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுகிறது என்பதும்இதனால் தான் இரவு பகல் மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்ஆனால் இந்த பூமி திடீரென சுற்றுவதை நிறுத்தினால் என்னவாகும் என்பது பற்றி என்றாவது கற்பனை செய்து பார்த்துள்ளீர்களாஒருவேளை அப்படி நடந்தல் என்னவாகும் என்பது பற்றி த்தான் பார்க்கப்போகின்றோம். பூமி சுற்றுவது சடுதியாக நிற்குமானால் நாம் உடனடியாக தூக்கி எறியப்படுவோம் பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மணிக்கு சுமார் 1670 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றுகிறது இவ்வாறு சுற்றும் பூமியானது திடீரென்று தனது சுழற்சியை நிறுத்தினால்பூமியில் நிலையாக பிணைக்கப்படாத அத்தனை உயிரனங்கள் மற்றும் பிற பொருட்கள் அத்தனையும் மணிக்கு சுமார் 1670 கிலோ மீட்டர் வேகத்தில் தூக்கி எறியப்படும்.



எப்படி இருக்கும்அதாவது ஒரு நிமிடத்திற்கு 28 கிலோ மீட்டர் வேகத்திலும்ஒரு வினாடிக்கு சுமார் அரை கிலோ மீட்டர் வேகத்திலும் நம்மை ஒரு பொருளின் மீது வீசி எறிந்தால் அதன் விளைவு எவ்வளவு மோசமானதாக இருக்கும் என சற்று யோசித்துப் பாருங்களேன்..! பெரிய சுனாமி..! கடல் நீரும் பூமியுடன் முழுமையாக பிணைக்கப்பட்டிருக்கவில்லை...! எனவே பூமி திடிரென தனது சுழற்சியை நிறுத்துவதால் உண்டாகும் விளைவானது ஒரு மிகப்பெரிய சுனாமியை ஏற்படுத்தும்இது சுமார் 1670 கிலோ மீட்டர் வேகத்தில் 28 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு மிகப்பெரிய தீவை கூட ஒரு நிமிடத்தில் கடலுக்குள் மூழ்க செய்துவிடும் அளவிற்கு வேகமாகவும்மிக பெரியதாகவும் இருக்கும்இதனால் நிலத்தில் வாழும் ஒரு உயிர் கூட மிஞ்ச முடியாது...! மிக பெரிய நாள்..! பூமி தன்னை தானே சுற்றுவதை நிறுத்திய போதிலும் சூரியனை சுற்றுவது தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும்எனவே வருடத்தின் முதல் ஆறு மாதங்கள் முற்றிலுமாக இருளிலும்அடுத்த ஆறு மாதங்கள் முற்றிலுமாக பகலாகவும் தான் இருக்கும்இதனால் ஒரு வருடத்தில் உள்ள 367 நாட்களும் ஒன்று சேர்ந்து, 8760 மணி நேரம் கொண்ட ஒரே ஒரு நாளாக தான் இருக்கும்மிகப்பெரிய அழிவு தொடந்து ஆறு மாதங்களாக சூரியனை நோக்கி இருக்கும் பகுதிகளில்வெப்பநிலை நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அதிகமான வெப்பநிலை இருக்கும்இதனால் தொடந்து ஆறு மாதங்கள் வெயிலில் இருக்கும் பகுதிகள் வெப்பநிலை அதிகரித்து வறண்ட பாலை வனமாகவும்தொடந்து ஆறு மாதங்கள் இருளில் இருக்கும் பகுதிகள் பனிப்பொழிவு அதிகரித்து பனிப் பிரசேதங்களாகவும் தான் இருக்கும்வினோதமான நிகழ்வு இந்த சூழ்நிலை மாற்றங்களை தாங்க முடியாமல் நுண்ணுயிரிகள் கூட முற்றிலுமாக அழிந்துவிடும்சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதற்கு பதிலாகமேற்கில் தோன்றி கிழக்கில் மறையும்அதுமட்டுமின்றி இந்த வினோதமான நிகழ்வானது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும்.மைய நீக்கவிசை இல்லாத காரணத்தினால் சூரியனை நோக்கிய பகுதியை நோக்கி சூரியனின் ஈர்ப்புவிசை காரணமாக கடல் நீர் சூரியனின் பக்கம் செல்லும் ஆனால் பாறைகளே உருகுமளவிற்கு காணப்படும் மிகப்பெரும் வெப்பம் காரணமாக கடல் நீர் முழுவதும் ஆவியாகி பூமி வறண்ட ஒரு பாறையாக மாற்றமடையும்.கடல் நீர் ஆவியாகியதும் மிக வறண்ட மிகப்பெரிய மலைகள் தோன்றும் இவையெல்லாம் கடலின் அடியில் மூழ்கியிருந்த பள்ளத்தாக்குகள்தான் மலைகளாக மாற்றமடையும்.வெப்பமான பகுதியில் அதிக காற்றுவீசும்
 திடிரென சுழற்சியை நிறுத்துவதினால் வழிமண்டலத்தில் ஏற்படும் மாற்றத்தினால் வீசும் காற்றின் வேகமானது ஒரு மிகப்பெரிய அணுகுண்டு வெடிப்பினை விட பல மடங்கு வலிமையானதாக இருக்கும்இதனால் மிகப்பெரிய கட்டிடங்கள் கூட இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போகும்முற்றிலும் புவியின் மத்தியபகுதி வட தென் பகுதிகளை சற்று பருமனாக காணப்படும் புவி மிகவேகமாக சுற்றுவதன் காரணமாக ஏற்படும் மைய நீக்கவிசையினாலேயே கடல் நீர் பூமியின் மத்திய ரேகைப்பகுதில் அதிகமாக சேர்ந்திருக்கின்றது.பூமி சுழல்வது நின்றுவிட்டால் மத்தியரேகையில் அதிக அளவில் காணப்படும் கடல் நீர் பூமியின் துருவப்பகுதியை நோக்கி கிலோமீட்டர் உயரமான சுனாமியலைகளாக சென்றடையும்.எதிரில் இருக்கும் அனைத்தும் துடைத்தெறியப்படும்

அழிந்துவிடும் பூமி தன்னை தானே சுற்றுவதை நிறுத்திய அடுத்த நொடியே, புவியின் காந்தப்புலம் பாதிப்படையும் இது இல்லாமலேயே போகலாம் ,புவிக்காந்தப்புலம் உருவாக்கம் தொடர்பாக இதுவரை எந்த ஒரு தீர்க்கமான முடிவுகளும் எட்டப்படவில்லை பூமியின் வெளியோடு ஒரு வேகத்திலும் பூமியின் மையப்பகுதி வேறு வேகத்துடனும் சுழல்வதாலேயே  காந்தப்புலம் உருவாவதாக நம்பப்படுகின்றது எனவே பூமி சுற்றுவது நின்றுவிட்டால் காந்தப்புலம் இல்லாமலேயே போய்விடலாம்
இதனால் சூரியனிடம் இருந்து வரும் புற ஊத கதிர்களினால் பூமியில் இருக்கும் மீத உயிர்களும் முற்றிலுமாக அழிந்துவிடும்...!
தாவரங்கள் அனைத்தும் அழிந்துவிடும் ஒளித்தொகுப்பு நடைபெறாது உயிர்களுக்கு உணவே இருக்காது,புவியின் காற்றுமண்டலம் பாதிப்படையும் எமக்கு கிடைக்கவேண்டிய ஆக்ஸிஜனின் அளவு மாற்றமடையும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.
 எனவே இந்த பூமியானது நமக்கு தெரிந்த இந்த நீர்நிலம்காற்று மட்டும் அல்லாமல்ஈர்ப்பு விசைகாந்த மண்டலம்பூமியின் சுழற்சி ஆகிவற்றை கொண்டு இயற்கையாகவே நம்மை பாதுகாத்து வருகிறது என்பதே உண்மை...!!
புவியின் சுழற்சி சடுதியாக நிறுத்தப்பட எந்த சாத்தியமும் இல்லை ஆனால் சுழற்சி வேண்டுமானால் படிப்படியாக நிகழலாம் ஆனால் இதற்கும் மில்லியன் கணக்கான வருடங்கள் எடுக்கும் எனவே யாரும் பயப்படத்தேவையில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்