ஆபத்து- இலங்கை மக்களுக்கு இது தொடர்ந்து நடக்கலாம்

என்னால் வெளிப்படையாக அனைத்துவிடயங்களையும் பேசமுடியாதுவிட்டாலும் உங்களுக்காக சில செய்திகள்

செய்தி 1)

பேராதனையில் 21 வயதான மாணவி ஒருவர் Ceftriaxone என்ற மருந்து ஏற்றப்பட்டபோது ஏற்பட்ட ஒவ்வாமையால் சிகிச்சைபலனின்றி இறந்தார். மருந்து மாறி ஏற்றப்பட்டுவிட்டது, தாதி தவறான மருந்தை ஏற்றிவிட்டார் என்ற வழமையான புராணங்களின் பின்னர் மருந்தால் ஏற்பட்ட ஒவ்வாமையென உறுதிப்படுத்தப்பட்டது.



செய்தி 2)

அண்டி பயோட்டிக்ஸ் அலேர்ஜியினால் இதுவரை 15 மரணங்கள் ஏற்பட்டிருந்தாலும் 2 மரணங்களே பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.



செய்தி 3)

பல நோயாளர்களுக்கு அண்டிபயோட்டிக்கால் ஒவ்வாமை ஏற்படுவது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தரமற்ற மருந்துகளால்தான் ஒவ்வாமை ஏற்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது, மருந்துகளின் தரத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


செய்தி 4)



செய்தி 5)

 தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம்குடும்பப்பெண்  ஒவ்வாமையால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணம்.  

இவருக்கு அண்டிபயோட்டிக்கால் ஒவ்வாமை ஏற்படவில்லை, சத்திக்கு வழங்கப்படும் மருந்தால் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கின்றது.

இந்த 5 செய்திகளாலும் உங்களுக்கு ஏதாவது விளங்குகின்றதா? எனக்கு எதுவும் விளங்கவில்லை



ஓருவருக்கு ஒவ்வாமை எதனாலும் ஏற்படலாம், வைத்தியசாலையில் வழங்கப்படும் மருந்துகளில் அண்டிபயோட்டிக் எனப்படும் மருந்துந்துக்குத்தான் ஒரு சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுவது வழக்கம், அப்படி ஒவ்வாமை ஏற்படும்போது அதற்குரிய வைத்தியத்தை உடனடியாக செய்வதன்மூலம் உயிரை பாதுகாத்துக்கொள்ளமுடியும். இவளவு நாட்களும் கதை இப்படித்தான் இருந்தது ஆனால் இப்போது அண்டிபயோட்டிக்கு மட்டுமல்ல சத்திக்கு வழங்கும் மருந்து வரை ஒவ்வாமை ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது.


Antibiotics ற்கு அலேர்ஜி வருவதை முன்கூட்டியே அறியமுடியுமா?

ஆம், பெனிசிலின் Penicillin போன்ற அண்டிபயோட்டிக்கை நோயாளி ஒருவருக்கு வழங்குவதற்கு முன்பாக அது நோயாளிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துமா என அறிவதற்காக ஒரு சோதனை செய்யப்படும் அதை Sensitive test என்று கூறுவார்கள்.

அண்டிபயோட்டிக்ஸ் மருந்துகள் பெருமளவில் கண்ணாடிப்போத்தல்களிலேயே வருகின்றன, இதை வயல் Vial என்று அழைப்பார்கள். இப்படி வயல்களில் அடைத்துவரும் மருந்து நோயாளிக்கு வழங்கப்படுவதற்கு முன் எப்படி தயாரிக்கப்படும் முறை கீழே காட்டப்பட்டிருக்கின்றது.






நோயாளிக்கு இந்த அண்டிபயோட்டிக் மருந்தை வழங்கமுன்பாக கரைக்கப்பட்ட அண்டிபயோட்டிக்கில் சிறிய அளவை மட்டும் எடுத்து அதை 10 மடங்கிற்கு ஐதாக்கி, ஐதாக்கப்பட்ட மருந்தை நோயாளியின் தோலில் ஏற்றுவார்கள்.


ஏற்றப்பட்டதும் வீங்கிப்போயிருக்கும் பகுதி பேனாவால் வட்டமிடப்பட்டு நேரம், திகதியிடப்படும், அடுத்த 20 நிமிடத்திற்குள் சாதாரணமாக இருக்கும் தோல் அடையாளமிடப்பட்ட கோட்டைத்தாண்டி சிவப்பு நிறமாகிச்சென்றால் அந்த நோயாளிக்கு குறிப்பிட்ட அண்டிபயோட்டிக்கிற்கு அலேர்ஜி என்பது உறுதிசெய்யப்படும்.
இந்தப்பரிசோதனை வழமையாக penicillin எனப்படும் அண்டிபயோட்டிக்கிற்கு மட்டும்தான் செய்யப்படுகிறது ஆனால் முதல்தடவை வழங்கப்படும்போது அனைத்து அண்டிபயோட்டிக் மருந்துகளுக்கும் இந்தப்பரிசோதனை செய்யப்படவேண்டும்.
அண்டிபயோட்டிக் மருந்துகளுக்கு மட்டும்தான் இந்தப்பரிசோதனைசெய்யப்படுகின்றது ஆனால் தற்போது எந்தமருந்துக்கு அலேர்ஜி வரும் என்பதை யாராலும் எதிர்வுகூறமுடியாத நிலையில் எதை வழங்குவதற்கு முன்பாகவும் இதை செய்யவேண்டுமா என்ற குழப்பத்தில்தான் அனைவரும் இருக்கின்றார்கள். காரணம் சத்திக்கு வழங்கப்படும் Antiemetic மருந்துகளுக்கே தற்போது ஒவ்வாமை வர ஆரம்பித்துள்ளது.

ஒவ்வாமை ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்ற முன்னைய பதிவின் லிங்க் இங்கே Click


கருத்துரையிடுக

0 கருத்துகள்